டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்

Updated : மார் 20, 2017 | Added : மார் 20, 2017 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
டில்லியில் விவசாயிகள் போராட்டம் வாபஸ்

புதுடில்லி: பயிர்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனுடன் விவசாயி பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கடந்த 7 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விவசாயிகள் டில்லியில் தங்க முடிவு



விவசாயிகளுக்கு அருண்ஜெட்லியை சந்திக்க மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நேரம் ஒதுக்கி தருவதாக கூறியதை தொடர்ந்து.போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், டில்லியிலேயே தங்கி இருந்து அருண் ஜெட்லியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - chennai,இந்தியா
21-மார்-201715:56:36 IST Report Abuse
kumar St.ஜார்ஜ் கோட்டைக்கு முன் போராட வேண்டியதை விட்டு விட்டு டெல்லியில் போராடுவது ஏன்? இவர்களின் கோரிக்கையை ஏன் அங்கே போயீ கேக்குறாங்க? Answer= பாஜக மீது பழிபோட வேண்டும் அவ்வளவு தான்.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Al Khor,கத்தார்
21-மார்-201714:58:45 IST Report Abuse
Janarthanan எங்கு போயின மெரினாவில் கூடிய பலதர மட்ட மக்கள் கூட்டம் (மாணவர்கள் , பொதுமக்கள், சினிமாக்கார்கள், காணொளிக்காட்சிகள் , வியபார சங்கங்கள் etc...) என்ன பண்ண ஒரு மனிதனின் துயர் துடைக்க இங்கு நேரம் இல்லை , அல்லது இவை அந்தளவிக்கு ஓர்த்தில்லையா???
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201711:15:50 IST Report Abuse
ஜெயந்தன் பொன்னர் அவர்கள் தமிழ்நாட்டுல போராட்டம் நடந்தாதான் தேடி தேடி போய் அல்வா கொடுத்தார் .. இவர் தொல்லை தாங்க முடியாமல் டெல்லி சென்று போராடினால் அங்கும் அல்வாவோடு செல்கிறாரே.. பாவம் விவசாயிகள்...
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
21-மார்-201710:03:51 IST Report Abuse
Karuppu Samy BJP சொம்பாக மாறிடுச்சு ஊடககங்கள்...
Rate this:
Share this comment
kumar - chennai,இந்தியா
21-மார்-201712:03:25 IST Report Abuse
kumarநீங்க யாருடைய சொம்பு ?...
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201709:28:31 IST Report Abuse
ஜெயந்தன் @ K .Palanivelu ... விவசாயிகளின் உடம்பை பார்த்தால் இவர்கள் விவசாயிகள் போல் இல்லை என்கிறீர்களே ..... நீங்களும் வயலில் இறங்கி வேலை செய்தால் உங்கள் உடலும் இப்படி திடகாத்திரமாக 6 pack உடம்பாகத்தான் இருக்கும்.. விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை.. அவர் மகனாகவும், பேரன்களாகவும் இருக்கலாம்..எல்லாவற்றிக்கும் மேலாக உப்பு போட்டு சோறு சாப்பிய்டாவின் எவனு இருந்த இடத்திலிருந்தே கூட அவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம்.. உரம் வாங்குவதற்கும் , விதை வாங்குவதற்கும் 10 / 20 கி.மீ. பயணித்து அல்லல் பட்டு விவசாயம் செய்வர்களை பற்றி நாம் தரம் தாழ்ந்து விமர்சிக்கக்கூடாது... ஆனால் ஒன்று.. பெப்சி , கோக் வாங்க நல்ல மால்களாக தேடி செல்லும் பலருக்கு விவசாயிகளின் சோகத்தை பற்றி தெரிய நியாயமில்லை ....
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201708:45:03 IST Report Abuse
balakrishnan ஒரு கவன ஈர்ப்பு அவ்வளவு தான், இதனால் எதுவும் சாதிக்க முடியாது, எல்லோரும் பேசுவாங்க ஆனால் எதுவும் செயல்பட போவதில்லை, அது தான் நாம் நடைமுறையில் பார்த்து வருகிறோம்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:41:11 IST Report Abuse
Srinivasan Kannaiya அருண்ஜெட்லியை சந்திக்க நேரம் வாங்கி தருவதாக பொன் வாய்மொழியாக சொன்னவுடன் தொடர் முழக்க போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதா.... அப்போ விவசாயிகளுக்கு அல்வா கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
Elavarasu - Thanjavur,இந்தியா
21-மார்-201705:55:36 IST Report Abuse
Elavarasu போராட்டம் ஆரம்பித்து இவ்வளவு நாள் நடந்தபோது உங்கள் நாளிதழில் செய்தி வந்ததுபோல தெரியவில்லை (ஒருவேளை கண்ணனுக்கு தெரியாதது போல போட்டுருப்பீங்க).. ஆனா இப்போ வாபஸ் ஆனதும் உடனே போட்டுடறீங்க.. இதுக்கு பேர்தான் பத்திரிகை தர்மம்.. யாராச்சும் போடுற தர்மத்துக்கு வேலை பாக்கிறது.. ____ நீங்களா அவ்ளோதான்டா..
Rate this:
Share this comment
Cancel
T.KANDASWAMI - POLLACHI,இந்தியா
21-மார்-201705:30:08 IST Report Abuse
T.KANDASWAMI தமிழ் நாட்டு விவசாயி டெல்லி சென்று போராட வேண்டி இருக்கிறது மாநில மத்திய அரசுகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் . விவசாயி போட்ட சோற்றில் வாழ்ந்து கொண்டு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருக்கும் இந்த கேடு கெட்ட ஜென்மங்களை என்ன செய்யலாம் . இந்த விவசாயிகளின் சாபம் இவர்களை சும்மா விடாது .
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
21-மார்-201702:16:18 IST Report Abuse
K.Palanivelu அரசின் எல்லா இலவச சலுகைகளையும் அனுபவித்து வரும் விவசாயிகளின் ஒரு பிரிவினர் நடத்திவரும் மேற்படியாரின் உடம்புகளை பார்த்தால் இவர்கள் செய்யும் தொழிலின் இன்னல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் போல யாருக்கேனும் தோன்றுகிறதா?இவர்களைவிட வறுமையின் கோட்டுக்குள் உழல்பவர்களை இவர்கள் ஒரு நிமிடமாவது நினைத்துப்பார்க்கவேண்டும்.அப்படியே இவர்கள் அண்டைமாநிலமான பஞ்சாபுக்கும் சென்று அங்குள்ள விவசாயிகள் எப்படி அரசின் உதவியின்றி தங்கள் தொழிலில் நவீனத்தை புகுத்தி செழிப்பாக இருக்கின்றனர் என்பதையும் அவசியம் கண்டுவரவேண்டும்
Rate this:
Share this comment
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
21-மார்-201709:02:12 IST Report Abuse
Padmanaban JayakrishnanK.Palanivelu, கனடா... அவங்க உடலை பார்த்தே கருது சொல்ல நீங்கள் யார்? விவசாயி என்றால் கருத்து தோல் சுருங்கி தான் இருப்பான் என்ற இலக்கணம் உள்ளதா? அப்படி என்றால் நீங்கள் சட்டை அணியாமல் டெல்லி வெயிலில் ஒரு நாள் நின்றுவிட்டு வரவும். தொங்கி தொலைந்துபோன அவர்களின் உடலை அளக்கும் உங்கள் பார்வை தான் இரையா விவசாயிகளின் சாபக்கேடு. விவசாயிகள் தங்கள் விலை பொருளுக்கு தாங்களே விலை நிர்ணயிக்கும் உரிமை கிடைத்தால் இது போல் வெயிலில் அம்மணப்பட்டும் உங்களை போன்ற தற்குறிகளின் விமர்சனத்துக்கும் ஆளாக வேண்டிய அவசியம் இல்லை....
Rate this:
Share this comment
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
21-மார்-201709:05:51 IST Report Abuse
Padmanaban Jayakrishnanபொன்னார் போராட்டம் நடக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று தன் வாய்க்கு வந்த உறுதிமொழிகளை எல்லாம் கொடுத்து வருகிறார். அவரை நம்பி விவசாயிகள் மீனவர்கள் பொதுமக்கள் எல்லாம் போராட்டத்தை கைவிட , மறுநாளே பிற அமைச்சர்கள் அந்தந்த திட்டம் தொடரும் என அறிவிக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201714:04:40 IST Report Abuse
Pasupathi Subbianபழனிவேலு சார் , விவசாயி என்பவர் காய்ந்துபோய் ஒட்டிய வயிறும், மழிக்காத தாடியும், பஞ்ச பராரியாய் இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுக்கிறாரோ. நாம் எல்லாம் தொந்தியும், வெள்ளை தோலுமாக இருக்க அவர்கள் காய்ந்துபோய் இருக்கவேண்டும் என்பது என்ன கொள்கையோ. இந்த நவீனமெல்லாம் , அரசின் விவசாயத்துறை அலுவலர்கள் , கிராமங்களுக்கு சென்று, விளக்கி, செய்முறையை காண்பித்து, அவர்களை ஊக்குவித்தால் மட்டுமே அவர்களுக்கு புரியும். அதை விடுத்து, எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு, ஊடகங்களில், ஒரு அறிவிப்பு கொடுத்துவிட்டால் தங்களின் வேலை முடித்துவிடுகின்றனர். விவசாயத்துறை என்பது தமிழகத்தில் வேலைசெய்வதே இல்லை. நவீனத்தை அறிமுகப்படுத்துவதும் இல்லை....
Rate this:
Share this comment
K.Palanivelu - Toronto,கனடா
22-மார்-201700:17:05 IST Report Abuse
K.Palaniveluஒருவிளைபொருள் குறிப்பாக மஞ்சள் விலை உச்சக்கட்டத்தில் விற்கும்போது மற்ற விவசாயிகள் எல்லாம் அவர்கள் நிலத்தில் அதையே பயிரிடுகிறார்கள்.அடுத்தவருடம் மஞ்சள் விளைச்சல் மிக அதிகமாகி மார்க்கெட்டுக்கு அவ்வளவும் விற்க கொண்டு வரும்போது இயற்கையாகவே விலை குறைந்துவிடுகிறது. இது அடிப்படை விவசாயத்தின் பொருளாதாரம். இதுபுரியாமல் விளைபொருளுக்கு விலைநிர்ணய உரிமை விவசாயிக்கு வேண்டும் என சொல்வது அறிவீனம். அரசு அல்லது விவசாயி விலை நிர்ணயம் செய்ய இயலுமா? விலை அதிக விளைச்சலால் குறைந்துவிடும் என்ற யூகத்தில் விவசாயிகளை பயிரிடவேண்டாம் என கட்டுப்படுத்த இயலுமா? ஒரு பொருள் சந்தைக்கு அதிகம் வந்தால் விலை தானாகவே சரியும். ஏட்டுப்படிப்பு படித்தவர் கூக்குரலிடுவது சாத்தியமே இல்லாத விலைநிர்ணய உரிமை என்பது. விலை நிர்ணயம் செய்யப்பட்ட மற்ற உற்பத்திப் பொருள்களும் பல்வேறு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு அது மார்க்கட்டில் நிறையும் போது தானாகவே வீழ்ச்சி அடையும்.அக்காலத்திலே இலவசங்கள் அறிவிக்கப்படாத காலத்திலேயே நெல் விளைச்சலுக்கு விவசாயிகள் குறைந்த விலைக்கு அதை அரசுக்கு கொடுக்கவேண்டும். அப்போதுகூட இப்படி கூச்சல் இல்லை.குத்தகைக்கு உழும் சிறு விவசாயிகளுக்கு ஒருவேளை சிரமம் இருக்கலாம். கோவில் நிலங்களை தொடர்ந்து குத்தகைக்கு உழும் விவசாயிகள் யாரும் இங்கு கோவிலுக்கு குத்தகை கொடுப்பதில்லை. இதைப்பற்றி ஏதாவது அரசியல் கட்சி மூச்சு விடுகிறதா? விவசாயத்தில் நஷ்டம் வந்தால் விளைபூமியின் விலை ஏன் சரிவதில்லை? அதை வாங்குவதற்கு யாரும் இல்லாமலிருக்க வேண்டும். அப்படியா இருக்கிறது உள்ள நிலைமை? பக்கத்துக்காட்டுக்காரனே உடனே சொன்ன விலைக்கு வாங்கிக்கொள்கிறானே? மக்கள் இவர்கள் சொல்வதை நம்பவேண்டும் என்று ஓங்கி கூச்சலிடுகிறார்கள். இலவச மின்சாரம் இல்லாத மாநிலங்களில் கூட விவசாயிகள் அதற்க்கு போராடுவதில்லை.அமைதியாக இருக்கிறார்கள்.இவர்களுக்கு வருடாவருடம் வங்கி கடன் தள்ளுபடி கொடுத்தாலும் திருப்தியடைவதில்லை. மழை பொய்த்தால் நிவாரணம் வேறு. இலவச மின்சாரம் தவிர, வாங்கும் கடன் தள்ளுபடி, மானியவிலையில் உரம்,மழை இல்லாத காலத்தில் மானியம் தவிர இன்னும் அவர்களுக்கு என்ன இலவசம் வேண்டும்? பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு அரசின் மொத்தக்கடன் வருடாவருடம் அதிகரித்து வரும் சூழலில் ஏனைய மற்ற மக்களின் கஷ்டத்தை உணராமல் தங்களுக்கு இன்னும் கொடுக்கவேண்டும் என கூச்சலிட்டு அடம் பிடிப்பது உகந்தததா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை