இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இளையராஜா இசையமைத்த
பாடல்களை பாட மாட்டேன்:
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

'இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை' என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இளையராஜா, இசையமைத்த பாடல், பாட மாட்டேன், எஸ்.பி.பி., அறிவிப்பு

இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணியில் உருவான, சினிமா பாடல்களுக்கு, இன்றும் வரவேற்பு உள்ளது.

மகன் ஏற்பாடு


திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை, எஸ்.பி.பி., நடத்தி வருகிறார். அவரது மகன் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்நிலையில், 'என் இசையில் உருவான பாடலை, என் அனுமதியின்றி எப்படி பாடலாம்' என, இளையராஜா தரப்பிலிருந்து, எஸ்.பி.பி.,க்கு,

'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.பி.பி., தன், 'பேஸ்புக்' பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இரண்டு நாட்களுக்கு முன், இளையராஜாவின் வழக்கறிஞர், எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகி களுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காப்புரிமை மீறல்


அதில், 'இளையராஜாவிடம் முன் அனுமதி பெறா மல், அவரது இசைஅமைப்பில் உருவான பாடல் களை மேடைகளில்பாடினால், அது காப்புரிமை மீறல். உரிமை மீறலுக்கு பெருந் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும்.
சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. 'எஸ்.பி.பி., - 50' என்ற நிகழ்ச்சி, என் மகன் சரணால் தயாரிக்கப்பட்டது. 2016 ஆகஸ்டில், கனடாவில், டொராண்டா நகரில், இந்நிகழ்ச்சியை துவக்கினோம்.

தொடர்ந்து ரஷ்யா, மலேஷியா என, பல நாடு களுக்கு சென்றோம். இந்தியாவின்,பல நகரங்களி லும், இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, எந்த எதிர்ப்பும், இளையராஜா தரப்பில் இருந்து

Advertisement

வரவில்லை. அமெரிக்காவில் நடத்திய போது, எதிர்ப்பு வந்துள்ளது ஏன் என, புரிய வில்லை. இதுபோன்ற சட்டம் குறித்து, எனக்கு விபரம் தெரியாது. இருந்தாலும், சட்டத்தைமதிப்பது என் கடமை. இனி, மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடப் போவதில்லை. அதே வேளையில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இறைவன் அருளால், மற்ற இசையமைப்பாளர் களின் பாடல்களையும், அதிகம் பாடியுள்ளேன்; அவர்கள் ஆதரவு தருவர் என, நம்புகிறேன். இப்பிரச்னை தொடர்பாக, எந்த ஒரு கடுமை யான வாதங்களையும், கருத்துக்களையும் கூற வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். இது, கடவுளின் கட்டளை என்றால், அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.இளையராஜா - எஸ்.பி.பி., இடையே உருவாகி யுள்ள இந்தப் பிரச்னை, இசையுலக ரசிகர் களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

'தவறாக புரிந்து விட்டனர்'


இளையராஜாவின் ஆலோசகர் பிரதீப்குமார் வெளியிட்ட அறிக்கையில், 'எஸ்.பி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பியதை, மக்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை' என, தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sattanathan - Rijeka,செக் குடியரசு
21-மார்-201712:56:32 IST Report Abuse

sattanathanஎம் எஸ் வி மட்டும் அன்று முதன் முதலில் சேலத்தில் சினிமா பாடல் கச்சேரி நடத்தவில்லை என்றால் இன்று ஒரு மெல்லிசை குழுவும் கோலோச்சியிருக்காது. மேடை கச்சேரிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் எம் எஸ் வி எனவே எல்லா மெல்லிக்குழுவினரும், மேடை பாடகர்களும் அதற்க்கு காப்புரிமை தொகை தார்மீக ரீதியாக கொடுக்க வேண்டும். அமரர் எம் எஸ் வி அதை வாங்கவே மாட்டார் ஏனெனில் மற்றவர்கள் உயர்வில் மகிழ்ச்சி அடைந்தவர் உளம் திறந்து பாராட்டும் கண்ணியம் தெரிந்தவர். வானத்தில் மீதே பறந்தாலும் காக்கை கிளியை மாறாது...

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-மார்-201700:23:06 IST Report Abuse

நரிஎல்லாம் இன்பமயம் என்ற தமிழ் படம் 11 .12 .1981 இல் வெளி வந்தது ... அந்த படத்தில் "மாமன் வீடு மச்சி வீடு ...பரிசம் போட்டது குச்சி வீடு' என்ற மலேசியா வாசுதேவன் பாடிய பாடல் இடம் பெற்றிருக்கும், இசை அமைத்தவர் இளையராஜா ... இப்பாடல் CSI கிறிஸ்தவ தேவாலயங்களில் பாடப்படும் "கிறிஸ்தவ கீர்த்தனைகள்" லில் இடம் பெற்று இருக்கும் பாடலான "ஆனந்தமே ஜெயா ஜெயா...அகமகிழ்தனைவரும் பாடிடுவோம்" என்ற பாடலை காப்பி அடித்துள்ளார் .... ஆண்டவனின் அடி மடியிலேயே வைத்தவர் இளையராஜா

Rate this:
THIRUPPATHI - SINGAPORE,சிங்கப்பூர்
20-மார்-201721:12:56 IST Report Abuse

THIRUPPATHISo....Mr.Ilayaraja Sir not going to use Tamil Language anymore....is it.....BcZ he is not.......

Rate this:
THIRUPPATHI - SINGAPORE,சிங்கப்பூர்
20-மார்-201721:08:29 IST Report Abuse

THIRUPPATHIMy dear Bros,....Pls kindly apologise me....i am translation issues.....BY the By U guys should not use tamil letters when u r comments........ BcZ its not ur copyright,property and so On so..............May I am right..................pls kindly input ur thoughts

Rate this:
20-மார்-201720:37:31 IST Report Abuse

nesamanidanINDIAஇந்த செய்தி உண்மையெனில் கிராமங்களில் நடக்கும் ஆர்க்கஸ்ட்ரா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொருந்துமா ?

Rate this:
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
20-மார்-201719:57:01 IST Report Abuse

Mayilkumarபலவகையான மெட்டுக்களை வெல்வேறு பட காட்சிகளுக்கு மெல்லிசை மன்னர் அமைத்தது போல் வேறு இசையமைப்பாளர்கள் எவரும் அமைக்கவில்லை. இன்று ராயல்டி என்று பேசினால் அவர் மிலிட்டரி ட்ரம், டைட்டிலில் ஒலிக்கும் புல்லாங்குழல் இன்னும் பல இசைகளுக்கு அவர் சொந்தக்காரர். இளைய ராஜாவிலிருந்து இன்றுள்ள இசையமைப்பாளர் வரை ராயல்டி கட்டவேண்டும். எல்லோரும் பெயருக்கும் புகழுக்கும் அலைந்து வாங்கிக்கொண்டார்கள். அவரது புகழை அவரது இறுதி ஊர்வலத்தில் பார்க்க முடிந்தது. அவ்வளவு சாதித்திருந்தாலும் ஒன்றுமே சாதிக்காதவர் போல் எளிமையாக கற்றது கை மண்ணளவு என்ற வகையில்தான் கடைசி வரை வாழ்ந்தார். ஒரு தொலைக்காட்சி பெட்டியில் திரு எ வி எம் சரவணன் அவர்கள் திரு எம் எஸ் வி தனது சம்பளத்தை கூட ஒழுங்காக பேசி வாங்கா தெரியாதவர் என குறிப்பிட்டுருந்தார். இளையராஜா ஞானி என்ற பெயருக்குப்போல் நடந்தால் மதிப்பு கூடும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளதனைய உயர்வு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
20-மார்-201719:49:57 IST Report Abuse

அம்பி ஐயர்புத்தகம் எழுதினால் எழுதுபவர் ஒருவர்... அதை வெளியிடும் நிருவனம் ஒன்று.... புத்தகம் எழுதுபவர் அதை பப்ளிஷருக்கு மொத்தமாக ஒரு தொகையை வாங்கிக் கொண்டு விற்றால் அந்த நிறுவனத்துக்கே காப்புரிமை... அல்லது காப்பிரைட் படி ஒப்பந்தம் செய்திருந்தால் பப்ளிஷர் அல்லது நிறுவனம் விற்பனைத் தொகையாக எதுவும் தராது.... காப்பிரைட் சட்டத்தின் படி எத்தனை புத்தகம் விற்பனையாகிறதோ அதற்கேற்றாற்போல் பணம் கிடைக்கும்... ஆனால் இங்கு அப்படியல்லவே.... பாடலை எழுதுபவர் ஒருவர்.... இசையமைப்பவர் ஒருவர்.... இயக்குபவர் ஒருவர்.... அதற்குப் பணம் போடுபவர் ஒருவர்.... இப்படி இருக்கும் போது தனக்கு மட்டுமே காப்புரிமை உள்ளது என்று கூறுவது எப்படி உண்மையாகும்...?? அப்போ எழுதியவர்... நடித்தவர்.... பாடியவர்... இயக்குனர்.... தயாரிப்பாளர்.... இவர்களுக்கு உரிமை இல்லையா...?? எப்போது பணம் வாங்கிக் கொண்டு இசையமைக்கப்படுகிறதோ.... அப்போதே அது அந்தத் தயாரிப்பாளருக்குச் சொந்தமாகிவிடுகிறது.... அவர் மட்டுமே காப்புரிமை கொண்டாட முடியும்.... விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்....

Rate this:
Gnanam - Nagercoil,இந்தியா
20-மார்-201719:02:36 IST Report Abuse

Gnanamபாடவேண்டியவர்கள் பாடினால் தான் பாட்டிற்கும், இசைக்கும் மதிப்பு. இளையராஜாவின் போக்கு சரியல்ல. வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் இளையராஜாவின் இசை மங்கிவிடும்.

Rate this:
Kumar - Chennai,இந்தியா
20-மார்-201718:09:14 IST Report Abuse

Kumarஇந்த இளைய ராஜா ஆரம்பத்தில் இசைக்கருவிகளை சென்னை சாந்தோம் கம்யூனிகேஷன்ஸ் ரெக்கார்டிங் அறையில் வாசித்துவிட்டு கொடுக்கும் நூறு ரூபாய் தாளை குனிந்து பவ்யமாக வாங்கி போன நாட்களுமுண்டு. அவர் மனம் குனிந்து வாழ்பவர் தான். ஆனால் அவரது இசையை வைத்து பணம் மற்றவர்களை பார்க்கும்போது கண்டிப்பாக அவர் தலை நிமிர்ந்து பார்க்கத்தான் வேண்டும். அவரது அனுமதியில்லாமல் அவரது இசையை பணம் பண்ண உபயோகிப்பது தவறு. அதுபோல யாரோ எழுதிய பாடலை பயன்படுத்தி பணம் பண்ணுவதும் தவறு.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மார்-201717:29:34 IST Report Abuse

Balajiநான் இளையராஜா அவர்களின் தீவிர விசிறி..... ஆனாலும் எனக்கு அவரிடம் பிடிக்காத குணம், தான் தான் என்ற கர்வமும், என்னால் உருவாகாதது இசையே இல்லை என்றும் எண்ணமும் தான்....... இது தேவையில்லாம அவரது புகழை கெடுக்கிறது என்றே நான் சொல்வேன்...... நீண்ட நெடிய அனுபவத்தை பெற்றும் இன்னும் பக்குவமடையாமல் இருக்கிறாரே என்று நான் பல முறை நினைத்ததுண்டு...... புதிதாக வரும் இசையமைப்பாளர்களை ராஜா சார் எப்போதுமே நல்லவிதமான அறிவுரைகளை வழங்கியதில்லை....... மாறாக அவர்கள் போடுவதெல்லாம் இசையே இல்லை என்று தான் சொல்லிவந்துள்ளார்........ இவருக்கு முறைப்படி சங்கீதம் தெரியாது என்றும் MSV அவர்களை மானசீக குருவாக எண்ணித்தான் இசையை கற்றேன் என்று சொல்லிக்கொண்டவர், இவரை மானசீக குருவாக நினைத்து இசையமைக்க வந்தவர்களை வாழ்த்தாமல் போனது தான் மிகுந்த வேதனையான விஷயம்........... இங்கு இந்த பிரச்சனையில் கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கு பாடல்கள் ஹிட் ஆவதற்கும் ஆகாமல் போவதற்கும் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் கூட்டு முயற்சி தான் காரணம் என்று சொன்னாலும், இதற்கெல்லாம் காரணகர்த்தாவாக இருக்கும் இசையமைப்பாளருக்குத்தான் முக்கிய பொறுப்பிருக்கிறது...... ஏனெனில் அவர் கொடுக்கும் tune தேர்தெடுப்பது தயாரிப்பாளராக இருந்தாலும் அவர்கள் விரும்பும் விதத்தில் tune களை உருவாக்கி அதற்கு தேவையான பாடல் வரிகளை கவிஞர்களிடமிருந்து பெற்று இந்த பாடலுக்கு எந்தெந்த இசைக்கருவிகளை உபயோகிப்பது இந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவர்களைப்பாட வைத்து ரெகார்ட் செய்வது வரை அவர்களின் பங்கு தான் மிகவும் அதிகம்...... அதனால் இசையமைப்பாளர் தான் ஒரு பாடலின் வெற்றிக்கு சொந்தக்காரர்...........

Rate this:
மேலும் 114 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement