குனியமுத்தூர் சிறு குளத்தில் தூய்மை பணி ஜரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குனியமுத்தூர் சிறு குளத்தில் தூய்மை பணி ஜரூர்

Added : மார் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குறிச்சி : குனியமுத்துாரிலுள்ள சிறு குளத்தில், மத்திய நீர்வள ஆணையம், பொதுப்பணித்துறை, கல்லுாரி மாணவர்கள் சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.குனியமுத்துாரில் நொய்யலிலிருந்து நீர் வந்து நிரம்பும் சிறு குளம் உள்ளது. ஒன்றரை கி.மீ., நீளத்தில், 82 ஏக்கர் பரப்பிலுள்ள இக்குளத்தில் நீர் நிரம்பினால், குனியமுத்துார் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.கடந்த பல ஆண்டுகளாக இக்குளத்தில் நீர் நிரம்பவில்லை. மாறாக சுற்றுப் பகுதிகளிலிருந்து குப்பை கழிவுகள் கொட்டப்பட்டன. தற்போது இதனை சுத்தம் செய்யும் பணியில், பொதுப்பணித்துறை, மத்திய நீர் வள ஆணையம், 'நமது கோவை; நமது பசுமை' இயக்கம், நீலம்பூரிலுள்ள சக்தி இன்ஜி., கல்லுாரி ஆகியவை களமிறங்கின.நேற்று காலை, நான்கு மணி நேரம் நடந்த பணியில், குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மத்திய நீர் வள ஆணைய தலைமை கண்காணிப்பு பொறியாளர் அழகேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வெங்கடாசலம், துணை தலைமை பொறியாளர் சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி மற்றும் கல்லுாரி மாணவர்கள் உள்பட, 120க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை