இரட்டை இலை சின்னம் எங்களுக்கே: தினகரன் பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே: தினகரன் பேட்டி

Added : மார் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: ''இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. இனிமேலும் எங்களிடம் தான் இருக்கும்,'' என, அ.தி.மு.க., சசி அணி துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறினார்.
திருவண்ணாமலையில், தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, அ.தி.மு.க., சசி அணி துணை பொதுச்செயலாளர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே., நகர் தேர்தல் அதிகாரி மாற்றத்தால், எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க., செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர், 90 சதவீதம் பேர் எங்களிடம் உள்ளனர். வரும், 22ல், தேர்தல் கமிஷன் விசாரணைக்கு அழைத்துள்ளது. அன்று இதுகுறித்து எடுத்து கூறுவோம். இரட்டை இலை சின்னம் தற்போது எங்களிடம்தான் உள்ளது. இனிமேலும் எங்களிடம் தான் இருக்கும். நான் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவேன். வரும், 22க்கு பின், பன்னீர்செல்வம் காணாமல் போய்விடுவார். ஆர்.கே., நகர் தொகுதியில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எந்த அளவிற்கு இளைஞர்கள் ஆதரவு அளித்தனரோ, அதே ஆதரவை எனக்கும் அளிப்பர். நான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவன் கிடையாது. இந்திய குடியுரிமை பெற்றவன். கடந்த, 1999, 2004, ஆகிய தேர்தலில் போட்டியிட்டவன். மேலும், ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்துள்ளேன். இதனால் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்பதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X