ஆர்.கே.நகரில் தி.மு.க.,வுக்கே வெற்றி: சர்வேயை காட்டி ஸ்டாலின் உற்சாகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் தி.மு.க.,வுக்கே வெற்றி: சர்வேயை காட்டி ஸ்டாலின் உற்சாகம்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 ஆர்.கே.நகர் தி.மு.க.,  வெற்றி , சர்வே , ஸ்டாலின்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக, வேட்பாளர் மருது கணேஷ் அறிவிப்புக்குப் பின், தி.மு.க., தரப்பில், அவசர சர்வே ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. அதில், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் கட்டாயம் வெற்றி பெறுவார் என்றும் சொல்லப்பட்டிருப்பதால், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் சந்தோஷமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.


எளிமையானவர் மருது கணேஷ்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கட்சியினரை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து, கட்சியின் மூத்தத் தலைவர்கள் சிலரை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசினார் ஸ்டாலின்.
அப்போது, அவர்களிடம் அவர் பேசியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வேட்பாளர் மருது கணேஷ், எளிமையனவராக இருக்கிறார் என்றதும், பலரும் கட்சி வேட்பாளர் பலவீனமாக இருப்பதாகச் சொல்கின்றனர். இதுதான், தி.மு.க.,வுக்கு களத்தில் பலமாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் நேர்காணலுக்கு வந்திருந்த போதே, அவர் தெளிவாக எல்லா விஷயங்களையும் சொல்லி விட்டார். என்னிடம் செலவழிக்க பணம் கிடையாது.
போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், கையில் வைத்திருக்கும் சொற்ப பணத்தை வைத்துத்தான் செலவு செய்வேன். எனக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. எனக்காக குறைந்த அளவில் செலவழிக்க, கட்சியிலேயே சில நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர். மற்றபடி, கட்சியை நம்பித்தான் நான் களமிறங்க வேண்டும் என்று, வெளிப்படையாக உள்ளதை பேசினார்.
நேர்காணலுக்கு வருகிற அனைவருமே, பொய்யைத்தான் பேசுவர். ஆனால், மருது கணேஷ் மட்டுமே, உண்மையை பேசினார். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது, கட்சியின் கடமை; நம் ஒவ்வொருவரின் கடமை. தேர்தல் செல்வை கட்சியே ஏற்றுக் கொள்ளலாம். அதில் தவறில்லை.


ஆட்களை அழைத்து வர தேவையில்லை


இந்த இடைத்தேர்தலுக்கு கட்சியினரை தமிழகம் முழுவதிலும் இருந்து வரவழைக்கத் தேவையில்லை. கூட்டம் சேர்ந்தால், முறையான பணி நடக்காது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும், முறையாக தேர்தல் வேலை பார்த்தால் போதும். அதனால், அனைத்து மாவட்டச் செயலர்களும், தங்கள் தங்கள் மாவட்டங்களில் இருந்து ஆர்.கே.நகருக்கு ஆட்களை அழைத்து வர வேண்டியதில்லை. தேர்தல் நெருக்கத்தில், மாவட்டச் செயலர்கள் மட்டும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்தால் போதும்.
மருது கணேஷ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டப் பின், எடுக்கப்பட்ட அவசர சர்வேயிலும் கூட, ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க.,வுக்கே கட்டாய வெற்றி என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், தி.மு.க., யாரையும் பார்த்து அஞ்ச வேண்டியதில்லை. செய்ய வேண்டிய முறையான பணிகளை செய்தாலே போதும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:50:58 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப எல்லாம் சந்தோஷப்பட்டுக்க கூடாது... குதிரையின் மூக்கு வீன்னிங் போஸ்ட்டை தொடும் வரைக்கும் ரொம்ப அலட்டிக்க கூடாது...
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
21-மார்-201707:28:38 IST Report Abuse
SANKAR ஆளுங்கட்சியின் தலைவி சசிகலா ஊழல்குற்றத்திற்காக சிறையில்... ஆளுங்கட்சி வேட்பாளரோ பொருளாதார குற்றத்திற்கு 25 கோடி அபராதம் கட்டவேண்டிய குற்றவாளி,...எனவே அவருக்கு ஓட்டு போட யாரும் விரும்ப மாட்டார்கள்... அடுத்து ஆளுங்கட்சியின் மாற்றணி தலைவர் பன்னீர் ஊழலுக்கு கூட்டாளி...அவர் மீது விசாரணை வைத்தால் அவரும் கம்பி எண்ணலாம்... அவருடைய வேட்பாளர் மதுசூதனனோ முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி TN சேஷன் சென்னை ஹோட்டலில் தங்கி இருந்தபோது 100 ரௌடிகளுடன் அவரை தாக்கப்போன ரவுடி..பல மிரட்டல் வன்முறையில் ஈடுபட்டவர் ..எனவே நிச்சயம் சுய அறிவு உள்ளவர்கள் யாரும் தினகரனுக்கோ அல்லது மது சூதனனுக்கோ ஓட்டு போட மாட்டார்கள்... ஆனால் தினகரன் மற்றும் பன்னீர் அணியில் பண பட்டுவாடா நிச்சயம் நடக்கும்... இல்லா விட்டால் அவர்கள் டெபாசிட் கூட தேறாது... அதே சமயம் அவரை எதிர்த்து போட்டி இடும் மருது கணேஷ் சாதாரணமானவர்... அதே தொகுதியை சேர்ந்தவர்... அங்கு வாழும் மக்களும் சாதாரண மக்கள்.. எனவே அவருக்கு அங்கு ஆதரவு இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை...
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
21-மார்-201712:48:44 IST Report Abuse
Renga Naayagiகனடாவில் நல்ல கனவு காண்கிறீர்கள் ......
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
21-மார்-201701:55:27 IST Report Abuse
பொன்மலை ராஜா எதற்கு தேர்தல்? சட்டமன்ற உறுப்பினர் பதவி எதற்கு? எடப்பாடி முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்து ஜனநாயகம் காத்தீர்களா? அல்லது சட்டசபையை நடத்த விடாமல் செய்வதாக சொல்லி எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்காமல் ஒதுங்கி கொண்டீர்களா? நாட்டில் கூட்டணிகளை கல்வி வியாபாரிகளும் மணல் கொள்ளையர்களும் சாராய அதிபர்களும் தான் தீர்மானிக்கிறார்கள் என்பதை தினகரனுடன் இரகசிய ஒப்பந்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்ய தவறிய திமுகவின் செயல் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்திருக்க கூடாது. சட்டசபையை நடத்தவிடாமல் செய்ய அமளி செய்பவர்கள் ஏன் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
21-மார்-201700:45:54 IST Report Abuse
LAX இதுபோன்ற தருணங்களில், நாங்கள் எப்போதும் கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை என்று கூறும் தானை & கோ. 'செயல்படாத தலைவர்' தொளபதியை, 'செயல் தலைவராக' பதவி உயர்வு செய்தபிறகு, கருத்துக் கணிப்புகளை நம்பத்தொடங்கிவிட்டதோ..?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-மார்-201700:32:06 IST Report Abuse
மலரின் மகள் ஓட்டுக்கள் சித்தருவதால் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh Srinivasa Raghavan - Chennai,இந்தியா
21-மார்-201700:07:46 IST Report Abuse
Venkatesh Srinivasa Raghavan இரட்டை இல்லை சின்னம் சசி தரப்புக்கு கிடைத்தால், தினகரன் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. இரண்டாம் இடத்தில திமுக வரும். ஒரு வேலை சின்னம் முடக்க பட்டால், திமுக வெற்றி பெற வாய்ப்பு அதிகம். சசி தரப்பு இரண்டாம் இடத்திற்கு வரும். எந்த நிலையிலும் பன்னீர் தரப்பு 3வது இடத்திற்கு மேல வருவதற்கு வாய்ப்பு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-மார்-201722:57:16 IST Report Abuse
R. Vidya Sagar அரிச்சந்திரன் பரம்பரையாக இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Arachi - Chennai,இந்தியா
20-மார்-201722:30:43 IST Report Abuse
Arachi We can strongly opine that the victory for DMK is inevi
Rate this:
Share this comment
Cancel
Amma_Priyan - Bangalore,இந்தியா
20-மார்-201722:03:02 IST Report Abuse
Amma_Priyan தன்னையே அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி சந்தோஷப்படும் ஒரே ஒரு நடை பயணம்
Rate this:
Share this comment
Cancel
RAJA - TRICHY,இந்தியா
20-மார்-201721:59:37 IST Report Abuse
RAJA ஆரம்பத்தில எல்லாம் நல்ல தான் போயிகிட்டுஇருக்கும் முடிவிலதான் சட்டசபை தேர்தல் மாதிரி நடக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை