கூடு வைத்தால் வீடு தேடி வரும் சிட்டு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடு வைத்தால் வீடு தேடி வரும் சிட்டு!

Added : மார் 20, 2017
Advertisement

கோவை : நம் வீட்டு முற்றத்தில் கூடுகட்டி, சிறு தானியங்களை கொத்தித் தின்று வளர்ந்த சிட்டுக்குருவிகளை இன்று காணோம்.மனிதர்களை அண்டி, வாழ்விடங்களில், வாழ்ந்த வந்த குருவிகள் இன்றைக்கு எங்கே போயின என்ற கேள்வி இன்று எல்லோருக்கும் எழுவதை தவிர்க்க முடிவதில்லை. அந்தளவுக்கு நம் வாழ்வின் காலை நேரங்களை கலகலப்பாக வைத்திருந்தன அவை.சிட்டுக்குருவி, அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி என, அழைக்கப்பட்ட இக்குருவிகள், அழிந்து போக முக்கிய காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடு, எலக்ட்ரானிக் கதிர்வீச்சு, மொபைல் போன்களின் பெருக்கம் என, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.இவற்றை எல்லாம் விட, மனிதர்களின் வாழ்வியல் மாற்றமும், இருப்பிட மாற்றமுமே சிட்டுக்குருவிகள் முக்கிய காரணங்கள். ஓட்டு வீடுகள் இருந்த காலத்தில் வீட்டுக்குள் சர்வ சுதந்திரமாக கத்தித்திரிந்த குருவிகள், கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு, கண்ணாடி ஜன்னல்கள் மாட்டிய பிறகுதான் வரவில்லை. காற்று வரவேண்டும் என்பதற்காக ஜன்னல் வைத்து வீடு கட்டியவர்கள், ஏ.சி. காற்று வெளியில் சென்று விடக்கூடாது என, சிறு துவாரங்களை கூட அடைத்து விடுகின்றனர். வீதிகளில் மின் கம்பங்களை தவிர, வேறு மரங்கள் இல்லை.பாஸ்ட்புட் பாக்கெட்டுகளும், பதப்படுத்தப்பட்ட தானியங்களும் நமது உணவாக மாறிப்போனதால், மொட்டை மாடியில் வத்தல், வடகம் கூட காய வைப்பதில்லை.இந்நிலை நீடித்தால், சிட்டுக்குருவி மட்டுமல்ல, காகங்களும் கூட காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்து விடவில்லை. சரி, நம் வீடு தேடி மீண்டும் சிட்டுக்குருவிகள் வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?வெரி சிம்பிள். அவை கூடுகட்ட இடமும், கொத்தித் தின்ன தானியங்களும் கிடைத்தால், அவை மீண்டும் நம் வீடு தேடி வந்து விடும். முக்கியமாக, ஒரு கூடு வைத்தால் போதும்; சிட்டுக்குருவிகள் குடும்பம் நடத்த வந்து விடும்.'கோவைவாசிகளே... நீங்கள் இடம் மட்டும் கொடுங்கள்; கூடுகளை நாங்கள் இலவசமாக தருகிறோம்' என்கிறது, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் 'நெஸ்ட்' அமைப்பு. அழிவின் விளிம்பில் இருக்கும் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கத்தை, அதிகரிக்க செய்யும் பணியில், இந்த அமைப்பு களம் இறங்கியுள்ளது.இதன் துணைத்தலைவர் சந்தீப்குமார் கூறுகையில், ''சிட்டுக்குருவிகள் முற்றிலும் அழிந்துவிடவில்லை. கோவை நகரின் பல இடங்களில் இக்குருவிகள் உள்ளன. அவை இனப்பெருக்கம் செய்ய கூடுகள் தேவை. கூடுகள் வைத்து சிறுதானியங்களை வைத்தால் ஜோடி, ஜோடியாக வந்து விடும்,'' என்றார்.9442504154, 9043334958 ஆகிய எண்களை அழைத்தால், வீடு தேடி கூடு வரும். சிட்டுக்குருவியும் பின்னாலேயே வரும்; அப்புறம் உங்கள் வீடு சொர்க்கமாகும்!- இன்று சிட்டுக்குருவிகள் தினம்! -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை