தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்? | தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தீபாவின் கணவர் பணத்துடன் ஓட்டம்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டிலிருந்து, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பணப்பெட்டியுடன் ஓட்டம் பிடித்ததாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

 தீபா கணவர், பணத்துடன் ஓட்டம்?

ஜெ., அண்ணன் மகள் தீபா, 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை'யை துவக்கினார். தீபாவும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கும், பேரவைக்கு தனித்தனியே நிர்வாகிகளை அறிவித்தனர். இது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், நம்பிக்கை இழந்த பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு தாவினர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக, தீபா அறிவித்தார். சமீபத்தில், ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திய, அவரின் கணவர் மாதவன்

பேட்ரிக், மனைவி துவக்கியுள்ள பேரவைக்கு மாற்றாக, தனிக்கட்சி துவக்கப்போவதாக தெரிவித்தார்.

இருப்பினும், 'கட்சியும், பேரவையும் இணைந்து செயல்படும். தீபாவும், நானும் ஒரே வீட்டில் வசிப்போம்' என்றார்.ஆனால், மாதவன் திடீரென பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து ஓட்டம் பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, தீபா பேரவை வட்டாரங்கள் கூறியதாவது:


தீபா பேரவை, பல இடங்களில் கலைக்கப்பட்டு விட்டது. பேரவையில் இருந்த, திருச்சி மற்றும்
அரியலுாரை சேர்ந்த முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வம் அணிக்கு தாவி விட்டனர். பேரவை நிர்வாகிகள் நியமனத்திற்காக, வசூலித்த பணம் தொடர்பாக, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பெட்டி ஒன்றுடன், மாதவன் பேட்ரிக் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதில், நிர்வாகிகளிடம் வசூலித்த பணம் மற்றும் ஆவணங்கள் இருந்ததாக தெரிகிறது.

தனிக்கட்சி துவங்குவது குறித்து, சென்னையில் நேற்று, மூன்று இடங்களில் ஆலோசனை நடத்த, மாதவன் பேட்ரிக் திட்டமிட்டிருந்தார். போலீஸ்

Advertisement

அனுமதி மறுத்ததால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. கணவரின் செயலால், தீபா கடும் அதிருப்தியில் உள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல், முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை. இவ்வாறு பேரவை வட்டாரங்கள் கூறின.

பின்வாங்க மாட்டேன்


இதற்கிடையில், தன் வீட்டிற்கு வந்த, தொண்டர்கள் முன் நேற்று தீபா பேசுகையில், ''நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதை பலர் தடுக்க முயற்சிக்கின்றனர். எத்தனை தடைகள் வந்தாலும் பின் வாங்க மாட்டேன்; நான் போட்டியிடுவது உறுதி; அனைவரும் ஆதரிக்க வேண்டும்,'' என்றார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-201720:57:33 IST Report Abuse

ரங்கன்என்னாது....பேரவை நிர்வாகிகள் பணத்தை வசூல் செய்து தீபாவிடம் கொடுத்து வைத்திருந்தாங்களா? அதை எடுத்துக் கொண்டு மாதவன் ஓடிவிட்டாரா? பாவம் ...அவர் கோவணத்தை பெட்டியில் எடுத்துக்கொண்டு போயிருப்பார்.... அதிமுக நிர்வாகிகளாவது...பணத்தைக் கொடுக்கறதாவது...

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-மார்-201718:00:19 IST Report Abuse

தமிழர்நீதி ஜெயா மாதிரி தான் இவருக்கும் குடும்பம் போட்டிகள் அமைந்திருக்கு . அதனால் இது தமிழர்க்கு , AIADMK தொண்டர்களுக்கு நல்லா பிடிக்கும் . ஆதலால் தீபா முதல்வர் ஆகும் வாய்ப்பு அதிகமா தெரியுது .

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
20-மார்-201720:13:11 IST Report Abuse

Sathish தீபா முதல்வரானால் உனக்கு இலவசமாக மூன்று வேளையும் சோறுபோடுவாரா?...

Rate this:
RamRV -  ( Posted via: Dinamalar Android App )
20-மார்-201717:23:36 IST Report Abuse

RamRVஇப்போது தீபா வீட்டில் உடனடியாக ஒரு இன்கம் டாக்ஸ் ரெய்டு தேவையென்று தோன்றுகிறது!

Rate this:
sudharshana - chennai,இந்தியா
20-மார்-201717:18:10 IST Report Abuse

sudharshanaதீபா விற்கு சசிகலா தன அத்தையிடம் இருந்து தன்னை பிரித்த கோபமே பிரதானமாக இருந்தது. தீபாவோ அவர் கணவரோ பணம் எல்லாம் எடுத்து கொண்டு ஓடும் அளவிற்கு நிச்சயமாக தாழ்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள் . தீபாவின் அனுபவம் இன்மையே காரணம் இப்பொழுதும் குடி முழுகி போகவில்லை தீபா பன்னீர்செல்வத்திடம் சரண் அடைந்தாள் அவரும் ஜெயலலிதா மேல் வைத்திருந்த அன்பின் , மரியாதையின் காரணமாக நிச்சயம் உதவி செய்வார். தீபா புரிந்து கொள்ளுதல் நலம். என்னை பொறுத்த வரையில் ஜெ போலவே தீபா எந்த ஆதரவும் இன்றி இருக்கிறார். ஆகவே எல்லாம் நல்லபடி முடிந்து தீபா தன கணவருடன் இணையவும், அரசியலிலும் ஒரு நல்ல இடம் பெறவும் வாழ்க்கையில் உயர்ந்து ஆண்டவருடைய அனுகிரஹத்துடன் வாழவும் , ஆண்டவரையே வேண்டுகிறேன்.

Rate this:
kandhan. - chennai,இந்தியா
20-மார்-201717:46:31 IST Report Abuse

kandhan.ஏண்டா தமிழ் நாடு என்ன ஆளுக்கு ஆள் கூறு போட ரொட்டியா நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் இவர் இவருக்கே இந்த தைரியம் இருந்தால் காலம் காலமாக கட்சியில் கொடி கட்டி பறக்கும் இந்த கூட்டத்திற்கு எவ்வளவு தைரியம் இருக்கும் தமிழ்நாடு கூத்தாடிகளின் கூடாரம் ஆகிவிட்டதையே காட்டுகிறது மக்கள்தான் விழித்து இந்த கூட்டத்தை ஒழிக்கவேண்டும் கந்தன் சென்னை...

Rate this:
Nallasivan - Chennai,இந்தியா
20-மார்-201717:51:44 IST Report Abuse

Nallasivanதயவு செய்து தீபாவையும் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தம் என்றால் கட்டாயம் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டுமா என்ன? அதுவும் முதலைவராக இப்பொழுதே ஆசைப்படலாமா? ஜெயலலிதா அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் என்ன அவமானங்கள் எத்தனை, அவர் ஒன்றும் நேரடியாக கோட்டைக்குச் சென்று விடவில்லை. உண்மையிலேயே நல்லவராக இருந்திருந்தால் OPS கு நேரடியாகச் சென்று ஆதரவு தெரிவித்து அவர் அணியில் சேர்ந்து கட்சி தொண்டு ஆற்றியிருந்தால் பரவாயில்லை. இவரெல்லாம் தமிழகத்திற்கு முதல்வராக ஆசைப்பட்டால் சசிகலாவுக்கு நேர்ந்ததுதான் இவருக்கும். இப்படி யார் வந்தாலும் வாழ வைத்து வாழ வைத்துத் தான் நம் தமிழகம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது. திருந்துங்கள் மேடம்....

Rate this:
Singaaram - Trichy,இந்தியா
20-மார்-201718:04:02 IST Report Abuse

Singaaramஜெயாவே ஒரு ஊழல் திருடி , வந்துட்டான் யோக்கியன் மாதிரி பேச...

Rate this:
Basic Instinct - Coimbatore,இந்தியா
21-மார்-201700:10:31 IST Report Abuse

Basic Instinctஊழல் என்றால் என்ன? சொத்து குவிப்பு என்றால் என்ன? சொத்து குவிப்பு என்பது மலைபோல் கூவிப்பதா ? அல்லது கை அளவு கூவிப்பதா? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் 100 சவரன் நகையை காலை துறையில் உள்ள ஒருவர் வாங்கி இருந்தால் (குறிப்பு: கலை துறையில் உள்ளவர்கள் ஆபரணங்கள், உடைக்கல், மற்ற அலங்கார பொருள்கள் வாங்குவது உலகளாவிய நடைமுறையில் உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே) andraya ஒரு சவரன் மதிப்பு ஆயிரம் ருபாய் என்றால், indru அதன் மதிப்பு இருபது ஐந்தாயிரம். நூறு சவரன் பணம் சொத்து குவிப்பு ஆகுமா? அல்லது ஊழல் திருடி ஆகுமா? அல்லது அதைபோல் நகை வைத்து இருப்பவர்களை ஊழல் வாதி என்று அழைப்பதா? அல்லது சொத்து குவிப்பு செய்து உள்ளார்கள் என்று அழைப்பதா? ....அதன் படி பார்த்தால் இந்திய மக்கள் 50 % நிலைமை என்னவாகவும்?...

Rate this:
kumar - chennai,இந்தியா
20-மார்-201716:59:32 IST Report Abuse

kumarஆனா ஊனா எல்லாரும் போய் அம்மா சமாதியில் போய்உட்காந்துக்குறாங்க... முடியலடா டே...இந்தா ஆளுக்கும் அவங்களுக்கு என்ன சம்பந்தம்... உயிரோட இருக்கும்போது ஒரு தடவையாவது போய் பாத்துருக்காரா....ஏன்டா அரசியல இப்படி நாறடிக்கிறீங்க.. போய் தொலைங்கடா எங்கயாச்சும்... இருக்குற கட்சி போறாதுன்னு இவரு வேற புது கட்சி ஆரம்பிக்கிறாராம்... யாரு கேட்டா..

Rate this:
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
20-மார்-201716:14:30 IST Report Abuse

மு. தணிகாசலம் இப்படிப்பட்ட ஈனபுருஷனால், அரசியல் வாழ்க்கையில் தீபா எந்த தூரத்தையும் கடக்க முடியாமல் போய்விட்டது.இவ்வளவு நாளும், குண்டுசட்டிக்குக்குள் குதிரை ஓட்டினார் தீபா. அரசியல் வாழ்க்கை எப்படியோ தொலைந்து போனால் போகட்டும். இல்லற வாழ்க்கையில் வெற்றியடையுங்கள் தீபா.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மார்-201716:14:29 IST Report Abuse

Endrum Indianநானும் எவ்வளுவு நாள் தான் லம்பா கிடைக்கும், லம்பா கிடைக்கும் என்று காத்திருப்பது? பாத்தா தீபா கிடைக்கிற பணத்தை பேரவையில் போட்டால் நமக்கு எங்கே பணம் கிடைக்கும், ஆகவே நான் அந்த பணப்பெட்டியுடன் ஓட்டம் அவ்வளுவு தானே.

Rate this:
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-மார்-201715:41:34 IST Report Abuse

Nakkal Nadhamuniஅது எப்படி ஒழுக்கம் இல்லாதவன், கொள்ளை அடிக்கறவங்களே தமிழ் நட்டு அரசியலுக்கு வர துடிக்கறாங்கன்னு தெரியல... 40 வருஷ திராவிட கட்சிகளின் பாரம்பரியம் இந்த மாதிரி ஆட்களைத்தான் சுண்டி இழுக்குது... மக்கள் என்னிக்குத்தான் நல்ல தலைவர்கள் பின்னாடி போகப்போறாங்களோ தெரியல.. இந்தம்மா முதல்லயே சின்னம்மா கொடுத்த பணத்தை வாங்கிகிட்டு போயிருக்கலாம்... எல்லாம் பேராசை...

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
20-மார்-201715:24:42 IST Report Abuse

நக்கீரன்தீபாவுக்கும் பாடம் கற்பிக்க தமிழக மக்கள் தயார்.

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மார்-201715:21:05 IST Report Abuse

Pasupathi Subbian"பேரவை நிர்வாகிகள் நியமனத்திற்காக, வசூலித்த பணம்" இன்னமும் பல முட்டாள்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் போலும், ஆரம்பிக்கும் முன்னமே பணம் கொடுத்து இடம் வாங்க நினைத்துள்ளார் என்பது நிரூபிக்கிறது.

Rate this:
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement