மண் இல்லாமல் தீவனப்புல் உற்பத்தி செட்டிநாடு பண்ணை முயற்சி| Dinamalar

மண் இல்லாமல் தீவனப்புல் உற்பத்தி செட்டிநாடு பண்ணை முயற்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
மண் இல்லாமல் தீவனப்புல் உற்பத்தி செட்டிநாடு பண்ணை முயற்சி

காரைக்குடி : காரைக்குடி செட்டிநாடு கால்நடை பண்ணையில் மண் இல்லாமல் நிழல் பரப்பிலே தீவனப்புல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கால்நடைகள் பசுந்தீவனமின்றி பாதிக்கப்பட்டுள்ளன. வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பசுந்தீவனங்களை பயிரிட முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்க்க 'ைஹட்ரோ போனிக்ஸ்' தொழில் நுட்பத்தில் எளிய முறையில் தீவனப் புல்லை செட்டிநாடு கால்நடை பண்ணை டாக்டர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

பண்ணை துணை இயக்குனர் கருணாகரன் கூறியதாவது: மக்காசோளம், சேளம், கம்பு, கோதுமை, தட்டைப்பயறு போன்ற பயிர்களின் விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அவற்றை ஈர துணி (அ) சாக்குகளில் கட்டி அதன்மேல் சிறிய எடையை வைக்க வேண்டும்.

பின் ஒரு சதுர அடி பிளாஸ்டிக் டிரேயில் 400 கிராம் விதையை பரப்பி, குறைந்த வெளிச்சமுள்ள அறையில் வைக்க வேண்டும். அவற்றில் அடிக்கடி நீர் தெளித்து வர வேண்டும். இதன் மூலம் 9 முதல் 10 நாட்களில் தீவன புல் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ விதையில் 4 முதல் 4.5 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய இயலும்.

இதில் 13 சதவீத புரதசத்து நிறைந்துள்ளது. இந்த 'ைஹட்ரோ போனிக்ஸ்' பசுந்தீவனமானது ஊட்டச்சத்து மிக்கது. மக்காச்சோளம், தட்டப்பயிரை 1:3 என்ற விகிதத்தில் கலந்தும் வளர்க்கலாம், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-201713:49:12 IST Report Abuse
GokulakrishnanPalanisamy this is called hyhonics fodder. this is already used in many places across the world.
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
20-மார்-201706:16:48 IST Report Abuse
கதிரழகன், SSLC மண்ணுதான் கெடைக்குதே பஞ்சமில்லாத. தண்ணி இல்லாம சாகுபடின்னா சொல்லுங்க கேக்குறோம். பாறை மேல பவளமல்லி பதியன் போட்டா சொல்லுங்க கேக்குறோம். மண்ணில்லா மகசூல் யாருக்கு பிரயோசனம்?
Rate this:
Share this comment
Gunasekar - hyderabad,இந்தியா
20-மார்-201712:07:48 IST Report Abuse
Gunasekarசார், தண்ணீ மிக குறைவாகவே தேவைப்படும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.