ஸ்பெக்ட்ரம் விசாரணை: தடுமாறும் சி.பி.ஐ., வழக்கறிஞர்; அதிரடி காட்டும் ராஜா Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தடுமாறும் சி.பி.ஐ!
ஸ்பெக்ட்ரம் விசாரணை:
தடுமாறும் சி.பி.ஐ., வழக்கறிஞர்;
அதிரடி காட்டும் ராஜா

ஒரே விஷயத்தில் மாறி மாறி பேசி, முரண் பாடான வாதங்களை சி.பி.ஐ., வழக்கறிஞர் வைக்க, அதற்கு பதிலடியாக, ராஜா அதிரடி காட்ட, ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதிகட்ட விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியது.

 ஸ்பெக்ட்ரம் விசாரணை: தடுமாறும் சி.பி.ஐ., வழக்கறிஞர்; அதிரடி காட்டும் ராஜா

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், சி.பி.ஐ.,யின் பல்வேறு குற்றச்சாட்டுக் கிளைகளில், மிக முக்கியமானது கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் போய்ச் சேர்ந்த விவகாரம்.முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு துறை அமைச்ச ரும், தி.மு.க., வைச் சேர்ந்தவருமான, ராஜா, டாடா நிறுவனத்தை புறந்தள்ளிவிட்டு, ஸ்வான் நிறுவனத்துக்கு சலுகை காட்டியதற் கான பிரதிபலனாகத்தான், ஸ்வான் மூலம், கலைஞர், 'டிவி'க்கு, 200 கோடி ரூபாய் தரப் பட்டுள்ளது என்பது தான், சி.பி.ஐ.,யின் குற்றச் சாட்டு.டாடா நிறுவனம்

இதற்கு ராஜா தரப்பு அளித்த பதில்:


அரசுக்கு ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை பாக்கியை, டாடா நிறுவனம் வைத் திருந்தது. பாக்கியில்லா சான்றிதழை, அந் நிறுவனம் இணைக்கவில்லை. அதனால்தான் கிடப்பில் வைக்கப்பட்டு இருந்தது.மூன்று மாதம் கழித்து, பாக்கியில்லா சான்றிதழை

அளித்ததும், அதே நாளில், டாடா உரிமம் கோரியிருந்த கோப்பில் கையெழுத்திட்டு அனுப்பி விட்டேன்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, இறுதிக்கட்ட மறு விசாரணையின்போது, டில்லி, பாட்டியாலா கோர்ட்டில், சி.பி.ஐ., வழக்கறிஞரான குரோவருக்கும், ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.குரோவர்வாதிடுகையில், ''இந்த விவகாரத்தில், வேண்டு மென்றே, ராஜா தாமதம் செய்தார். இதில், குற்றச் சதி உள்ளது. 200 கோடி ரூபாய் தொடர்புள்ள நிகழ்வு என்பதால், நீதிபதி மிகுந்த கண்டிப்புடன் அணுக வேண்டும். இந்த விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டு உள்ளன,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட ராஜா, ''பாக்கி வைத்துள்ள நிறுவனத்திற்கு கையெழுத்துப் போட்டிருந்தால், உள்நோக்கத்துடன், டாடாவுக்கு சலுகை காட்டு வதற்காக, உரிமம் வழங்கி விட்டார் ராஜா என சி.பி.ஐ., குற்றம் சாட்டியிருக்காதா,'' என்றார்.

இதற்கு குரோவர், ''இது தொடர்பாக, விதிமுறை இருப்பது உண்மை தான். இருப்பினும், பாக்கி யில்லா சான்றிதழ், டாடா போன்ற பழைய நிறுவனங்களுக்கு பொருந்தாது. புதிய நிறுவனங் களுக்கு மட்டுமே பொருந்தும்,'' என்றார்.

புரியவில்லை


இதை சற்றும் எதிர்பாராத ராஜா, தன் வாதத்தில் கூறியதாவது:

சி.பி.ஐ., வழக்கறிஞர் தடுமாறுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியவில்லை. புதிய நிறு வனங்கள், தங்கள் தொழிலைக் கூட துவங்காத நிலையில்,அரசுக்கு எப்படி பாக்கி வைத்திருப்பார் கள்? அவர்களிடமிருந்து எதற்காக பாக்கியில்லா சான்றிதழை, அரசாங்கம் எதிர்பார்க்க வேண்டும்?

Advertisement

இவ்வாறு அவர் கேட்கவே, கோர்ட்டில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

இறுதியாக பேசிய நீதிபதி சைனி, ''முரண்பட்ட வாதத்தை வைப்பதற்கு குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்குத் தான் உரிமை உண்டு. குற்றம் சாட்டும் அரசு தரப்புக்கு, அந்த உரிமை இல்லை. முரண்பட்ட வாதத்தை முன்வைப்பதை, சி.பி.ஐ., தவிர்க்க வேண்டும்,'' என்று கண்டிக்கவே,பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலையில் தீர்ப்பு?


சி.பி.ஐ., மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் ஏற்கனவே முடிவடைந்து இருந்தன. கடைசி வாய்ப்பான, சுருக்கமான மறுவாதமும், இருதரப்புக்கும் முடிவடைந்து விட்டது. இனி, அமலாக்கப்பிரிவு தரப்பின் வாதங்கள், 10 நாட்களுக்கு நடக்கும். அதன் பின், வழக்கு விசாரணை முடிவடையும். கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூலையில், இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட லாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHILKUMAR.S - Chennai,இந்தியா
21-மார்-201711:45:52 IST Report Abuse

SENTHILKUMAR.Sஎவ்வளவு பெரிய குற்ற வழக்கையும் அரசு நினைத்தாள் நீர்த்து போக செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு வாத திறமை அற்ற வக்கீல்களை வைத்து குற்றவாளிகளை நிரபராதிகளாக்க முடியும் என்பது ஏற்கனவே பலமுறை நிரூபணமாகியுள்ளது.

Rate this:
தமிழன் - சென்னை,இந்தியா
21-மார்-201700:17:59 IST Report Abuse

தமிழன்ராஜாவை தண்டிக்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். ஏனெனில், கணக்கு எழுதுவதில் கில்லாடிகள் உடன்பிறப்புகள். இந்த முறை ஏகத்துக்கும் தகிடுதத்தம் செய்தும் கணக்கை சரிக்கட்டி விட்டனர். குரோவர் போன்ற மங்குனிகளை வைத்து வாதிடுவது தவறு. அல்லது, தெரிந்தே தப்பிக்க விடுகின்றனர்.

Rate this:
20-மார்-201721:03:31 IST Report Abuse

ரங்கன்பொருளாதாரக் குற்ற்வாளிகளை பொறி வைத்துப் பிடிக்கவேண்டும்... CBI அதிகாரிகள் சந்தேக்ம் வந்தவுடனேயே பத்திரிகைகளுக்கு பேட்டி வைத்து, போஸ்டர் ஒட்டி, கெடா வெட்டி விருந்து வச்சுடறாங்க... குற்றவாளிகள் உஷாராயி தப்பிச்சுடறாங்க... அதிலும் கட்டுமரக் காரர்கள் ஊழலில் பழம் தின்று கொடடையயும் முழுங்கியவர்கள். தப்பெல்லாம் CBI யின் கையாலாகாத்தனம்தான்.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-மார்-201719:19:33 IST Report Abuse

Cheran Perumalபணம் பத்தும் செய்யும்.

Rate this:
Selvamony - manama,பஹ்ரைன்
20-மார்-201715:51:34 IST Report Abuse

Selvamonyaccounts மற்றும் பொருளாதாரம் படித்த, புரிந்த எவனும் ராஜாவை குற்றவாளி என் சொல்லமாட்டான்

Rate this:
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-மார்-201712:25:18 IST Report Abuse

kuppuswamykesavan" ஸ்பெக்ட்ரம் விசாரணை: தடுமாறும் சி.பி.ஐ., ". அட ராமா, அதில் அந்த பிரதர்ஸ் வெளியே வந்தாச்சு. இதில் இவர்கள் வெளியே வருவார்கள் போல? .

Rate this:
sivanesan - nagarkoil,இந்தியா
20-மார்-201711:27:23 IST Report Abuse

sivanesanராஜா குற்றவாளியா இல்லையோ... சிபிஐ இதுவரை எத்தனை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது...எவராவது சொல்ல முடியுமா???

Rate this:
20-மார்-201709:31:47 IST Report Abuse

DesaNesanடி நீரா ராடியா டெலிபோனில் மந்திரி பதவிகளுக்கு பேரம் பேசியதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் சோனியா ஆட்சியில் சாமர்த்தியமாக ராசா மீது மட்டும் வழக்குப் போட்டுவிட்டு ஃபைல்களில் ஒப்புதல் கையெழுப்போட்ட மன்மோகன் ப சிதம்பரம் . நீரா ராடியா ஆகியோர்மீது வழக்குப்போடாமல் விட்டனர். அது வழக்கையே நீர்த்துப்போக வைத்துவிட்டது.ஆனால் தான் கட்டிங்பெற வசதியாக  தாவூத்  போனறவர்களுக்கு    சாதகமாக விண்ணப்பதேதியை முன்தேதிக்கு  திடீரென மாற்றிய ராசா தப்பிக்கவே முடியாது. 

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201709:12:03 IST Report Abuse

Srinivasan Kannaiyaஏமாறத்தான் மக்கள் தயாராக உள்ளார்கள்... மக்களின் ஞாபக மறதியை முழுவதுமாக நம்பலாம்...வழக்கின் போக்கு எப்பிடி வேண்டும் என்றாலும் போகலாம்...ஆனால் ராஜா தப்பித்து விடுவார்..

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
20-மார்-201708:34:30 IST Report Abuse

தங்கை ராஜாஒரு அப்பாவி கிடைத்தால் என்னவெல்லாம் பாடுபடுத்துவார்கள் என்பதற்கு இவ்வழக்கு ஓர் உதாரணம். கட்டுக்கதை கட்டியவனெல்லாம் வாங்குன காசை தின்னு ஏப்பம் விட்டுட்டானுக.

Rate this:
20-மார்-201709:32:35 IST Report Abuse

DesaNesanRaasaa appaviyaa?Adap paavi...

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement