தேர்தல் நிபுணர் எங்கே: தகவல் தந்தால் பரிசு| Dinamalar

தேர்தல் நிபுணர் எங்கே: தகவல் தந்தால் பரிசு

Added : மார் 20, 2017 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பிரசாந்த் கிஷோர், காங்., காணவில்லை, தகவல் தந்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு

புதுடில்லி: உ.பி.,யில் காங்கிரசுக்கு தேர்தல் யுக்திகளை அளித்த, தேர்தல் பணி நிபுணர் பிரசாந்த் கிஷோரை காணவில்லை; அவரை கண்டுபிடித்து கொடுத்தால், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என, காங்கிரஸ் அலுவலகம் வாசலில் பேனர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தேர்தல் யுக்திகளை அளித்தவர் பிரசாந்த் கிஷோர். மோடி வெற்றி பெற்றதற்கு இவர் தான் காரணம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், இவர் பா.ஜ.,வுக்கு எதிர்ப்பாக மாறினார்.

நிதிஷ்குமார் வெற்றிக்கு யோசனைகளை வழங்கினார். இதன் பின், சமீபத்தில் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் காங்கிரசிற்காக இவர் பணியாற்றினார். ஆனால், காங்கிரசுக்கு படுதோல்வி தான் கிடைத்தது. இதன் காரணமாக, பிரசாந்த் கிஷோரை காணவில்லை; கண்டுபிடித்து கொடுத்தால் ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்ற வாசங்கள் அடங்கிய பேனர் டில்லி காங்., அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

உ.பி., மாநில காங்., தலைவர் ராஜ் பாப்பர் அதை அகற்றும்படி உத்தரவிட்டார். உ.பி., தேர்தலில் போட்டியிட காங்., சார்பில் சீட் அளிக்கப்படாததை கண்டித்து, ராஜேஷ் சிங் என்பவரால் அந்த பேனர் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-மார்-201718:35:52 IST Report Abuse
Malick Raja வெற்றியும் தோல்வியும் ஒன்றுக்கொன்று மாறுபவை ... நிரந்தர வெற்றி இல்லை .. தோல்வியும் நிரந்தரம் இல்லை ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-மார்-201718:16:55 IST Report Abuse
Srinivasan Kannaiya சோனியாவுடன் இருக்கப்போகிறார்... கொஞ்சம் செக் செய்து பாருங்கள்...
Rate this:
Share this comment
Cancel
RAJA - TRICHY,இந்தியா
20-மார்-201717:33:50 IST Report Abuse
RAJA ஆர். கே நகர் இருப்பார் மாபியாவுக்கு ஆலோசனை சொல்லி கொண்டு
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மார்-201716:23:46 IST Report Abuse
Endrum Indian நானும் நினைத்தேன் இந்த பிரசாந்த் கிஷோர் எங்கே போனார் தெரியவில்லையே என்று? நிதிஷ் வெற்றி பெற்றதும் ஒரே ஆகா ஓகோ தான் இவருக்கு? உ.பி யில் இப்போ???
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
20-மார்-201718:07:15 IST Report Abuse
madhavan rajanபீகாரில் நிதீஷுக்கு கொஞ்சம் நல்ல பெயர் இருந்தது. லாலுவுக்கு கணிசமான ஓட்டு வங்கி இருந்தது அதனுடன் காங்கிரசும் சேர்ந்தால் பிஜேபி ஐ வீழ்த்த முடியும் என்று ஆலோசனை வழங்கினார். அதிலும் அதிக பயனை அடைந்தது ஊழல் திலகம் லாலு தான். தன் மகனில் ஒருவரை துணை முதல்வராகவும் ஒருவரை மந்திரியாகவும் ஆக்கிவிட்டார். உ பி யில் அகிலேசுக்கே ஆதரவு குறைவு. கூடவே அக்கட்சியில் பிளவு வேறு. அதனுடன் வெத்து காங்கிரசும் சேர்ந்தால் வெற்றி கிடைக்கும் என நினைத்தால் எப்படி நடக்கும். அவர்கள் கூட்டணியின் கூத்தே பிஜேபி க்கு அதிக இடங்களை பெற்றுத் தந்து விட்டது....
Rate this:
Share this comment
Cancel
20-மார்-201715:51:49 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அவன் உங்க தலைவி , துணை தலைவர் போல வெளிநாடு சுற்றுலா சென்றிருப்பார். திரும்ப வருவார் , கவலை வேண்டாம், அடுத்தடுத்து நடக்கப்போகும் தேர்தலிலும் நல்ல திட்டம் வகுத்து ராகுலை பிரச்சாரம் செய்ய வைத்து, முட்டையை வாங்கி கொடுப்பார்.
Rate this:
Share this comment
Cancel
20-மார்-201715:50:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பல முட்டாள்கள் இன்று கூவுவது என்னவென்றால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் பிஜேபியை தோற்கடித்து விடலாம். அடேய் உங்களுக்கு கொள்கை என்று ஒன்று இல்லையா ? அப்படி இல்லையென்றால் கட்சிகளை கலைத்துவிட்டு அனைவரும் ஓர் கட்சியில் வாருங்கள். அப்படி செய்தாலே மக்கள் உங்களை சந்தர்ப்பவாதிகள் என்று புரிந்து கொண்டு துரத்தி விடுவார்கள்.
Rate this:
Share this comment
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-மார்-201717:46:56 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAMஅப்படினா, சிவசேனை, கூட்டணியை முறித்துக்கொள்ள உனது கட்சி தயாராடா?......
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
20-மார்-201718:09:42 IST Report Abuse
madhavan rajanஎல்லா எதிர்க்கட்சிகளின் ஒரே கொள்கை பிஜேபி ஐ தோற்கடிக்க வேண்டும் என்பது தான். நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றி இந்தக் கட்சியும் பேசுவதில்லை. மதவாதம் என்று கூறிக்கொண்டு இந்துக்களின் ஓட்டுக்களை பெற்று ஆட்சிக்கு வர நினைக்கும் இந்தக் கட்சிகளை சிறுபான்மையினர் இப்போதெல்லாம் நம்புவதுமில்லை, மதிப்பதுமில்லை....
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-மார்-201718:59:56 IST Report Abuse
Cheran Perumalபச்சை, அப்படிக்கேளு பச்சை பச்சையாய்....
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-மார்-201719:27:03 IST Report Abuse
K.Sugavanamபெரிய அறிவாளி சொல்லீட்டீர்.. அப்பீல் கிடையாது......
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-மார்-201714:26:56 IST Report Abuse
Pasupathi Subbian சிறுபான்மை மதத்தவர்கள், தாங்களும் இந்தியாவில் ஒரு பகுதி என்பதை மறந்து, எதோ தாங்கள் மற்றவர்களை விட முக்கியமானவர்கள் என்று நினைக்கவைத்தது காங்கிரஸ். ஏறத்தாழ சிறுபான்மையினரை கேட்டுத்தான் எந்த முடிவுகளையும் எடுக்கவேண்டும் என்று நிபந்தனை செய்யும் அளவுக்கு இவர்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்துக்கள் என்று சொல்லுவது கூட தவறு என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்துக்கள் தங்களின் மதத்தை பற்றி பேசினாலே , எதோ மற்றவர்கள் இவர்களை கொடுமை செய்வதாக நினைக்கவைத்தது. தாங்களும் உரிமை பெற்றவர்கள் என்று ஹிந்துக்கள் நினைப்பதுகூட பாபமாக கூறப்படும் நிலை. சிறுபான்மையினர் என்று மாற்று மதத்தவரை கூறியது. ஏதோ அவர்களுக்கு தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று நினைக்கவைத்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
20-மார்-201714:22:15 IST Report Abuse
Selvaraj Thiroomal மோடி நிதிஷ் வெற்றிக்கு பிரசாந்த் காரணமில்லை என்று ஒரேபோடாக போட்டுவிட்டால் அடுத்த தேர்தலில் அவரது வேலைக்கு கூலியை குறைக்கலாம். அரசியல் வியாபாரமாகி கார்ப்பரேட் கலாசாரம் வேரூன்றிவிட்டது என்பதற்கு பிரசாந்த் ஒரு சான்று அவ்வளவுதான்
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
20-மார்-201718:11:51 IST Report Abuse
madhavan rajanதனக்கும் கொஞ்சம் சுய அறிவிருந்து, ட்யூஷனுக்கும் போனால் நல்ல மார்க்கு வாங்கலாம். ஒன்றுமே தெரியாமல் ட்யூஷனுக்குப் போனால் முதல் மதிப்பெண் வரும் என்று நினைத்தால் அது யார் தவறு. ?...
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
20-மார்-201713:58:00 IST Report Abuse
kuppuswamykesavan " மக்கள் சக்தியின் முன் ஒரு அரித்மெட்டிக்கும் நிக்காது ". இது போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் நடக்குமா?.
Rate this:
Share this comment
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201712:04:39 IST Report Abuse
A. Sivakumar.காசுக்கு விலைபோகும் அடிமை நிலையிலேயே தொடர்ந்து இருப்போமா இல்லை திருட்டு திராவிடத்துக்கு எதிராகச் சிந்தித்து வாக்களிப்போமா என்பதை தேர்தல் முடிவுதான் சொல்லணும்....
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
20-மார்-201713:40:21 IST Report Abuse
 ஈரோடுசிவா சந்தர்ப்பவாதிகளையும் , பித்தலாட்ட அரசியல்வாதிகளையும் மக்கள் இனம் கண்டுகொண்டதன் விளைவுதான் பா .ஜ .கவின் இந்த அபார வெற்றி... இனி இந்தியா நிமிர்ந்து நிற்கும் என்பது உறுதியாகி விட்டது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை