எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர் பதிலடி!:வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி | எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர் பதிலடி!:வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி Dinamalar
பதிவு செய்த நாள் :
பதிலடி!
எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உ.பி., முதல்வர்
வளர்ச்சிக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதி

லக்னோ: உத்தர பிரதேசத்தின், 21வது மற்றும் பா.ஜ.,வின் நான்காவது முதல்வராக, சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத், 44, பதவியேற்றார்.

எதிர்க்கட்சியினர் விமர்சனம், உ.பி., முதல்வர்...பதிலடி,!:வளர்ச்சிக்கே முன்னுரிமை

'மதவாதத்தை துாண்டுபவர்' என, எதிர்க்கட்சி யினர் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், '' மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்காக எந்தவித பாகுபாடும் காட்டாமல் பணியாற்றுவேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு தான் முன்னுரிமை அளிப்பேன்,'' என, அவர், உறுதி அளித்துள்ளார்.

ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த சட்ட சபை தேர்தலில், உ.பி.,யில், மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி வென்றது.நீண்ட இழுபறிக்கு பின், முதல்வராக, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி அடிக்கடி சிக்கலில் மாட்டும், பா.ஜ.,வின் எம்.பி., யான யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

கட்சியின் உ.பி., மாநிலத் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, தேசிய துணைத் தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர் களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த மூவரும்,

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.

15 ஆண்டுகளுக்குப் பின்


இந்நிலையில், லக்னோவில் விமரிசையாக நடந்த விழாவில், முதல்வராக ஆதித்யநாத் பதவியேற்றார்.அவருக்கு கவர்னர், ராம் நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், 15 ஆண்டுகளுக்குப் பின், உ.பி.,யில் பா.ஜ., அரசு அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
இதுவரை முதல்வராக இருந்த, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

முஸ்லிம் அமைச்சர்


சட்டசபை தேர்தலில், ஒரு முஸ்லிம்வேட்பாளரைக் கூட நிறுத்தாத, பா.ஜ., அமைச்சரவையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான, மோஷின் ரசா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், சட்ட சபை தேர்தலில் போட்டியிடவில்லை. மொத்தம், 22 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஒன்பது பேர், தனி பொறுப்புடன், இணை அமைச்சர்களாகவும், 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த ரீட்டா பகுகுணா உட்பட, ஒன்பது பெண்கள், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உ.பி., முதல்வராக பதவியேற்றுள்ள ஆதித்யநாத், ஹிந்துத்துவா கொள்கையில் தீவிரமாக உள்ளவர்.

Advertisement

அதனால், மாநிலத்தில் ஹிந்துத்துவா கொள்கைகள் அதிகளவில் புகுத்தப்படும் என, பரவலாக பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில், மாநிலத்தின் வளர்ச்சியில் முழு கவனத்தையும் செலுத்தப் போவதாக, ஆதித்யநாத் நேற்று உறுதி அளித்தார்.

சர்ச்சைகளின் நாயகன்!


மிகத் தீவிர ஹிந்துத்துவா கொள்கைவாதி, மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர் என, பல்வேறு முகங்களை கொண்டுள்ள, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத்,சர்ச்சை பேச்சுகளின் நாயகனாக பார்க்கப் படுகிறார். உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் எம்.பி., தொகுதி யில் இருந்து, 1998 முதல் தொடர்ந்து, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.கணித பட்டதாரி யான இவர், சன்னியாசம் பெற்றவர். தீவிர ஹிந்துத்துவா கொள்கையை உடையவர். அதனால் தான், அவர், உ.பி., முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி நம்பிக்கை


உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி யேற்கும் விழாவில் பங்கேற்ற பின், பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' சமூகதளத்தில், பதிவிட்டுள்ள செய்திகளில் கூறியுள்ளதாவது:

நம்முடைய ஒரே இலக்கு மற்றும் கொள்கை, வளர்ச்சி தான். உ.பி.,யில் அமைந்துள்ள புதிய பா.ஜ., அரசு இதை நோக்கியே செயல்படும் என, நம்பிக்கையுடன் உள்ளேன். உ.பி., வளர்ச்சி அடைந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாக உ.பி.,யை உருவாக்க புதிய அரசு பாடுபடும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
அங்கு வளர்ச்சி பணிகளில் புதிய சாதனை நிகழ்த்தப்படும் என, பெரிதும் எதிர்பார்க்கிறேன். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு பாராட்டுகள். இவ்வாறு மோடி கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத் பற்றிய, எதிர்க்கட்சி யின ரின் கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி, இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
‛‛மாநிலத்தில் வசிக்கும் அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காகவும், எந்தவித பாகுபாடும் காட்டாமல் பணியாற்றுவேன். அமைச்சரவை யில் இடம் பெற்றுள்ள அனைவரும், தங்களது சொத்து மற்றும் வருமானம் பற்றிய விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.''

-யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
20-மார்-201718:29:14 IST Report Abuse

Sahayamதிருடனிடம் சாவி கொடுத்தால் திருட்டை ஒழிக்கலாம் என்பது ஒருவகையான நம்பிக்கை. வாழ்க

Rate this:
kumar - chennai,இந்தியா
20-மார்-201716:02:06 IST Report Abuse

kumarஇலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை பற்றி 23.07.2014 அன்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பிய உத்திரபிரதேச முதலமைச்சர் பொறுப்பேற்க்கும் யோகி.ஆதித்யனாத். கேள்வி எண் : 1955 தேதி : 23.07.2014

Rate this:
sivanesan - nagarkoil,இந்தியா
20-மார்-201715:52:49 IST Report Abuse

sivanesanநேற்று டிவி யில் பெரும்பாலான தமிழ் சேனல்கள் இவரின் பட்டாபிஷேகத்தைத்தான் ஒளி பரப்பிக்கொண்டிருந்தன... டிவி சேனல் காரர்கள் ஏதோ பீதியில் இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது... வட நாட்டில் ஒரு தமிழ்முதல்வர் பதவி ஏற்பதை எந்த வட இந்திய சேனலாவது காண்பிக்குமா ??

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201713:45:46 IST Report Abuse

Malick Rajaஇந்து தர்மம் அதன் கொள்கைகள் தெரியாதவர்கள் 99.99.% சதவீதத்திலும் .. முஸ்லீம் என்பவர்கள் அதன் அடிப்படை கல்வியறிவு கூட இல்லாமல் 98%. சதவீதத்தில் இருப்பதன் விளைவில் இருப்பது மட்டும் உண்மை .. இந்துமதத்தில் அடிப்படை சாந்தி சொல்ல முடியுமா முடியும் .001% சதவீதத்தினரால் ... முஸ்லீம் ஏகத்துவம் சகிப்புத்தன்மை அமைதி அடிப்படை அனைவராலும் இருப்பதா ? 2% சதவீதத்தினால் முழுதும் ஓரளவுக்கு அவரவர் செயலால் போற்றப்பட்டுள்ளது ஆக மூடர்களாக வாழாமல் குறைத்த பட்ச மனித நேயம் இருந்தாலே நாடு வளம் பெரும் .. யோகி செய்வதில் தவறுகள் இருப்பது கடினம் .. சூரியனை வழிபடுவதை தடுத்தால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்றார் ? ஆனால் யாரவது வழிபடுவதை தடுத்தால் அவரை விட்டுவைக்கவே கூடாது இது பொதுவானாதாக இருக்கும் பட்சத்தில் யோகி சொல்வது சரிதான் .. ஆக இப்படியே ஒவ்வொன்றாக பார்த்தல் அனைவரும் ஒன்றாகும் அதுதான் மனிதநேயம் மனிதர்களால் ஒன்றாக வழிபடுத்தலில் பிரிவாக இருத்தல் மாண்புடைய செயல் அவரவர் செயல் அவரவர்களுக்கே சொந்தமாகும் இதில் மதம் கலப்பது மனித மாண்பன்று

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201713:32:34 IST Report Abuse

Malick Rajaவயதுகள் வளர்ச்சி தானாகவே உள்ளது ... தளர்ச்சிகளால் வளரும் ஆயுளின் முடிவும் தானாகவே இருக்கிறது .. ஆக வயது வளர்ச்சியால் ஆயுள் தளர்ச்சியை அடைகிறது ..யாருக்கும் இவ்வுலகம் சொந்தமானது இல்லை வருவது போவது இயற்க்கை என்று நடக்கும் நிரந்தரமற்ற ஏமாறும் இவ்வுலகவாழ்க்கையில் தற்காலிக சுகம் விலகும் நாளை எண்ணுவதில் மனிதநேயம் வளர்ச்சி இந்தவளர்ச்சியில் மட்டுமே மானிடம் முழுதும் நிம்மதி பெருமூச்சு விடமுடியும்

Rate this:
A. Sivakumar. - Chennai,இந்தியா
20-மார்-201713:13:14 IST Report Abuse

A. Sivakumar.நல்ல துவக்காகவே இருக்குது, பாராட்டுக்கள். //நம்முடைய ஒரே இலக்கு மற்றும் கொள்கை, வளர்ச்சி தான்// பிரதமரின் இந்த அறிவிப்பு உள்ளார்ந்த பொருள் கொண்ட சில சங்கதிகளைச் சொல்வதாக எனக்குத் தோணுது .இந்தியாவின் பதினான்கு பிரதமர்களில் எட்டு பேர் உபியிலிருந்து வந்தவர்கள் என்பதும், அங்கே பாஜகவின் இமாலய வெற்றியும் பிரதமரைத் தனிப்பட்ட முறையில் கவலைக்கு உள்ளாக்கியிருக்கும் என்பதைத் துணை முதல்வர்களின் நியமனம் குறிப்பிடுவது போல் தோன்றுகிறது. இரண்டு ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தல் இருக்கும் நிலையில், உபியில் ஏதாவது ஏழரை ஆனால், இந்தியா முழுக்க ஏழரை ஆகிடும் என்று பாஜக கவலைப்படுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இவர்களுடைய மைய அமைப்பின் கடும் அழுத்தத்தின் பேரிலேயே யோகி ஆதித்யநாத் முதல்வர் ஆகியிருந்தாலும், அதைச் சமன் செய்யவே இந்தத் துணை முதல்வர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
20-மார்-201711:16:09 IST Report Abuse

Dinesh Pandianஎதற்காக பெட்ரோல் விலை குறையவேண்டும் ? தேவை இல்லை . டீசல் விலை 40 இருந்தபோதும் பருப்பை விலை இருநூறு இருந்து, இப்போ துவரம் பருப்பு எழுபது தான்

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-மார்-201716:56:29 IST Report Abuse

Karuthukirukkanஅடடா என்ன ஒரு சொம்பு உனக்கெல்லாம் விருது தர வேண்டும் அய்யா பருப்பு விலைக்கு ஒரே காரணம் பெட்ரோல் விலை மட்டும் தானா ?? நீ எங்கப்பா படிச்சா ?? nagpur ?? தயவு செஞ்சு உன் புள்ள குட்டிய அங்க படிக்க வெச்சிறாத நாட்டுக்கு நல்லதா போகும்...

Rate this:
Larson - Nagercoil,இந்தியா
20-மார்-201711:12:24 IST Report Abuse

Larsonஇவருடைய செயல்பாடுகளை பொறுத்தே 2019 பொதுத்தேர்தலில் மோடியின் வெற்றி அல்லது தோல்வி இருக்கும். உத்தரப்பிரதேச தேர்தலில் மோடியை நம்பி முஸ்லிம்கள் ஓட்டளித்திருக்கிறார்கள், மோடி சாமியாரை நம்பி முதலமைச்சர் பதவி குடுத்திருக்கிறார். நல்லதே நடக்கும் என நம்புவோம்...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
20-மார்-201710:27:59 IST Report Abuse

ganapati sbசன்யாசியான இவருக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாததால் மத்திய அளவில் மோடி தலைமையில் அரசியல்வாதிகள் செய்யும் மேல் மட்ட ஊழல் இல்லாதது போல மாநில அளவில் அரசியல்வாதிகள் செய்யும் மேல் மட்ட ஊழல் யோகி தலைமையில்களையப்படும் எனும் நம்புவோம் இனி கிடைமட்ட ஊழலை அதிகாரிகளும் பொதுமக்களும் களைய வேண்டும். இனி பாஜக வாக்களித்தது போல உத்தர பிரதேசம் உத்தம பிரதேசமாகட்டும். விழாவில் கலந்துகொண்ட முலாயம் அகிலேஷின் நாகரிக முதிர்ச்சிக்கும் வாழ்த்துக்கள்.

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
20-மார்-201716:59:35 IST Report Abuse

Karuthukirukkanவேற எவனுமே நாட்டில் இல்லாம , ஒரு பகுதி மக்களை வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லும் இந்த ஆள் தான் கெடைச்சாரா முதல்வர் பதவி குடுக்க ??...

Rate this:
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-201709:59:51 IST Report Abuse

sunilநம்பிட்டோம் ......... தேர்தலில் நின்று வெற்றிபெறாத ஒருவரை பிஜேபி முதல்வராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன....? இவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு....? RSS கொள்கைகளை அரசாங்கத்தில் புகுத்துவதற்காக இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் உண்மையிலேயே உங்களுக்கு ஒட்டு போட்டார்களா... இல்லை ஒட்டு எந்திரத்தில் ஏதாவது கோல்மால் செய்து வெற்றி பெற்றீர்களா....? மோடியால் மக்கள் படும் அவதிக்கு பிஜேபி யின் இந்த வெற்றி சாத்தியமே இல்லையே....?

Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-201710:50:22 IST Report Abuse

Yaro Oruvanசுனிலு: அவர் கடந்த 5 முறை ஒரே நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆக உள்ளார்.. மாநில நலன் கருதி திறமையான நபரை பாஜக நியமித்துள்ளது.. 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் போதும்.. சட்டத்தை மதிங்க.. நீங்க சொல்றத பாத்தா முதல்வர் ஆக ஒரே தகுதி எம் எல் ஏ என்பதுபோல் உள்ளது.. அப்படி எந்த சட்டத்திலும் சொல்லவில்லை.. சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் முதல்வர் .. அவர் உறுப்பினராக இல்லாத பட்ஷத்தில் ஆறு மாசத்திற்குள் உறுப்பினர் ஆனால் போதும்.. மோடியால் மக்கள் படும் அவதி?? அபுதாபியில் என்ன அவதி? அப்படியே இருந்தாலும் அதற்கு மோடி எப்படி காரணமாவார்?? உபியில் மக்கள் அவதிப்படவில்லை என தேர்தலில் சொல்லி உள்ளனர்..ஆடு நனையுதேன்னு ஓநாய் வருத்தப்பட்ட மாதிரி காங்கிரஸ் உள்பட்ட மத்த கட்ஷிகள் மக்கள் வரிசையில் நிக்கிறார்கள் என கூப்பாடு போட்டு அரசியல் செய்தனர்.. ஆனால் மக்கள் ஒரு விரலை உள்ளே விட்டு ஆட்டிவிட்டனர்.. மோடி எதிர்ப்பாளர்கள் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்.. வேற வழியில்லை - ஜெலுசிலை வாங்கி சாப்பிடுங்கோ...

Rate this:
mridangam - madurai,இந்தியா
20-மார்-201711:00:12 IST Report Abuse

mridangamஅவர் 26 வயது முதல் லோக்சபா MP ஆக தேர்தெடுக்க பட்டுள்ளார். குறுக்கு வழில ராஜ்ய சபா MP ஆக வில்லை .. மேலும்.. முழு eastern UP ஆதரவு உள்ளவர்.. ஒரு சீக்கியர் பகடி அணிந்து CM ஆகலாம், ஒரு முஸ்லீம் பர்தா அணிந்து CM ஆகலாம் ... ஆனால் ஒரு ஹிந்து தேசத்தில் ஒரு ஹிந்து காவி உடையில் CM ஆக கூடாதா ? அவர்க்கு ஒரு வீடு, நிலம், immovable property கிடையாது.. குடும்பமும் கிடையாது.. Maths Graduate .. அனைத்து தகுதியும் உள்ளவர்.....

Rate this:
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
20-மார்-201711:16:49 IST Report Abuse

Thamarai Moorthy.C.V.ஐக்கிய அரபு கேள்விக்கு ஐக்கிய அரபு சரியான, விளக்கமான பதில் கொடுத்திருக்கிறார் இருவருக்கும் நன்றி....

Rate this:
sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-மார்-201712:29:29 IST Report Abuse

sunilஇன்னும் சில பிஜேபி சொம்புகளின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்....

Rate this:
20-மார்-201717:35:37 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்உனக்கு யாரோ ஒருவன் கொடுத்த பதிலடி போதும். இன்னும் எத்தனை பேரிடம் தான் கேவலப்படுவாய்....

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement