தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்: அங்க அடையாளங்கள் மாற்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தனுஷ் வழக்கில் புதிய திருப்பம்: அங்க அடையாளங்கள் மாற்றம்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Dhanush, தனுஷ்,

மதுரை: நடிகர் தனுஷ் அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் மாற்றப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன் தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களது மகன், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மேலூர் கோர்ட், நடிகர் தனுசை நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்தும், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரியும் நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அங்க அடையாளங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
நடிகர் தனுஷ் சார்பில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நடிகர் தனுஷ் மதுரை, ஐகோர்ட் கிளையில் நேரில் ஆஜரானார். தொடர்ந்து அரசு மருத்துவர் முன்னிலையில் தனியறை ஒன்றில் தனுஷூக்கு அங்க அடையாளங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.


மாற்றம்:

இந்நிலையில் இன்று (மார்ச்-20ல்) கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ அறிக்கையில், நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்கள் நவீன சிகிச்சை முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இவ்வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை மார்ச்-27 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:24:07 IST Report Abuse
Balaji இருக்கும் பரபரப்புக்களுக்கு இடையில் இவனுக்கும் வேற அப்பப்போ கவனத்தை சிதற வைப்பதற்காக திட்டமிட்டு இவர்களைப்பற்றிய செய்திகள் வருகிறது.........
Rate this:
Share this comment
Cancel
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
21-மார்-201711:21:31 IST Report Abuse
Nakkal Nadhamuni இவரோட ஒரே ஒரு அங்கத்தை மாத்தியிருந்தா இவரை தன்னோட மகன்னே அவங்க சொல்லியிருக்க முடியாது...
Rate this:
Share this comment
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
21-மார்-201710:52:42 IST Report Abuse
Stalin ஒரு மண்ணும் திருப்பம் ஏற்படாது, போய் நம்ம அடிப்படை வசதிக்கு போராடுவோம் நிறைய கருமம் பிடித்த தமிழ்நாட்டில்
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
21-மார்-201710:36:35 IST Report Abuse
நக்கீரன் இந்த பய பயங்கர கிரிமினலா இருப்பான் போலிருக்கே.
Rate this:
Share this comment
Cancel
mampop - madurai,இந்தியா
21-மார்-201710:36:27 IST Report Abuse
mampop விசு, கஸ்துரிராஜா போன்றவர்கள் மற்றவர் வாழ்க்கை விளையாடுவதே தொழில்
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
21-மார்-201710:33:03 IST Report Abuse
Sami இந்த மாதிரி சினிமாக்காரன் செய்திகளை எல்லாம் மெனெக்கெட்டு தலைப்பு பக்கத்தில் போட்டு பாடாய் படுத்தும் இந்த மாதிரி தினசரிகளை, அந்த செய்தியை படிச்சுட்டு கருத்து எழுதும் அறிவாளிகளும், இவை எல்லாத்தையும் பார்த்துட்டு இங்கே கோவப்பட்டு கருத்து எழுதும் என்னை போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ்நாடு இன்னும் சினிமாக்காரன் பின்தான் ஓடும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. மேலும் ஒரு தமிழ் நாளேடு சமூக அக்கறையோடு நல்ல செய்திகளை வெளியிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் எழுத்துப்பிழை, வார்த்தை பிழை போன்றவற்றை தவிர்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
21-மார்-201710:08:34 IST Report Abuse
Sampath Kumar நல்ல பாருங்க இவரு தான் பல குடி கேடுத்த கோமகன்
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201709:29:57 IST Report Abuse
ஜெயந்தன் தனுஷ் உடனே கட்சி ஆரம்பிக்கலாம்...அதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது....ஆரம்பித்து முதல்வராக முயற்சிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201709:24:45 IST Report Abuse
Venki மிருகங்கள் கூட அவ்வப்போது தன் பெற்றோர்களிடம் பாசத்துடன் விளையாடுவதை நாம் கண்டுள்ளோம் ஒரு மனிதன் பதவி புகழ் இவைகளில் இமய உச்சியையே தொடலாம் ஆனால் குறிப்பாக தன் தாயை உதாசீன படுத்துபவர்கள் ஈன பிறவிகள்
Rate this:
Share this comment
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
21-மார்-201708:56:39 IST Report Abuse
Durai Ramamurthy இது ஒன்றே போதுமே, இவர்கள் தில்லுமுல்லு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை