ஜி.எஸ்.டி., மசோதாக்களுக்கு ஒப்புதல்..! | ஜி.எஸ்.டி., மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...! உடனடியாக பார்லி.,யில் தாக்கல் செய்ய வாய்ப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
ஒப்புதல்...!
ஜி.எஸ்.டி., மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை
உடனடியாக பார்லி.,யில் தாக்கல் செய்ய வாய்ப்பு

புதுடில்லி: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைகளுக்கான, துணை சட்ட மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், இந்த மசோதாக்களை உடனடியாக பார்லிமென்டில் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி., மசோதாக்கள், மத்திய அரசு,  ஒப்புதல்

நாடு முழுவதும் உள்ள, பல்வேறு வரி விதிப்பு முறைகளுக்கு மாற்றாக, ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வரும், ஜூலை, 1ம் தேதியில் இருந்து இதை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., தொடர்பான கொள்கைகள், சட்டங்களை இறுதி செய்வதற்காக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பான மசோதாகளுக்கு

ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இது குறித்து விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.இந்தக் கூட்டத்தில், இந்த மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட்டு,ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த மசோதாக்கள், நடப்பு பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பண மசோதாக்களாக தாக்கல் செய்யப்படுகிறது


ஜி.எஸ்.டி., தொடர்பான மசோதாக்கள், பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட உள்ளது.பண மசோதா என்பது, லோக்சபாவின் ஒப்புதல் மட்டும் போதுமானது. ராஜ்யசபாவில் இது தாக்கல் செய்யப்பட்டாலும், அதன் ஒப்புதல் தேவையில்லை. லோக்சபாவில் மிக வலுவாக உள்ள, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசுக்கு, ராஜ்யசபாவில் போதிய பலம் இல்லை. அதனால், இந்த மசோதாக்களை பண மசோதாவாக தாக்கல் செய்வதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

என்னென்ன மசோதாக்கள்?


ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன், அது தொடர்பான, ஐந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் தேவை. இதில், மாநில

Advertisement

ஜி.எஸ்.டி., மசோதாவுக்கு மாநில சட்டசபைகளில் ஒப்புதல் பெற வேண்டும். வருவாய் இழப்பு சட்டம், மத்திய ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி., ஆகிய மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தற்போதைக்கு, 5, 12, 18 மற்றும், 28 சதவீதம் என, நான்கு வரி விதிப்பு முறைகளுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வரி விதிப்பு, 40 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒவ்வொரு முறையும் வரியில் மாற்றம் செய்ய, பார்லிமென்ட் ஒப்புதல் பெறத் தேவையில்லை.
அதேபோல், சொகுசு கார், சிகரெட், மது வகைகள் போன்ற பொருட்களுக்கான வரிக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியின் அளவு, அதிகபட்சமாக, 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:57:58 IST Report Abuse

K.Sugavanamசூப்பர்..சூப்பர்..மக்கள் அவ்ளோதான்..

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:55:54 IST Report Abuse

K.Sugavanamமக்களாவது,மண்ணாங்கட்டியாவது..போட்டுத்தாக்குங்க வரி மூலமா..புதிய இந்தியா...சூப்பர்..

Rate this:
Power Punch - nagarkoil,இந்தியா
21-மார்-201715:45:07 IST Report Abuse

Power Punch ஜனங்க கிட்ட இருக்கற பணத்தை பிடுங்கறதுக்கு எவ்ளோ வேகமா போறானுங்க

Rate this:
நரி - Chennai,இந்தியா
21-மார்-201715:09:02 IST Report Abuse

நரிவரி விகிதம் 2 % கு அதிகமானால் விலைவாசி கடுமையாக உயரும், நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்

Rate this:
SANKAR - calgary,கனடா
21-மார்-201710:34:22 IST Report Abuse

SANKARGST வரிவிதிப்பு முறை தமிழகம் போன்ற உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு வரி வருமானத்தை குறைக்கும்... அதனால்தான் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் வரியை அமல் படுத்துவது இதன் மூலம் சீராக்க படும்... தமிழ்நாட்டை பொறுத்தவரை இதனால் நன்மையை விட (அரசு வருமானத்தில் )பாதிப்பு அதிகம் இருக்கும்...

Rate this:
Manian - Chennai,இந்தியா
21-மார்-201704:45:19 IST Report Abuse

Manianநாடு முன்னேற இதுவே சிறந்தது. ஒரே மாதிரி வரி உள்ளூர் கொள்ளை இல்லை ஓசி கொடுக்க முடியாது அல்லது குறையும். ஆனால் நண்பர் நல்லக் கண்ணுவோ அதை மடக்கவும் வழி கண்டு பிடிப்பார், ஆக்க வழின்னா மத்த ஜனங்களும் நல்லதே, அதை எப்படி கட்டிங் வாங்காம கொடுக்கறாம்? ஏன் கொடுக்கணும்?

Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201722:56:59 IST Report Abuse

K.Sugavanamநாடு விரைவா முன்னேற அந்த 40 % வரியை உடனடியாக எல்லாவற்றிக்கும் அமல்படுத்துவாங்க போல.....

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201704:32:09 IST Report Abuse

Kasimani BaskaranGST மசோதா சீக்கிரம் நிறைவேற்றப்பட வேண்டும்.. அமளி செய்தால் அமளி செய்ப்பவர்களை பாராளுமன்றத்துக்கு வெளியே தூக்கிப்போட வேண்டும்...

Rate this:
Vadivu - Salem,இந்தியா
21-மார்-201714:24:39 IST Report Abuse

Vadivuகாவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரை தூக்கி வெளியில் போடணும்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement