மதுரையில் சீமைக்கருவேலம்: ஐகோர்ட் நீதிபதி வேதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் சீமைக்கருவேலம்: ஐகோர்ட் நீதிபதி வேதனை

Added : மார் 19, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: ''மதுரையிலேயே சீமைக்கருவேல மரங்களை அகற்றாதது வேதனை அளிப்பதாக உள்ளது,'' என, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்திய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி செல்வம் தெரிவித்தார்.திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை நீர்த்தேக்கம், ராமராஜபுரம் ஓடை, அம்மையநாயக்கனுார் பேரூராட்சி ராஜதானிக்கோட்டை, அரண்மனைக்குளம், மூங்கில்குளம் பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது கலெக்டர் வினய் உடனிருந்தார்.நிலக்கோட்டையில் 'டாபே' டிராக்டர் நிறுவனம், தானாக முன்வந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றுகிறது. அங்கு ஆலோசனை நடத்திய பின் நீதிபதி செல்வம் கூறியதாவது: குடிநீர், நீர் ஆதாரத்தை அழிக்கும் மண் வளத்தை பாதிப்பவை சீமைக்கருவேல மரங்கள். அவற்றை அழிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. மழை வளம் பெருகவும், இவற்றை அழிப்பது அவசியம். சீமைக்கருவேல மரங்களை அழிக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மதுரை நகரிலேயே சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாதது வேதனை அளிக்கிறது. தன்னார்வ நிறுவனங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் மண் வளத்தை காப்பாற்றி குடிநீர் பெற முடியும்.இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X