‛‛தினகரன் கூறுவது காமெடி'' கங்கை அமரன் பேட்டி | ‛‛தினகரன் கூறுவது காமெடி'' கங்கை அமரன் பேட்டி| Dinamalar

‛‛தினகரன் கூறுவது காமெடி'' கங்கை அமரன் பேட்டி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
‛‛தினகரன் கூறுவது காமெடி'' கங்கை அமரன் பேட்டி

சென்னை: ஆர்.கே., நகரில் அ.தி.மு.க., சசி அணி சார்பில் போட்டியிடும் தினகரன் வெற்றி பெறுவார் என கூறுவது காமெடியாக இருக்கிறது என ஆர்.கே., நகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே., நகர் இடைத்தேர்தலுக்கு பா.ஜ., கட்சியின் வேட்பாளராக இசையமைப்பாளர் கங்கை அமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது.

இதையடுத்து கங்கை அமரன் பா.ஜ., தலைமை அலுவலகம் சென்று மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜனை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து தேர்தல் பணி குறித்து நிர்வாகிகளுடனான ஆலோசனை கொருக்கு பேட்டையில் நடந்தது. அதில் கங்கை அமரன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த உடன் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கங்கை அமரன் கூறியதாவது :

‛‛ எந்த கட்சியிலும் நான் உறுப்பினராக இல்லை. எந்த கட்சியில் இணைய வேண்டும் என்று நினைத்தபோது, கலங்கம் இல்லாத ஒரே கட்சி பா.ஜ.க. தான். ஆகவே அதில் இணைந்துள்ளேன். இதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

இந்தியாவின் மேல் இருந்து கீழ் வரை படர்ந்து வந்து கொண்டு இருக்கிற பா.ஜ.க. தமிழகத்திலும் மேலெழுந்து உயரக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. மோடியின் கொள்கை தான் என்னை ஈர்த்தது. மக்கள் பற்றி சிந்திக்கக்கூடிய ஒரே கட்சி பா.ஜ.க. தான். சுய இழப்புக்காக நான் வரவில்லை. இந்த கட்சிக்காக என் முழு வாழ்க்கையையும் கொடுக்கிறேன். நான் வெற்றி பெற்றதும், இந்த தொகுதியை பா.ஜ.க. தத்தெடுத்து கொள்ளும். '' என கூறினார்


காமெடி


தொடர்ந்து நிருபர்கள் அ.தி.மு.க., சசி அணி வேட்பாளர் தினகரன் குறித்து கேள்வி எழுப்ப போது ‛‛ தினகரன் சொல்வதை பார்த்தால் காமெடியாக இருக்கிறது. அதை யாரும் சீரியஸாக எடுத்து கொள்ளவேண்டாம், அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என நினைக்கிறார்கள், மக்களுக்கு அது அப்பட்டமாக தெரிகிறது. மக்கள் ஏமாறும் காலம் இப்பொழுது இல்லை, மக்கள் விழிப்போடு வாக்களிப்பார்கள். '' என கூறினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (77)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நரி - Chennai,இந்தியா
19-மார்-201721:47:50 IST Report Abuse
நரி நீங்களும் தான் ரொம்ப காமெடியாக பேசுகிறீர்கள் .....ட்ராபிக் ராமசாமி இல்லாத இடத்தை நிரப்பி விடீர்கள் .......மோடியின் எந்த கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடித்தது ....... குஜராத் கலவரத்தில் ரயில் தீவைக்கப்பட்டு நிறைய பேரு உயிர் இழந்தார்களே....அந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா ????
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
19-மார்-201719:04:01 IST Report Abuse
Rajendra Bupathi சிறு துரும்பும் பல் குத்த உதவும்?
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
19-மார்-201716:39:59 IST Report Abuse
kuppuswamykesavan ஐயா இந்த தமிழ்நாட்டு மக்கள் கடந்த 50 வருடங்களாக பிராந்திய கட்சிகளின் பின்னாலேயே சென்று பழக்கப்பட்டு போனார்கள். அவர்களை தேசிய கட்சிகள் பின்னால் வரவழைப்பது என்பது எளிதான காரியமில்லை. அதை உணர்ந்து மறுதிட்டங்கள் அமைத்து செயல்படுத்தும் வரை இங்கு தேசிய கட்சிகள் சுயமாக வளரும் வாய்பே இல்லை எனலாம். இதைக்கொண்டே இந்த இடைத்தேர்தலில் தேசிய கட்சிகளின் வெற்றி பற்றி அறியலாம்.
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
19-மார்-201715:45:59 IST Report Abuse
நெல்லை மணி, உ பி மாநில வோட்டு எந்திரத்தை (எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை மலரும்) கொண்டு வந்தால் கங்கை ஜெயிக்கலாம். மோடிஜியிடம் கேட்டுப்பாருங்கள். அனுப்பிவைப்பார்.
Rate this:
Share this comment
Indian - salem,இந்தியா
19-மார்-201718:53:45 IST Report Abuse
Indianஅந்த வோட்டு இயந்திரம் பஞ்சாபில் வேலை செய்யாதா? கோவா வில் வேலை செய்யாதா ? மணிப்பூர் இல் வேலை செய்யாதா ?...
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
19-மார்-201719:18:51 IST Report Abuse
Kalyanaraman SDaniel, Texas, USA = Mayawati (UP) + Arvind Kejriwal (Delhi) + Mamata Banerjee (West Bengal) [டேனியல் அவர்கள் இம்மூவரும் கலந்து செய்த கலவை]...
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
19-மார்-201715:00:41 IST Report Abuse
Durai Ramamurthy நீங்க பண்ற காமெடியில மக்கள் ஸ்டாலினை மறந்திடப்போறாங்கப்பா...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-மார்-201714:32:23 IST Report Abuse
Malick Raja அண்ணாத்தே வெற்றி பெறுவேன் என்று சொன்னால் தினகரனை விட பெரிய காமெடி சேய்தது போலாகும்
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
19-மார்-201714:17:08 IST Report Abuse
N.Kaliraj சரிங்க பிரச்சார மேடைதோறும் ஒரு பாட்டாவது பாடிவிட்டுபோங்கள்..... திரும்பவும் அந்த மேடை ஏறும் பாக்கியம் உங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ....
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-மார்-201714:16:11 IST Report Abuse
PRABHU காஷ்மீரில் ஒரு இந்தியன் கொல்லப்பட்டபோது 10 பாகிஸ்தானியரின் தலையை எடுக்கவேண்டும் என்று சீறிய பிஜேபி , தமிழ்நாட்டு மீனவனை காக்க வரவில்லையே ..கண்டன அறிக்கை கூட விடவில்லையே....இதுதான் உங்கள் நாட்டு பற்றா.....அப்போ தமிழ்நாட்டை இந்தியாவாக நினைப்பதில்லையே....அப்போ எதுக்கு எங்கள் வரி உங்களுக்கு.....தமிழ்நாட்டு மீனவனின் உயிருக்காக போராடுகிறது தமிழ் தேசியம்......10 சிங்களரின் தலையே எடுக்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் நாங்கள் தேச விரோதிகளா....என்ன உங்கள் இந்திய பற்று....தேசிய பற்று என்றால் வடக்கு எல்லைக்கும் தெற்கு எல்லைக்கும் வேறுபடுமா....அல்லது ஒரு தேசிய இனத்தை அழிக்கவேண்டும் என்ற கனவா....
Rate this:
Share this comment
Cancel
RAJA - TRICHY,இந்தியா
19-மார்-201714:15:29 IST Report Abuse
RAJA பணம் பத்து செய்யும் மாபியாவுக்கு கோடியும் செய்யும்
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
19-மார்-201713:55:20 IST Report Abuse
A. Sivakumar. ஒரு லேட்டஸ்ட் இதழில் வெளியிட்ட தலையங்கத்தின் பெயர் அதீத நம்பிக்கையும், செருக்கும் வேண்டாமே. பிரதமரின் பாபுலாரிட்டியையும், பஞ்சாப் தவிர்த்த பாஜகவின் லேட்டஸ்ட் வெற்றிகளையும் வைத்து, தமிழகத்தைக் கணிக்காதீங்க. போன பாராளுமன்றத் தேர்தலில், நாடெங்கும் ஜெயித்த பாஜக, தமிழகத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்தது என்பதை மனதில் வைத்து, தீவிர களப்பணி செய்யுங்க. இல்லேன்னா, மக்கள் உங்களுக்கும் ஒரு திருவோட்டைத் தயாரா வைத்திருப்பாங்க. அதை ஏந்திக்கிட்டு ஊர்வலம் போற மாதிரி ஒரு கற்பனை மட்டும் செஞ்சு பாருங்க, அப்புறம் தீயா வேலை செய்ய ஆரம்பிச்சிடுவீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.