'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்:ராமதாஸ் ஆதங்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்:ராமதாஸ் ஆதங்கம்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
'ஆர்.கே.நகர்  பார்முலா' உருவாகும்:ராமதாஸ் ஆதங்கம்

நாகர்கோவில்;''திருமங்கலம் பார்முலா பெயர் மாறி 'ஆர்.கே.நகர் பார்முலா' உருவாகும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறிய தாவது: தமிழக அரசின் நிதி செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும். பொருளாதாரம் மோசமாகி கொண்டிருக்கிறது. இலவசம், மானியத்துக்கான ஒதுக்கீடு 29 ஆயிரம் கோடியில் இருந்து 68 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயின் பெரும்பகுதியை இலவசத்துக்கு செலவிட்டால், உள்கட்டமைப்பு வசதிக்கு எப்படி பணம் கிடைக்கும்?ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் போட்டி போட்டு பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளன. அ.தி.மு.க., ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளது; முதற்கட்டமாக இரண்டாயிரம் ரூபாய்க்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள், மத்திய பாதுகாப்பு படையை பணியில் அமர்த்த வேண்டும் தி.மு.க.,வின் 'திருமங்கலம் பார்முலா' மாறி, 'ஆர்.கே. நகர் பார்முலா' உருவாகும் என தோன்றுகிறது.நிதி அமைச்சர் ஜெயக்குமார், தமிழக பட்ஜெட்டை ஜெ., சமாதியில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இது தமிழகத்துக்கு தலைகுனிவு. பட்ஜெட்டை சசிகலா இருக்கும் சிறைக்கும் கொண்டு சென்றிருப்பார்களா? என்ற சந்தேகமும் எழுகிறது.
ஜெ., ஆட்சி 'ஜீரோ ஆட்சி'; பழனிசாமி ஆட்சி 'மைனஸ் ஆட்சி'. தமிழகத்தை ஊழல் ஆள்கிறது. டில்லியில் தமிழக விவசாயிகள் ஆறு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை அன்புமணி மட்டுமே சந்தித்து பேசியுள்ளார். 'நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும்' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூடாத பட்சத்தில் பா.ம.க., போராட்டம் நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-மார்-201720:06:13 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாம் இவரு ஆதங்கத்த இப்ப இங்க யாரு கேட்டா? அவனவன் ஊரு பத்திகிட்டு எறியிதுன்னு பயந்து கிட்டு இருக்கான்? இவரு பீடிக்கு நெருப்பு கேட்டுகிட்டு இருக்காரு? பாவம்?நிலைமை இப்படி ஆயிபோச்சே கோவாலு?
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
20-மார்-201718:50:19 IST Report Abuse
kc.ravindran தங்களை எவ்வளவு சுரண்டினாலும் அதை உணராதவரை தட்டிக்கேட்க முடியாதவரை அந்த தருணம்வரை சாதி மத பின்துணை இல்லாத கட்சிகள் முன்னிறுத்தப்படும் வரை ஜனநாயகத்தில் கூட்டுக்கொள்ளை அங்கீகரிக்கப்படுகிறது. நாளை இந்தம்மா கூட்டத்தை பிஜேபி ஆதரிக்க முன்வந்தாலும் அச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வளவு தூரம் எல்லாம் நடந்தபின்பும் எதிர் கட்சிகள் ஏன் ஒன்று சேர மறுக்கிறார்கள் ஒன்று கூடி சனங்களை நேரிட வேண்டியதுதானே. முடியாதே ஏன் இவர்கள் எல்லாம் அந்தம்மா ஆட்சி தொடர கை கோர்த்தவர்கள். அதாவது மடியில் கனம் உள்ளவர்கள். சாதியை காட்டியாவது இதனால் தான் நன் தனியாக நிக்கிறேன் என்று மக்களை நம்பவைக்கலாம்.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-மார்-201720:11:28 IST Report Abuse
Rajendra Bupathiஇருக்குற பனத்தை எல்லாம் சொரண்டி எடுத்துட்டாங்க இனிமே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவுங்களூக்கு எல்லாம் எதுவுமே கிடைக்காது? அதனால பாமக எல்லாம் இனிமேல் அரசியல் பண்ணாது அது தன்னிறைவை எப்பவோ அடைஞ்சிடுச்சி?...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-மார்-201720:14:10 IST Report Abuse
Rajendra Bupathiபாவம் அப்ப டங்க் சிலிப்பு ஆயி சில வீர வசனம் பேசுனது எல்லாம் உண்மைதான்? என்ன பண்றது காலத்தின் கோலம் திராவிட கட்சிகளூம் ஜாதியின் மாயையில் மாட்டிகிட்டு முழிச்சதன் விளைவை இவுங்க அறுவடை பண்ணீகிட்டாங்க? பின்னே சும்மவா பலே ஜகஜால கில்லடிங்க இல்ல?...
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201718:33:34 IST Report Abuse
Malick Raja ஊழலை பேச முடியாது வைத்தியர் அவர்களே காரணம் உங்களின் மகன் வழக்கு டில்லியில் நிலுவையில் இருக்கிறது ரூ 5.10, அண்ட் 25.க்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்த உங்களின் சொத்துக்கணக்கை வெளிக்கொண்டுவந்து தங்கள் எப்படி சொத்து சேர்த்தித்தீர்கள் என்பதை விளக்கலாமே ..நீங்கள்தான் யோக்கியர் ஆயிற்றே .. வாருங்கள் மருத்துவரேஉங்களை உள்ளே அனுப்ப சரியான நேரம் வந்துவிடலாம்
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-மார்-201720:08:35 IST Report Abuse
Rajendra Bupathiசபாக்ஷ் சரியான போட்டி?...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
20-மார்-201717:37:05 IST Report Abuse
Balaji ஆனால் திருமங்கலம் பார்முலா போல மோசமான உதாரணமாக இந்த முறை RK நகர் பார்முலா அமையாது என்று நான் நம்புகிறேன்.........
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
20-மார்-201712:11:42 IST Report Abuse
M.Guna Sekaran ஜாதிய பார்முலாக்களுக்கு இது பெட்டர். தான் டாக்டர் , ஏன் ஜாதியை வைத்து அரசியல் செய்யா கூடாது இந்தியாவில் சட்டம் கொண்டு வரவேண்டி போராட்டம் செய்ய வேண்டியது தானே , அதில் பணம் சம்பாதிக்க முடியாது என்று தானே ஜாதியை வைத்து அரசியல் செய்கிறான் ....
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
20-மார்-201712:07:47 IST Report Abuse
Panneerselvam Chinnasamy ஐயா நீங்களும் ஜாதிய பார்முலாவை விட்டு வெளியே வாருங்ககள்... ஒத்த கொள்கை உள்ள கட்சிகளுடன் சேர்ந்து ஊர் சேர்ந்து தேர் இழுங்கள் ..கண்ணதாசன் விவசாயியை பற்றி பாடிய பாடலை நினைவு கூறுங்கள்... "யாரோடும் பேதம் இல்லை... ஊரோடு சேர்ந்துண்ணலாம்.." உங்கள் கட்சியில் உள்ளவர்கள் மனதை உங்களால்தான் விசாலம் ஆக்க முடியும்...மக்கள் அனைவரும் பிரிவினையை விட்டு "அனைவருக்கும் சுதந்திரம்... சமத்துவம்... சகோதரத்துவம்" என்று உயரிய எண்ணத்திற்கு பாடு படுங்கள்...நல் ஆட்சி அமைய உதவுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
20-மார்-201712:03:50 IST Report Abuse
ganapati sb பாமக இடை தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை உயர்த்தியிருக்கலாம்
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
20-மார்-201720:07:51 IST Report Abuse
Rajendra Bupathiபலமா அது எங்க இருக்கு? மகனை முதல்வராக்க அத எல்லாம் எப்பாவோ அடகு வச்சாச்சி?...
Rate this:
Share this comment
Cancel
மூ. மோகன் - வேலூர்,இந்தியா
20-மார்-201710:56:12 IST Report Abuse
மூ. மோகன் ஒரு கிராம் தங்க காசுன்னு இன்னொரு அஸ்திரமும் இருக்கே அதை மறந்திட்டாரா மருத்துவர் ஐயா?
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
20-மார்-201712:29:34 IST Report Abuse
karunchilaiஅதுவும் ஒரு லக்ஷம் காசுகள் வருமானவரி/அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உறங்குகிறார்கள். மாநில அரசு,மற்றும் காவல் துறை விநியோக மேற்பார்வை செய்கிறது....
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
20-மார்-201709:18:52 IST Report Abuse
Durai Ramamurthy ஜாதிய பார்முலாக்களுக்கு இது எவ்வளவோ பெட்டர்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
20-மார்-201709:09:24 IST Report Abuse
balakrishnan இவர் சொல்றது எல்லாமே நியாயமானது தான், ஆனாலும் இவருக்கும் விமர்சிக்கும் தகுதி இல்லை,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை