பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் லாபமில்லை| Dinamalar

பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் லாபமில்லை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

உத்திரமேரூர் : பழைய இரும்பு பொருட்கள், அடிமாடு விலைக்கு போவதால், தொழிலை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, பழைய இரும்பு சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் புலம்புகின்றனர்.கிராமப்புறங்களில், பழைய இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரிகள், அதற்கு மாற்றாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளை கொடுத்து, பரிமாற்றம் செய்துகொள்வர். சிலர், பழைய இரும்புகளுக்கு எடைக்கேற்ப அளவிற்கு பணம் வினியோகமும் செய்வதுமுண்டு.அவ்வாறு கிராமப்புறங்களில் சேகரிக்கும் இரும்பு பொருட்களை, வியாபாரிகள், நகர் பகுதிகளில் உள்ள பழைய இரும்பு, காயலான் கடைகளில் கொடுத்து, அதற்கேற்ப விலையை பெற்றுக் கொள்வர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காயலான் கடைகளில், பழைய இரும்புகளை அடிமாடு விலைக்கு கேட்பதாக கூறப்படுகிறது. இதனால், கிராமங்களில் பழைய இரும்புகள் வாங்கும் போது, அவர்களிடத்தில் இந்த திடீர் விலை சரிவு குறித்து எடுத்து கூறி, வியாபாரத்தை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் புலம்பி வருகின்றனர்.

பழைய இரும்பு பொருட்கள், 1 கிலோ, 15 ரூபாய்க்கு போகிறது. இதுகுறித்து, காயலான் கடைகளில் கேட்டால், வெளிநாடுகளில் இருந்து, இரும்பு இறக்குமதியாவதால், இரும்பு உருக்கும் தொழிற்சாலைகளில் தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளது என கூறுகின்றனர்.ஆர்.ரங்கராவ்,பழைய இரும்புகள் சேகரிக்கும் வியாபாரி, பழையசீவரம்

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.