'பன்னீர் சொத்து குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன்' | 'பன்னீர் சொத்து குறித்து விசாரிக்க விரைவில் விசாரணை கமிஷன்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'பன்னீர் சொத்து குறித்து விசாரிக்க
விரைவில் விசாரணை கமிஷன்'

திருவண்ணாமலை:''பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு குறித்து விசாரிக்க, விரைவில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக
அறிவிக்கப்பட்டுள்ள தினகரன் பேசினார்.

பன்னீர் சொத்து, விசாரிக்க, விரைவில், விசாரணை கமிஷன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 69வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, திருவண்ணா மலையில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், தினகரன் பேசியதாவது: பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த நாட்களில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, எதுவும் கூறாமல் இருந்தார்.

ஆனால், அவரிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்த, சில நாட்களில், ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.சி.பி.ஐ., விசாரணை குறித்து எங்களுக்கு கவலையில்லை. மடியில் கனமில்லை; அதனால் எங்களுக்கு பயமில்லை.
சி.பி.ஐ., விசாரணை நடத்தினால், முதலில் விசாரிக்கப்பட வேண்டியவர் பன்னீர்செல்வம் தான். பெரியகுளத்தில் சாதாரண ஆளாக இருந்த பன்னீர் செல்வம், தற்போது பிரதமரை சந்திக்க, விமானத்தில் டில்லி சென்று வருகிறார்.

Advertisement


அவரது மகன்கள், உறவினர்கள் அடிக்கடி வெளிநாடு சென்று வருகின்றனர். பன்னீர் செல்வத்தின் சொத்து மதிப்பு, பல மடங்கு உயர் ந்து உள்ளது. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு குறித்து விசாரிக்க, விரைவில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oru Indiyan - Chennai,இந்தியா
20-மார்-201720:59:30 IST Report Abuse

Oru Indiyanகாமராஜர் சொன்ன மாதிரி எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. அத்தனை பேரையும் கல்லால் அடித்தே கொல்ல வேண்டும்..

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
20-மார்-201718:58:55 IST Report Abuse

John Shiva   U.Kபன்னீர்செல்வம் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து செய்த ஊழல் வெளிவரவேண்டும் .கடந்த தேர்தலில் அம்மா பன்னீரை வெளியில் வைத்திருந்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார் .இப்ப பன்னீர் குடும்பம் ஊழல் செய்து லட்சாதிபதியாய் வந்துட்டாங்க

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
20-மார்-201720:20:51 IST Report Abuse

தமிழ்வேல் உண்மை, அதோடு தினகரனை விரட்டியதும் ஒரு காரணம்....

Rate this:
Janarthanan - Al Khor,கத்தார்
20-மார்-201717:32:07 IST Report Abuse

Janarthananஎன்னையா நடக்கது இந்த தமிழ்நாட்டில , இவன் அந்த டீம் அவளுவு கொள்ளை அடிச்சியிருக்காங்க சொல்லற்பல, அவரு இவங்க டீம் கொள்ளை அடிச்சியிருக்காங்க சொல்லுறாரு , இப்ப என்னதான் சொல்ல வரீங்க , எங்களை மிக சிறந்த கொள்ளை கூட்டத்தை தேர்வு செய்யும்மார் கேக்கறீங்களா ??? அந்தோ பரிதாபம் நம்மது மக்களின் நிலை , இத்தனை கோடி மக்களிலிருந்து ஒரு தன்னலம் அற்ற அரசியல் தலைவர் கிடைப்பது எட்டா கனியாகவே இருக்கிறது ? இன்னும் எத்தன்னை காலம் ஆகும் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது

Rate this:
20-மார்-201719:12:54 IST Report Abuse

ரெமிஜியஸ்முதலில் திவாகரனை பல்வேறு விஷயங்களில் அவர் வஞ்சக காரியங்கள் செய்து சொத்து சேர்த்த விஷயமாக விசாரணை நடத்த வேண்டும். அப்போ தெரியும் திவாகரன் யோக்கியதை....

Rate this:
ravi - chennai,இந்தியா
20-மார்-201717:25:30 IST Report Abuse

raviதினகரனுக்கு பேச யோக்கியதை இருக்கிறதா

Rate this:
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
20-மார்-201716:26:59 IST Report Abuse

தறுதலைஜி கண்டிப்பாக விரைவில் சுப்ரமணியசாமி இந்த கேஸை போடுவார், ஏனென்றால் ஓ பி எஸ் சம்பந்தப்பட்டவைகள் எல்லாம் சகாயம் க்ரானைட் விசாரணையிலும் அன்புநாதன் சேகர் ரெட்டி கேஸிலும் பிடிபட்ட ஆதாரங்கள் அரசு தஸ்தாவேஜுகளாகிவிட்டன. ஆகவே அதை கொண்டு அவர் கண்ணில் விரல் விட்டு நீதிமன்றம் மூலம் ஆட்டுவார்கள் பின்பலமாக இந்த சசி குரூப் மேலும் ஆதாரங்களை அள்ளி கொடுக்கும். திருடன் என்றுமே போலீஸ் வேஷம் போட சமுதாயம் ஒத்துழைக்காது.

Rate this:
20-மார்-201715:35:09 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இந்த போண்டாவின் ஆட்டம் இன்னும் ஒரு நாள் தான். நாளை மறுநாள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வேண்டி இருக்கும்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
20-மார்-201715:04:50 IST Report Abuse

Balajiபன்னீர் ஒன்றும் உத்தமர் என்று சொல்வதற்கில்லை, என்றாலும் அவரது சொத்து மதிப்பு கண்டறிய விசாரணைக்கமிஷன் அமைக்கப்படும் என்று இவரால் எப்படி சொல்ல முடியும்...... இவர் என்ன கட்சியின் தலைமைக்கு வந்தாலே முதல்வராக ஆனதாக நினைத்துக்கொண்டு இருக்கிறாரா???? விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று நீதிமன்றத்தால் ஏய்ப்பு செய்ததாக அபராதம் விதிக்கப்பட்ட நபர்கள் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா என்று சற்று யோசித்திருக்க வேண்டாமா????? பன்னீர் அவர்களை பயமுறுத்த சொல்லப்பட்டதாக இருந்தாலும், நீதிமன்றம் நம்மை குட்டியிருக்கிறதே, நாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லையே, எப்படி நம்மால் விசாரணை கமிஷன் அமைப்பதைப்பற்றியெல்லாம் பேசமுடியும் என்றெல்லாம் யோசித்திருக்க வேண்டாமா???? இவர்களைப்பற்றி மக்களுக்கு ஒன்றுமே தெரியாதது போல சிறுபிள்ளைத்தனமாக பேசியிருப்பதே இவரின் அறிவுத்திறன் பளிச்சென தெரிகிறது....... இவருக்கு தளபதியே எவ்வளவோ பரவாயில்லை போல

Rate this:
நரி - Chennai,இந்தியா
20-மார்-201715:43:49 IST Report Abuse

நரிஒரு திருடனை பற்றி இன்னொரு திருடனுக்கு தான் தெரியும்...

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-மார்-201714:55:39 IST Report Abuse

kuppuswamykesavan///.......... சிங்கப்பூர் பிரஜை என்று சொன்னாராம்? அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?///. இதற்க்கான பதிலை மத்திய அரசுதான் சொல்லனும். சரியா? .

Rate this:
SARAVANAN G - TRICHY,இந்தியா
20-மார்-201714:44:32 IST Report Abuse

SARAVANAN Gசபாஷ் .....சரியான போட்டி....

Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
20-மார்-201714:26:12 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamதினகரனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறத? அப்படி ஒன்று இருந்தால், ஜெயலலிதா அவர்களின் மரணம் சம்பந்தமான விசாரணையை முதலில் தொடங்க வேண்டும். செய்வாரா? மேலும், சிங்கப்பூர் பிரஜை என்று சொன்னாராம்? அதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

Rate this:
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement