தடையை மீறி வேட்பாளரான தினகரன்:சசிகலாவை ஏமாற்றினாரா? | தடையை மீறி வேட்பாளரான தினகரன்: சசிகலாவை ஏமாற்றினாரா? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடையை மீறி வேட்பாளரான
தினகரன்:சசிகலாவை ஏமாற்றினாரா?

அ.தி.மு.க., துணைப் பொதுச்செயலராக, தினகரன் அறிவிக்கப்பட்ட நாள் துவங்கி, அவருக்கும், சசிகலாவின் மற்ற உறவினர் களுக்குமான மோதல், துாள் பறந்து வருகிறது. சசிகலா தடையை மீறி, ஆர்.கே.நகர் வேட்பாளராக, தினகரன் களமிறங்கியதும் அம்பலமாகியுள்ளது.

 தடையை மீறி, வேட்பாளரான தினகரன்,:சசிகலாவை ஏமாற்றினாரா?

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, 'ரிமோட்' மூலம், கட்சியை வழி நடத்துகிறார். அவருடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அண்ணி இளவரசியின் மகன் விவேக் மூலமாக, தினகரனுக்கான சசிகலாவின் உத்தரவுகள் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்காக, பெங்களூரிலேயே தனி வீடு பிடித்து, தங்கி இருக்கிறார் விவேக். சிறையில் அடிக்கடி சசிகலாவை சந்திப்பது இவர் மட்டுமே. இந் நிலையில், தேர்தல் ஆணைய ,

விளக்கத்துக்காக, பெங்களூரு சிறையில் சசிகலாவை கடந்த வாரம் தினகரன் சந்தித்தார். அப்போது, 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது' என, ஆலோசிக்கப்பட்டது.

'குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட்டால், அதிருப்தி பெரிதாகி தோல்வி தான் ஏற்படும்; அதே நேரம், முதல்வராக இருக்கும்பழனிசாமியும் அதிருப்தி யாவார்' என்ற சசிகலா, எம்.ஜி.ஆரின் உறவினர்கள் யாரையாவது நிறுத்தலாம் என, யோசனை கூறியுள்ளார்.

அவரிடம் சரியென தலையாட்டி விட்டு வந்த தினகரன், சென்னை வந்ததும், மாற்று முடிவை எடுத்து விட்டார். கட்சியின் ஆட்சி மன்றக் குழுவை கூட்டி, தன்னை தானே வேட்பாளராக அறிவித்துள்ளார்.

ஆனால், கட்சியின் பொதுச்செயலர் சசிகலாவிடம், கலந்து ஆலோசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பை, மன்னார்குடி குடும்ப உறவினர்கள் நம்பவில்லை. சசிகலாவை சிறையில் அடிக்கடி சந்திக்கும் விவேக்கை விசாரித்தால், தினகரனின் நாடகம் அம்பலமாகும் என்கின்றனர்.

சசிகலாவின் கணவர் நடராஜன், திவாகரன், அண்ணன் மகனான வினோத் மகாதேவன் உள்ளிட் டோர், தினகரனின் திருவிளை யாடலை, தற்போது கட்சி நிர்வாகிகளிடம் அம்பலபடுத்தி வருகின்றனர். தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக

Advertisement

தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டது முதல், ஆர்.கே.நகர் வேட்பாளர் வரை, பொதுச்செயலர், கட்சி நிர்வாகிகள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், தினகரன் தன்னிச்சையாகச் செயல்படுவ தாக, சீனியர் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

வேட்பாளராக போட்டியிடுபவர்களுக்கு, 'பார்ம் -பி'-யில் கட்சியின் பொதுச்செயலர் கையெழுத்து போட வேண்டும். தினகரன் போட்டியிட உண்மையிலேயே தடை விதித் திருந்தால், 'பார்ம் - பி'-யில், சசிகலா கையெழுத்து போட மாட்டார் என, கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், தினகரனுக்கு பதிலாக, மாற்று வேட்பாளரை அறிவிக்கவும் சசிகலா தயாராகி விட்டதாகவும், மன்னார்குடி குடும்ப உறவினர்கள் சிலர் கூறுகின்றனர்.
-- நமது நிருபர் --


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

நேசமனிதன்இந்தியாஇந்த செய்தி உண்மை எனில் தான் இன்னொருவர்க்கு செய்த அதே துரோகசதி தன்பக்கம் திரும்பியுள்ளது என்பதாகும் .எது எப்படியோ வெல்லட்டும் ஜனநாயகம்

Rate this:

நேசமனிதன்இந்தியாஇந்த செய்தி உண்மை எனில் தான் இன்னொருவர்க்கு செய்த அதே துரோகசதி தன்பக்கம் திரும்பியுள்ளது என்பதாகும் .எது எப்படியோ வெல்லட்டும் ஜனநாயகம்

Rate this:
karthi - MADURAI,இந்தியா
20-மார்-201715:34:01 IST Report Abuse

karthiநான் அப்பயே நினைச்சேன். என்னடா எங்க சித்தப்பு - க்கு சீட் இல்லைனு?.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மார்-201713:29:14 IST Report Abuse

Balajiதன் கைக்குள் கட்சியை கொண்டுவர முயற்சித்த சதிகாரிக்கே, அவர் இல்லாத தருணத்தை பயன்படுத்தி அவரது கட்டுப்பாட்டுக்கு கட்சியை வளைக்க நினைத்து சதிகாரிக்கு ஆப்பு வைக்கிறார் தினகரன்............ ஆக கட்சியில் தற்போது யார் தலைமைக்கு வர வேண்டும் என்ற போட்டிதான் இருக்கிறது மன்னார்குடி மாபியாக்களிடம்....... இது எதற்காக என்று அனைவரும் அறிந்ததுதான்....... ஆனால் இவர்களுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை மறந்துவிட்டு தலைமைக்கு வந்துவிட நினைப்பது தான் வேடிக்கையாக உள்ளது.......

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மார்-201717:39:44 IST Report Abuse

இந்தியன் kumarசதி கலாவுக்கே சதியா???...

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-மார்-201700:30:55 IST Report Abuse

நரிதினகரன் ஒரு சதிகலா வல்லவன்...

Rate this:
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
20-மார்-201713:23:47 IST Report Abuse

நெல்லை மணி,மொத்தத்தில் MGR கஷ்டப்பட்டு ஆரம்பித்த ADMK கட்சி இன்று திமுக தேதிமுக பாமக போல் ஒரு தனிப்பட்ட குடும்ப கட்சியாக மாறிவிட்டது. எல்லாம் தமிழ்நாட்டின் தலை விதி. சகாயம் போன்ற நல்லவர்கள் கட்சி ஆரம்பப்பதில்லை. அப்படியே ஆரம்பித்தாலும் மக்கள் வோட்டு போடுவதில்லை. மக்கள் மதுவுக்கும் பிரியாணிக்கும் பணத்துக்கும் தங்கள் வோட்டை போடுவதினால் இனி நல்லவர்கள் யாரும் தமிழக அரசியலுக்கு வரப்போவதில்லை. ரஜினி சொன்னதுபோல் தமிழ்நாட்டை இனி யாரும் காப்பாற்ற முடியாது.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-மார்-201717:40:47 IST Report Abuse

இந்தியன் kumarமாற்றம் ஒன்றுதான் எப்போதும் மாறாதது...

Rate this:
Alaghu - chennai,இந்தியா
20-மார்-201711:33:26 IST Report Abuse

AlaghuAPN shanmugam how Dinakaran able to give cash to voter

Rate this:
Larson - Nagercoil,இந்தியா
20-மார்-201711:23:36 IST Report Abuse

Larsonஏதோ உத்தம தலைவி சசிகலா உத்தரவை மீறி என்று பெரிய பில்டப்பு ஒன்றும் குடுக்க தேவை இல்லை. இவர்களின் கூட்டு சதித்திட்டம் என்று வேண்டுமானால் எழுதுங்கள். சசிகலா பேச்சால், சதித்திட்டத்தால் இந்த தமிழகம் என்றைக்கும் இருண்டு விடாது....

Rate this:
Ganesan - Bangalore,இந்தியா
20-மார்-201711:08:48 IST Report Abuse

Ganesanஇந்த பிராடு தீயகரனை பார்த்தாலே வாந்தி வாந்தியா வருது.

Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
20-மார்-201710:53:20 IST Report Abuse

R Sanjayசாணிகலா தினகரன் இதுங்கெல்லாம் ஒரு மனுஷ ஜென்மங்கள் இதுங்களுக்கெல்லாம் ஒரு நியூஸ்.

Rate this:
christ - chennai,இந்தியா
20-மார்-201710:51:06 IST Report Abuse

christஅவளே இவ ஏமாத்தினா , இவளே இவன் ஏமாத்துறான்

Rate this:
மேலும் 31 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement