மந்திரி சந்திப்பால் தினகரன் கலக்கம் | பன்னீர் அணியுடன் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்.. நெருக்கம்! சட்டசபை கூட்டத்தில் சகஜமாக பேசி நட்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பன்னீர் அணி,சசிகலா , எம்.எல்.ஏ.,க்கள்.., நெருக்கம்!.

அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது.

பன்னீர் அணி,சசிகலா , எம்.எல்.ஏ.,க்கள்.., நெருக்கம்!.

சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்திய போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், மேஜையை தட்டி வரவேற்றனர்.
விவாதத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியது குறித்து, பன்னீர் அணியில் உள்ள, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், நிதி அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சில ஆலோசனைகள் வழங்கினார்.


நெருங்கும் தீர்ப்பு


பன்னீர் அணியில் உள்ள செம்மலையுடன், அமைச்சர்கள் ராஜூ, உதயகுமார் ஆகியோர், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சபைக்கு வந்த போது, சில அமைச்சர்கள், அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர்மாற்றத்திற்கு, தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவது தான் காரணம் என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரே விமானத்தில் பயணித்த, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் சந்தித்து பேசிய தகவல், கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனை கலக்கம் அடைய செய்துள்ளது.முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பெரியகுளம் தொகுதியில், மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அதை முடித்து, நேற்று முன்தினம், மதுரையிலிருந்து சென்னைக்கு, விமானம் மூலம் திரும்பினார்.

ரகசிய தகவல்கள்மதுரை விமான நிலையத்தில், ராஜேந்திர பாலாஜியை கண்டதும், அங்கு திரளாக கூடியிருந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'சசிகலா ஒழிக, தினகரன் ஒழிக' என, கோஷமிட்டனர். அதை பார்த்த அமைச்சர்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல், ஒதுங்கி போய் விட்டார்.

Advertisement

பின், இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தனர்.அப்போது, பன்னீர் செல்வத்திடம் ராஜேந்திர பாலாஜி, சில ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிரடி மாற்றம்


இதுகுறித்து, பன்னீர் அணி வட்டாரங்கள் கூறியதாவது:சசிகலாவின் தம்பி திவாகரன் சிபாரிசில், மாவட்ட செயலர், அமைச்சர் பதவிக்கு உயர்ந்தவர் ராஜேந்திர பாலாஜி. அந்த விசுவாசத்தில், சசிகலா அணியில் உள்ளார். ஆனாலும், பன்னீர்செல்வம் மீது மிகுந்த மரியாதை உள்ளவர்.அதனால், கூவத்துார் சொகுசு விடுதியில், சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது, பன்னீர்செல்வம் அணிக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இருப்பினும், அவரை, சசிகலா குடும்பத்தினர் தடுத்து விட்டனர்.
விமானத்தில், பன்னீரிடம் பேசிய போது, 'என் கட்டுப்பாட்டில், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில், தேர்தல் கமிஷன் தீர்ப்புக்கு பின், உங்கள் அணிக்கு வருவோம்' என, அவர் கூறியதாக தெரிகிறது.
மேலும், பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட விவகாரத்திலும், இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பதிலும், தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு அளிக்க உள்ளது. அந்த தீர்ப்புக்கு பின்னர், அ.தி.மு.க.,வில் அதிரடி மாற்றம் ஏற்படும். அதற்கு அச்சாரம் தான், இந்த சந்திப்புகள்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.S .Krishnan - chennai,இந்தியா
22-மார்-201711:57:18 IST Report Abuse

S.S .Krishnanஅவங்க போய்விட்டால் என்ன , அவங்க கொள்ளை அடித்தது இருக்கே.. அதிலிருந்து 100 கோடி கோர்ட் வசூல் செய்யலாமே இல்ல அபராத தொகையை விட்ருவாங்களா?

Rate this:
S.S .Krishnan - chennai,இந்தியா
22-மார்-201711:50:43 IST Report Abuse

S.S .Krishnanஇவங்கள சொல்லி தப்பு இல்லை .இவங்க இரண்டு கட்சிகளையும் விட்டால் நமக்கு வேறு வழி இல்லை என்று ஆகிவிட்டது .மக்களுக்கு என்று மக்களுக்காக என்று தொண்டு செய்பவர்கள் யாரும் இல்லை .இது மக்களாகிய நமது தலை விதி . எல்லாம் கூலிக்கு மாரடிப்பவர்கள். கூடயே இருந்து ஜால்ரா போட்ட இந்த திருடர்கள் எப்படி மாறிவிட்டார்கள்.

Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-மார்-201718:51:46 IST Report Abuse

தமிழர்நீதி AIADMK என்பது ஒரு மிக பெரிய அரசியல் வியாபாரிகள் அடங்கிய கூட்டம் . கிராமம் முதல் கிராமத்தில் ஆத்துமணல் அள்ளுவது முதல் அதைக்கொண்டு கட்டுமானம் கட்டும் நகரம் முதல் கொள்ளையடிப்பதற்கு முதலைகள் அதிகம் உள்ளனர் . இதுல முதல் குற்றவாளி மரணித்து , இரண்டாம் குற்றவாளி சிறையில் அடைபட்டு கிடக்கிறார்கள் . இனி இருக்கும் MLA கள் கைநீட்டி வாங்கி கப்பம் கட்டாமல் அனுபவிக்கவும் சூழல். இதனை எடப்பாடி ,பன்னீர் விடமாட்டார்கள் . சேர்ந்து கும்மி அடிப்பார்கள் . கொள்ளை அடிப்பார்கள் .

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
21-மார்-201719:53:24 IST Report Abuse

mindum vasanthamதி மு க கரூர் வேட்பாளர் பழனிசாமி பற்றி தெரியுமா , மற்றும் கடல் மணல் வைகுண்டராஜன் போன தேர்தலில் திமுகவிற்கு தீயாக உழைத்து பற்றி தெரியுமா , இல்லை prp அழகிரியுடன் அடித்த கும்மிகள் பற்றி தெரியுமா...

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
21-மார்-201721:33:23 IST Report Abuse

Mahendran TCஅப்போ திமுக உத்தமர்களை கொண்ட கூட்டமா ?...

Rate this:
kavithakannan - Nagerkoil,இந்தியா
22-மார்-201700:14:04 IST Report Abuse

kavithakannanஅண்ணா திமுக உண்மையில் அம்மாவைவிட சுமருமூஞ்சி குமார் கொள்ளை கொலை கூட்டம் தான் அம்மா அளவிற்கு திருட தெரியாது...

Rate this:
SANKAR - calgary,கனடா
22-மார்-201701:30:07 IST Report Abuse

SANKARபழனிச்சாமி மணலை தொட கூட விட மாட்டார்கள் அ தி மு க முதலைகள்... வைகுண்டராஜனை வளர்த்துவிட்டதே அ தி மு க தான்... அழகிரி தி மு க வில்லையே இல்லை...அப்புறம் prp எந்தவிதத்தில் தி மு க விற்கு சம்பந்தம்... சும்மா இப்படி கதை கட்டியே காலத்தை ஓட்டுறாங்க அ தி மு க வினர்......

Rate this:
Chinnai Kannan - CHENNAI,இந்தியா
21-மார்-201718:04:36 IST Report Abuse

Chinnai Kannan they prove that ultimate enemy is dmk. they will unite without sasi family. those people afraid that jaya death is black mark to admk and afraid of dmk win and to be in sasi group. edapadi is a dummy cm and ttv should resign his post

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:53:31 IST Report Abuse

Endrum Indian22 மார்ச் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் இவர்கள் எல்லோரும் மதில் மேல் பூனையாக.

Rate this:
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
21-மார்-201716:06:40 IST Report Abuse

Karuppu SamyADMK மேலே மக்களுக்கு மிகுந்த வருத்தம் இருக்கு அதை திசை திருப்பவே இந்த பன்னீர், கண்ணீரு நாடகம் எல்லாம்.ஜெ சாவில் இன்னுமே மர்மம் நீடிக்குது அதை தோண்ட பிஜேபி யுமே பயப்படுது? சோ எல்லாருமே பங்குதாரர்கள்?

Rate this:
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
21-மார்-201716:03:51 IST Report Abuse

Karuppu Samyநேற்று கெட்டவனா இருந்து இன்று நம்மோட சேர்ந்தால் நல்லவனா மாறுவான்? கேவலமா இல்லை?

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
21-மார்-201715:56:21 IST Report Abuse

Ravichandranதினம் தினம் பண்ணீருக்கு வலு கூடி கொண்டே போகிறது அதிகாரம் திருட்டுக்கும்பல் பக்கம் இருந்தாலும் பயப்படாமல் நட்சத்திர பேச்சளர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்களும் பனீரை நோக்கி வருவது மந்திரிகளை எம் எல் ஏக்களை யோசிக்கவைக்கத்தான் செய்யும். இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் வாங்கும் வேலை கூடாது யாரும் தமிழ்நாட்டுக்கு கடன் கொடுக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
21-மார்-201715:54:15 IST Report Abuse

mindum vasanthamthideernu rk நகரில் captain கட்சி ஜெயிச்சு வந்தா எப்படி இருக்கும்

Rate this:
Arbhas Khan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மார்-201700:05:51 IST Report Abuse

Arbhas Khanகனவு காட்சி...

Rate this:
Arasan - Thamizhnadu,இந்தியா
21-மார்-201715:45:42 IST Report Abuse

Arasanஇந்த ராஜேந்திர பாலாஜி ஒரு மோசமான பயல். இந்த ஆள் வந்த திருப்ப கொண்டு போய் தினகரன் கிட்டயே விட்டுட்டு வந்துடனும்.

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement