10 points behind Ilayaraja - SPB clash | இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் - 10 முக்கிய அம்சங்கள் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இளையராஜா - எஸ்.பி.பி., மோதல் -
10 முக்கிய அம்சங்கள்

சென்னை:தமிழ் சினிமாவில் இன்றைய ஹாட் டாப்பிக்காக போய் கொண்டிருப்பது இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான காப்பி ரைட்ஸ் பிரச்னையை பற்றியது தான். இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் இனி இளையராஜா இசை அமைத்த பாடல்களை பாட மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது இசையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ilayaraja, spb, இளையராஜா, எஸ்பிபி.,இளையராஜா - எஸ்.பி.பி. இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பல்வேறு தரப்பில் பலவிதமான கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இளையராஜா ஏதோ பணத்தாசைப் பிடித்தவர் போலவும் எஸ்.பி.பி. அவர்கள் ஆசைகளை துறந்தவர் போலவும் இணையதளத்தில் கருத்துகளை கூறி வருகிறார்கள். இதுப்பற்றிய 10 முக்கிய அம்சங்கள் என்னவென்று இங்கு பார்ப்போம்...
01. இளையராஜா - எஸ்பிபி., இடையேயான மோதல் ஏதோ ராயல்டி பிரச்னை என்று பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்லப்போனால் இருவருக்கும் கடந்த 6 மாத காலமாகவே ஒரு வித பனிப்போர் நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.
02. கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த இளையராஜாவின் இசை கச்சேரிக்கு 7 லட்சம் வாங்கி கொண்டிருந்த எஸ்பிபி., 20 லட்சம் தந்தால் தான் வருவேன் என அதிரடியாக தன் சம்பளத்தை உயர்த்தி கறாராக நடந்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே புறக்கணித்து அமெரிக்கா போகாமல் இருந்துவிட்டாராம், அதன் வெளிப்பாடு தான் இந்த பிரச்னை என்கிறார்கள்.


03. இதுஒருபுறம் இருக்க இளையராஜா- எஸ்.பி.பிக்கு இடையேயான பிரச்சனைஅவர்களுக்கிடையேயானது அல்ல, அவர்களின் வாரிசுகளுக்கிடையேயான பிரச்சனை என்று கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவை போன்றே, எஸ்.பி.பி.சரணும் தனது தந்தையை வைத்து உலகம் முழுக்க கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளார். அந்த போட்டியின் வெளிப்பாடு தான் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
04. காப்புரிமை சட்டம் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டது. சட்டப்படி, எந்த ஒரு பாடலையும் கேசட், சிடி, அல்லது நவீன கால ஐடியூன்ஸ் போன்றவை மூலமே விலைக்கு வாங்க வேண்டும். ரேடியோவில், டிவி சேனலில் கேட்கும் போது அந்தந்த நிறுவனங்கள் அதை விலை கொடுத்துத் தான் வாங்குகின்றன. அப்படிபார்க்கும் போது சட்டப்படி இளையராஜா செய்தது சரி தான்.
05. ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீதான உரிமையை நிலை நாட்டுவதையே தவறு என்றும் பேராசை என்றும் எப்படி சொல்ல முடியும்.
06. எஸ்பிபி.யின் வெளிநாட்டுப் பயணம் ஏதோ மக்களை மகிழ்விக்கும் இலவசப் பயணம் அல்ல. நூறு சதவீதம் பணம் வசூலிக்கும்இசை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சியை ரசிக்க வரும் மக்களிடமிருந்து வசூலிக்கும் பல லட்சம், மில்லியன் டாலர்களிலிருந்து, பாடுகிறவர்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு என எல்லாத் தரப்புக்கும் பணம் தருகிறார்கள். அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளியான இளையராஜா, தனக்கான உரிமையை நிலை நாட்ட முயன்றால் மட்டும் 'பேராசையா'? என்ற கேள்வி எழுகிறது.

Advertisement


07. இந்த நோட்டீஸ், வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என்று இளையராஜா தரப்பு கூறிவிட்டது கவனிக்கத்தக்கது.
08. தனது பாடல்களை பாட பணம் தர வேண்டும் என்று இளையராஜா கேட்பது சாதாரண மக்களை பாதிக்காதா என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது. காப்புரிமையை பற்றியெல்லாம் பேசினால் இளையராஜாவின் இசையை கேட்பது குறைந்துவிடும் என்பது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்.
09. தனக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை தான் மட்டும் அனுபவிக்காமல், அதில் ஒரு பகுதியை சம்பந்தப்பட்ட பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு தருவதாக இளையராஜா கூறியிருக்கிறார்.
10. ராயல்டி கலாச்சாரத்தை ஏதோ இளையராஜா மட்டும் தான் கேட்கிறார் என்ற தவறான கண்ணோட்டம் உள்ளது. உண்மையை சொல்லப்போனால், ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் தங்களுக்கான ராயல்ட்டியை பெற்ற இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhimarao Vadhirajan - Bangalore,இந்தியா
21-மார்-201722:50:34 IST Report Abuse

Bhimarao Vadhirajanமார்க்கெட் போய்விட்ட நிலையில், தன் பழைய பாடல்களின் காப்புரிமையை ராஜா நாடுவதில் தவறில்லையே

Rate this:
Muralikrishnan.G - chennai,இந்தியா
21-மார்-201722:16:12 IST Report Abuse

Muralikrishnan.Gயாரு எழுதிய பாட்டை யாரு வேனா பாடலாம். காத்துக்கு வேலி போட முடியாது

Rate this:
Rukmangathan - chennai,இந்தியா
21-மார்-201721:44:38 IST Report Abuse

Rukmangathanகாப்புரிமை யாருடையது.... இசைக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு இசையமைத்த இசை அமைப்பாளருடயதா... இல்லை இசை அமைப்பாளரை அந்த வேலைக்காக பணிக்கு அமர்த்தி பணத்தை முதலீடு செய்த தயாரிபாளருடயதா? பாடலாசிரியருக்கும், பாடியவருக்கும் பங்கு உண்டா? இசையமைப்பாளருடயது என்றால், இசை வெளியீட்டு நிறுவனத்திற்கு பாடல்களை இசையமைப்பாளர் தானே விற்க வேண்டும்? தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பு நிறுவனம் எப்படி விற்கிறது? சரி, ஐந்து வருடத்திற்கு பாடல்களுடைய காப்புரிமையை இசை வெளியீட்டு நிறுவனம் பெற்றுகொண்டால், ஐந்து வருடத்திற்கு பிறகு பாடல்கள் யாருக்கு சொந்தம்? முதலீடு செய்த தயரிப்பாளருக்கா அல்லது இசை அமைப்பாளருக்கா? ஒப்பந்தம் எப்படி போடப்பட்டுள்ளது? பாடல் எப்படி உருவாகிறது? தயாரிப்பாளர் பணம் கொடுத்து, அதை இசை அமைப்பாளர், பாடலாசிரியருக்கும் மற்ற கலைங்கர்களுக்கும் பிரித்து கொடுத்து, லாபத்தை பெற்றுக்கொண்டு தானே உருவாகிறது. இங்கே இசை மட்டும் விற்கப்படவில்லை, பாடல்களும் தானே விற்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இசை அமைப்பாளருக்கு மட்டும் எப்படி இது சொந்தம் ஆகும். ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடமும் இளையராஜா இந்த பாடல்கள் எனக்கு தான் சொந்தம் என்று ஒப்பந்தமிடுள்ளாரா? அப்படி உள்ளது எனில் அவர் கேட்பது சரி தான். SPB ராயல்டி கொடுத்துவிட்டு தான் நிகழ்ச்சி நடத்த வேண்டும். இசை அமைப்பாளர் ராயல்டி தொகை பெறுகிறார் எனில், அவர் தொகையை பாடல் எழுதிய பாடல் ஆசிரியருக்கு ஒரு பகுதியை பிரித்து கொடுப்பாரா? இசை ஒரு படைப்பு எனில், கவிதையும் பாடலும் கூட ஒரு படைப்பு தானே? பாடலாசிரியர் அவர் பாடலுக்கு பணம் பெற்று கொண்டார், அதனால் அவருக்கு உரிமை கிடையாது என்றால், இசை அமைப்பாளரும் தானே அவர் செய்த வேலைக்கு பணம் பெற்றுக்கொண்டார். அப்படியெனில் இசை அமைப்பாளர் மட்டும் எப்படி உரிமை கோர முடியும்? சினிமா துறை ஒப்பந்தகளும் சட்டமும் என்ன சொல்கிறது? அமெரிக்க போன்ற நாடுகளில் சினிமா அல்லாத இசை தட்டுக்கள் பாடகர்களாலும், இசை நிறுவனங்களாலும் உருவாக்கபடுகிறது. இசையின் மொத்த உரிமையும் அதை தயாரித்த கம்பெனிகளுக்கே உரியதாகும். பெருவாரியான பாடகர்களே அந்த கம்பனிக்கு உரிமையாளராக இருப்பாளர்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எழாது. சில சமயங்களில் இசை நிறுவனம் பாடகர்களுடன் ஒப்பந்தமிட்டு, இசை தட்டை வெளியிடுவார்கள். இந்த நிலையில், ஒப்பந்தத்தின் படி இசை நிறுவனமானது ராயல்டி தொகையின் ஒரு பகுதியை பாடகருக்கு பிரித்து கொடுக்கும். வேறு நிறுவனமோ அல்லது தனி நபரோ இந்த இசையை/பாடலை பயன் படுத்தினால், நிறுவனத்திடமிருந்து அனுமதியும் பெற வேண்டும், அதற்க்கான கட்டணமும் செலுத்த வேண்டும். இதுபோன்று நம்மூர் இசை அமைப்பாளரும் தனியாக ஆல்பங்களை வெளியிட்டிருந்தால், அதற்கான ராயல்டி அவருக்கு சேராமல் இருந்தால் அவர் ஒப்பந்தத்தின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சினிமா பாடலுக்கு இசை அமைக்கும் இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடல்களுக்கும் உரிமை கோருகிறார் எனில் தன் படத்திற்காக இசை அமைப்பாளரை நியமித்து இசையை வெளியிட்ட தயரிப்பளுக்கோ அல்லது தயாரிப்பு நிறுவத்திற்கோ உரிமை இல்லையா? அப்பொழுது இங்கே தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு என்ன? இசை அமைப்பாளர் அவர் இசை அமைத்த பாடலுக்கு உரிமை கோரும் போது, ஏன் ஒரு இயக்குனர் அவர் இயக்கிய படத்துக்கு உரிமை கோரக்கூடாது? கேட்டால், தயாரிப்பாளர் சும்மா இருப்பாரா? நான் இங்கே இளையராஜா செய்தது சரியா இல்லை SPB அவர் வலைப்பக்கத்தில் பதிவிட்டது சரியா என்பதை வாதிட இதை எழுதவில்லை. ஒப்பந்தத்தின் படி இளையராஜாவுக்கு உரிமை உண்டு எனில், அவரின் சட்ட நடவடிக்கை சரி. அதே போல் அதை மதித்து சட்டப்படி அவருடைய பாடல்களை பாடமாட்டேன் என்று சொன்னதும் சரி தான். இன்னும் SPB அவர்களின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் முடியாத நிலையில், அவருடைய ரசிகர்கள் நிகழ்ச்சிற்கு வந்து ஏமாற்ற்றம் அடையாத வகையில் முன்னரே அறிவித்திருக்கிறார். அதில் தவறு ஏதும் இல்லை என்றே தெரிகிறது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் பதில் தர முடியும் எனில், இந்த பிரச்சனைக்கு சரியான பதில் உங்களுக்கே விளங்கும்.

Rate this:
thamashwala - chennai,இந்தியா
21-மார்-201720:17:52 IST Report Abuse

thamashwala இளையராஜா என்கிற genius ஐ கொண்டாடுங்கள் என்று நான் சொல்லவில்லை. தயவு செய்து சேற்றை வாரி இறைக்காதீர்கள். ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசை அமைப்பது என்பது சாதாரண விஷயமில்லை. நம்மில் உள்ள எத்தனை பேருக்கு உற்ற தோழனாகவும் மனநிம்மதி தரும் மருந்தாகவும் இருந்துவரும் இசை கலைஞனை , அவருக்கும் சக கலைக்கருக்கும் நடக்கிற வணிக போருக்குள் நாம் தலையிட்டு சகட்டு மேனிக்கு விமரிசிப்பது சம காலத்தில் வாழ்ந்து வரும் மாபெரும் கலைஞனை இழிவுபடுத்தும் செயலாகும். பொதுவாக இளையராஜாவை பற்றி ஒரு கருத்து, " அந்த ஆளுக்கு கர்வம் ", என்று. ஒரு சாதாரண கருத்தை பதிவு செய்யும் நம்மில் சிலரிடம் கர்வம் குடிகொண்டிருக்கும் பொது, அசாதாரண இசையை நமக்கு அள்ளிக்கொடுத்த இசை ஞானிக்கு கர்வம் இருக்கக்கூடாதா? அவரின் கர்வம் நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துக்கொண்டதா. "வாடி என் கப்பக்கிழங்கே" என்கிற குப்பை பாட்டுக்கு value add செய்து கொடுத்தவரை வசை பாடும் கங்கை அமரன் அவர்களே , உமக்கு நாவடக்கம் தேவை. காரணமே தெரியாமல் கும்பலோடு சேர்ந்து தர்மடி கொடுக்கும் கூட்டமாக நாம் இருக்கிறவரை, நம்மை முட்டாளாக்கும் கூட்டமும் இருந்து கொண்டு தானிருக்கும்.Let us not be judgemental. உள்ளதை உள்ளபடி பார்க்கக்கூடிய திறனை, சமூக வலைதளங்களை வலம் வருபவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இளையராஜாவின் இசையை ரசிப்போம். அவர் மீது வசை பாடுவதை தவிர்ப்போம். மல்லாக்க படுத்து எச்சில் உமிழும் கலாச்சாரத்திலிருந்து விடுபடுவோம். "தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ ?" தொகையான இந்த பல்லவிக்கு கிறங்க செய்யும் tune இல் சஞ்சாரம் செய்ய போகிறேன். நன்றி நண்பர்களே. ..Thamashwala (chandramouli)

Rate this:
soundararajan - Udumalaipettai,இந்தியா
21-மார்-201723:21:54 IST Report Abuse

soundararajanமிக சரியாக சொன்னீர்கள். பாராட்டுக்கள்....

Rate this:
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
21-மார்-201716:35:08 IST Report Abuse

Dinesh Pandianவெப்ப மரத்துக்கு patent கேட்ட அப்ப என் எல்லாரும் குதிக்குறாங்க? இப்போ புரியுதா யார் சரினு ?

Rate this:
Venkat - Chennai,இந்தியா
21-மார்-201715:17:25 IST Report Abuse

Venkatஇளையராஜா சார் , அப்படியே இந்த தனியார் பஸ்ஸில் உங்க பாட்டை போட்டு காதை பிளக்குறானுங்க.. நிம்மதியா அமைதியா போக முடியவில்லை. அவனுங்களிடமும் ராயல்டி கேளுங்க... உடனே நிறுத்திடுவானுக ... எங்களுக்கும் நிம்மதி.. ஒரு கருதும் இல்லாத பாடல்களை மியூசிக் கருவிகளின் இரைச்சலில் கேட்கும்போது கோபமும் எரிச்சலும் வருகிறது... உங்க பாடல்களினால் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மை உண்டா??? சின்ன பசங்க எல்லாம் காதல் மண்ணு என்று அலையறானுங்க ... கருத்துள்ள எம்.எஸ்.வி. கே.வி மஹாதேவன் பாடல்களை கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது.. காதல் பாடல்கள் கூட கண்ணியமாக இருந்தது. உங்கள் கழுத்தை குரலும் நாராசம்..

Rate this:
soundararajan - Udumalaipettai,இந்தியா
21-மார்-201723:24:18 IST Report Abuse

soundararajanஅவர்கள் இருவருக்குள் நடக்கும் வணிகப்போருக்கு நடுவே, உங்களின் ஒருதலை பட்சமான தனி மனித விமரிசனம் தான் நாராசம்......

Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
21-மார்-201714:59:23 IST Report Abuse

Tamilselvanஇளையராஜா செய்வது அல்பத்தனம். அவர் பலரின் பாடல்களை பல நாடுகளில் பாடி இருக்கிறார் . அதற்க்கு ராய்லட்டி கொடுத்தாரா ? பாடல் பலரின் உழைப்பு. அதற்கான பணத்தை ஏல்லோரும் பெற்று விட்டனர். இப்போது பாலா தனது முயற்சியால் சென்று உழைத்து பணம்சம்பாதிர்கிறார். அதில் பங்கு கேட்பது ,பாலாவின் உழைப்பை திருடுவதற்கு சமம்.

Rate this:
soundararajan - Udumalaipettai,இந்தியா
21-மார்-201723:26:36 IST Report Abuse

soundararajanSPB ஒன்றும் இலவசமாக கச்சேரி செய்யவில்லை. மில்லியன் களில் பணம் விளையாடுகிறது. இது சட்ட ரீதியான ஒன்று. SPB இதை வேண்டும் என்றே, தன் மீது தப்பே இல்லை என்பதுபோல நாடகம் ஆடுகிறார்....

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201714:53:11 IST Report Abuse

Pasupathi Subbianதிரு எஸ் பி பாலா சுப்பிரமணியம் , ஒரு ஆந்திராகாரர் , அடிமை பெண் படத்திற்காக , திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் , திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையமைப்பில் பாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது, மோதிர கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இவர், அன்றய நிலையில் புது குரலுக்கு ( டி சௌந்திரரராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கணீர் பாடகர்களுக்கு மாறாக ) தேடுதல் இருந்தது, சங்கீதமே தெரியாத இவர், பல பல படங்களில் பாடி, சங்கராபரணம் என்ற படத்தில் முறையான சாஸ்திரீய இசையில் பாடி , உலக புகழ் பெற்றார். இவருக்கு திரு இளையராஜா அவர்களின் அறிமுகத்தை வைத்து, பற்பல நிலவு பாடல்கள் , அவரின் இசையில் பாடி மக்களை அசத்தினார். இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர், ஒருவரை ஒருவர் ஒருமையில் அழைத்துகொள்ளும் அளவுக்கு நட்புடன் இருந்தனர். ஆனால் இவரின் குமாரர் திரு எஸ் பி சரண் அவர்களோ , மேலைநாட்டு சென்று படித்தவர், தந்தையைப்போல பிரபலம் ஆகா இவர்கள் முடியவில்லை. திரு கங்கை அமரன் அவர்களின் குமாரர்களுடன் சேர்ந்து கும்மாளம் அடிப்பது , பற்பல பிரச்சனைகளில் மாட்டுவது என்பது வழக்கமாக இருந்தார். அவர்களுடன் சேர்ந்து சினிமா தயாரிப்பில் , பல படங்கள் தயாரித்ததில் சில படங்கள் வெற்றிபெற்று வருமானம் சேர்ந்தது. இதை தவிர தந்தையார் பாடி சேர்த்ததை இவர் மேலும் சேர்க்க இசை கச்சேரிகளை வெளிநாடுகளில் நடத்துவது என்ற தொழிலை மேற்கொண்டுள்ளார், இந்த உரிமை பிரச்சனை என்பது ஒன்றுமே இல்லை , நிகழ்ச்சி நடத்துபவர்கள் , திரு இளையராஜா அவர்களை அணுகி எதோ பெயருக்கு ஐந்தோ பத்தோ லட்சம் கொடுத்து இருந்தாலே , அவரின் ஆட்சேபனை வந்திருக்காது. மேலும் இந்தியாவின் உள்ளே இவர்கள் பாடி இருந்தாலும் திரு இளையராஜா அவர்கள் ஆட்சேபனை செய்திருக்கமாட்டார். கோடிக்கணக்கில் இவரது பாடல்களை மேடைகளில் ஒளிபரப்பி சம்பாதிக்கும் நோக்கில் இருக்கும் இவர்கள் . ஒரு சிறு தொகையை கூட இவருக்கு காணிக்கையாக செலுத்துவதற்கு என்ன சிரமம்.

Rate this:
bala - tirunelveli,இந்தியா
21-மார்-201714:22:23 IST Report Abuse

balaஇங்கே கருத்து கூறும் நண்பரகள் இசைக்கான காப்புரிமை பற்றியோ அதில் உள்ள விளக்கங்கள் பற்றியோ தெரியாதவர்கள் சொல்லும் விமர்சனங்களாக தெரியவில்லை. இளையராஜா மீது கொண்ட ஏதோ ஒரு வெறுப்பின் அடையாளமாக தான் தெரிகிறது. அது எந்த மாதிரியான வெறுப்பு என்று கருத்து கூறும் நண்பர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். இது ஒரு MSV அவர்கள் பற்றியோ ரஹ்மான் பற்றியோ வெளியாகி இருந்தால் கண்டிப்பாக பல பேர் இல்லை எல்லோருமே கூட ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்று தோணுகிறது. இது இசைக்கான ராயல்டி பற்றிய விமர்சனமாக இல்லாமல் அவரை புண்பட மட்டுமே வைக்கும் விமர்சனமாக தோன்றுகிறது. ஒரு நண்பர் கூறுகிறார் நான் பாத்ரூமில் பாடினேன் பணம் கொடுக்கணுமா என்று, இன்னொருவர் காதிலிக்காக பாட்டு பாடினேன் அதுக்கும் பணம் கொடுக்கணுமா என்று,.. நண்பர்களே அவர் மிக நல்ல தமிழ் இசை அமைப்பாளர் மேலும் சொல்லப்படும் ராயல்டி அந்த பாடலுக்கு சொந்தக்கார்களுக்கு பகிரப்படும் ஒன்று அவருக்கு மட்டுமில்லை. ஒரு தமிழன் கருத்து தரமானதாக மட்டுமே இருக்கவேண்டும்

Rate this:
soundararajan - Udumalaipettai,இந்தியா
21-மார்-201723:28:33 IST Report Abuse

soundararajanநன்றாக சொன்னீர்கள்....

Rate this:
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
21-மார்-201713:54:34 IST Report Abuse

தி.இரா.இராதாகிருஷ்ணன் ஒருவருடைய திறமையை வைத்து அடுத்தவன் காசு பார்க்கலாம், அவர் காசு பார்க்கக் கூடாதா?...எந்த ஊரு நியாயம்?...

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement