மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் 'ஏசி' | மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் 'ஏசி' இனி வேண்டாமே கோடை 'டென்ஷன்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்விசிறியிலே ஏற்படுத்தலாம் 'ஏசி' இனி வேண்டாமே கோடை 'டென்ஷன்'

Added : மார் 19, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 மின்விசிறி, ஏசி, கோடை

சிவகாசி:கோடை துவங்கும் கால கட்டத்தில் வெயில் மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும். இதில் இருந்து தப்பிக்க நாம் பல்வேறு முயற்சிகளை எடுப்போம்.

வீட்டில் 'ஏசி' மாட்டுவது, குளிர்சாதன பெட்டி வாங்கி வைப்பது என செலவினங்களை அதிகப்படுத்தும். ஒரு காலத்தில் ஊரெங்கும் மரங்கள் இருந்தன. இதனால் நாம் ஓரளவு வெயில் தாக்கத்தில் இருந்து தப்பித்து வந்தோம். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது.


மின் கட்டணம்


நகர் பகுதிகள் கான்கிரீட் வீடுகளாக மாறிவருகின்றன . இதனால் வீட்டில் கண்டிப்பாக 'ஏசி' இருந்தாகவேண்டும் என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். சந்தையில் இன்று 'ஏசி' வாங்க வேண்டுமென்றால் ரூ.சில ஆயிரங்கள் செலவழித்தே ஆகவேண்டும். 'ஏசி' பொருத்தியவுடன் தானாகவே மின் கட்டணம் அதிகரித்துவிடும். இதனாலே பலரும் 'ஏசி' யை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


மேஜை மின்விசிறி


இந்நிலையில் 'ஏசி'க்கான பணம் மற்றும் மின் கட்டணம் என இரண்டும் இன்றி வீட்டிலே 'ஏசி' வசதி ஏற்படுத்தலாம். இதற்கு மின்சாதன கருவிகளில் அதிக ஆர்வம் மற்றும் முயற்சி இருந்தால் போதும். இன்டெர்நெட் வாயிலாக கிடைக்கும் தகவல் மூலம் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியை மினி 'ஏசி' யாக மாற்ற முடியும். இதற்காக நமக்கு தேவைப்படும் உபகரணங்கள் காப்பர் கம்பிகள், மீன் வளர்ப்புக்கு துணை புரியும் ஆக்சிஜன் மோட்டார், பெரியளவிலான ஐஸ் கட்டிகள் மட்மே.


சுருள் வடிவில்


முதலில் மேஜை மின் விசிறியின் மேல் தரப்பு இரும்பு மூடியை வெளியில் எடுத்து காப்பர் கம்பிகளை வைத்து சுற்றிக் கொள்ள வேண்டும். நன்றாக இணைத்து சுருள் வடிவில் கட்டியப்பின், இணைக்கும் இரு கம்பிகளை மட்டும் அப்படியே விட்டு விட வேண்டும். அந்த கம்பியில் நாம் மீன் தொட்டியில் பயன்படுத்தும் ஆக்சிஜன் மோட்டாரின் பிளாஸ்டிக் குழாய்களை உள்ளே நுழைத்து இழுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.

அதன்பின் பெரியளவிலான ஐஸ்கட்டிகளை எடுத்து எடைக்கு தகுந்த பிளாஸ்டிக் பேக்கில் வைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மோட்டாரை அதற்குள் போட்டுவிட வேண்டும்.


காப்பர் கம்பி


அடுத்து பிளாஸ்டிக்பை நிரம்பும் அளவு தண்ணீர் விட, தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கும் படி இருத்தல் வேண்டும். பின் மோட்டாரை மீன் வளர்ப்பு தொட்டியில் இயக்குவது போல் மின் இணைப்பு கொடுத்து இயக்கினால் அதில் இருந்து வரும் குமிழ்கள், குழாய் வழியாக காப்பர்
கம்பிகளுக்கு சென்று மின்விசிறி வழியாக குளிர்ந்த காற்றினை வெளிவரச் செய்யும். இதுவே குறைந் த செலவில் வீட்டில் 'ஏசி' செய்யும் முறையாகும்.

சிவகாசி இன்ஜினியர் ரவிசங்கர் கூறுகையில், “இன்டர்நெட் வாயிலாக நமக்கு பல்வேறு தகவல் பெறுகிறோம். அத்தகவலை நாம் படித்து காற்றோடு பறக்கவிட்டு விடுவோம். யாரும் செய்முறை செய்வதில்லை.

குறைந்த செலவில் வீட்டில் இருக்கும் மேஜை மின்விசிறியில் 'ஏசி'செய்ய முடியும். இதை சாத்தியப்படுத்த முயற்சி மட்டும் இருந்தால் போதும். இதை செய்தால் இனி நீங்கள் வெயில் காலத்தில் 'ஏசி' தேடி அலைய வேண்டிய தேவையில்லை,” என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari -  ( Posted via: Dinamalar Android App )
19-மார்-201717:31:58 IST Report Abuse
Hari Is ice cube coming for free?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201700:10:42 IST Report Abuse
தமிழ்வேல் அதுவும் மின்சாரம் போலத்தான்....
Rate this:
Share this comment
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
19-மார்-201717:11:48 IST Report Abuse
Siva Subramaniam இந்த மாதிரியான அமைப்புகள் ஜலதோஷம் ஏற்பட மிகவும் உதவும். மிகவும் ஆபத்தான முறை. எந்தவிதமான கட்டுப்படும் இல்லாமல் நீர்த்துளிகளை சுவாசிப்பது நல்லதல்ல. தவிர்க்கப்படவேண்டியது.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201700:10:16 IST Report Abuse
தமிழ்வேல் இந்தியாவே ஈரப்பதம் காற்றில் அதிகம் உள்ள நாடு....
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-மார்-201714:18:11 IST Report Abuse
Darmavan இதில் ஒன்று கவனிக்கவேண்டும், நீரை குளிர்விக்க ஐஸ் தேவை. அந்த ஐஸ் இன்னொரு பிரிட்ஜ்ல் தயாரிக்கவேண்டும் அதன் தயாரிப்பு விளைவுகள் கேடுதான்.அதுவும் எபிசியானசி என்று பார்க்கும் போது ஐஸ் தயாரிப்பு மூலம் ஏற்படும் விளைவு அதிகம் . எனவே ஐஸ்கட்டி இல்லாத வேறு முறைதான் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
19-மார்-201709:47:22 IST Report Abuse
Darmavan இவருடைய மொபைல் என்னை வெளியிடலாமே.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-மார்-201709:37:42 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏசியில் உபயோகப்படுத்தும் வாயுவானது... உடல் நலத்திற்கு மட்டும் கேடு இல்லை... அதனால் புவி வெப்பமயம் ஆகிறது... மேலும் தீ விபத்திற்கு வழி வகை செய்கிறது...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201700:06:24 IST Report Abuse
தமிழ்வேல் தற்போது அந்த வாயு தடை செய்யப்பட்டுள்ளது....
Rate this:
Share this comment
Cancel
19-மார்-201707:32:58 IST Report Abuse
DamuCoimbatore காப்பர் கம்பி அல்ல காப்பர் குளாய் இதற்கு 6ல் இருந்து 10 mm விட்டமுள்ள தாமிர குழாய் சுமார் இரண்டிலிருந்து மூன்று மீட்டர் தேவைப்படும் பழைய கண்டம் செய்யப்பட்ட பிரிட்ஜின் கண்டென்சர் டூபைக்கூட பயன்படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
19-மார்-201706:16:52 IST Report Abuse
K,kittu.MA. நல்ல கண்டு பிடிப்பு பயன்படுத்தலாம்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மார்-201702:23:16 IST Report Abuse
தமிழ்வேல் இது நல்ல யுக்தி. நீர் குமிழிகளைமட்டும் செம்பு (காப்பர்) ட்யூப் (குழாய்) குள் அனுப்புவதற்கு பதில் வாளியில் இருக்கும் ஐஸ்சுடன் குளிர்ந்த நீரையே அதனுள் அனுப்பலாம். இதற்க்கு வாளிமுழுதும் நீர் ஊற்றி, காற்றாடி யைவிட கொஞ்சம் உயரமான இடத்தில் வாளி வைக்கப் பட வேண்டும். இதனால் மீன்தொட்டி மோட்டார் + அதற்க்கு மின்சாரம் தேவைப்படாது. ஆனால், செம்புக் குழாயின் மறுபக்கத்திலிருந்து வரும் நீரை அவ்வப்போது வாளியில் சேர்க்கவேண்டும். அல்லது மீன் தொட்டி மோட்டார் மூலம் தண்ணீரை மறுமுனையிலிருந்து மீண்டும் வாளியில் சேர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
mohan - Hyderabad ,இந்தியா
19-மார்-201712:54:46 IST Report Abuse
mohanஐஸ்க்கு செலவு செய்ய வேண்டுமே சுமார் 15 வருடங்களுக்கு முன் சென்னையில் ஐஸ் கட்டிகளை கொண்டு எஸ்ஹிபிஷன் ஸ்டால்லஸை ac செய்தவர் குமாரகிருஷ்ணன் ஆவர்....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201700:09:05 IST Report Abuse
தமிழ்வேல் ஐஸ் கட்டிதான் வேண்டும் என்றில்லை. குளிர்ந்த நீரே (பச்சைத் தண்ணீர்) போதுமானது. ஆனால், பலன் குறைவு அவ்வளவே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை