பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர் | பாக்.,கில் மாயமான மதகுருக்கள் பத்திரமாக நாடு திரும்பினர் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பாக்.,கில் மாயமான மதகுருக்கள்
பத்திரமாக நாடு திரும்பினர்

புதுடில்லி: பாகிஸ்தானுக்குச் சென்று, கடந்த வாரம் காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத குருக்கள் இருவர், நேற்று, டில்லி திரும்பினர்.

தலைநகர் டில்லியில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்கா உள்ளது. இதன் தலைமைக் மதகுரு, சையத் ஆஸிப் நிஸாமியும், அவரது உறவினரும், மதகுருவுமான, நாஸிம் அலி நிஸாமியும், 8ம் தேதி, பாகிஸ்தானுக்கு சென்றனர். சில நாட்களில், தங்கள் உறவினர்களுடன் அவர்கள் தொடர்பு கொள்ளாததால், காணாமல் போனதாகச் சந்தேகிக்கப்பட்டது.


சுஷ்மா வேண்டுகோள்


பாகிஸ்தான் அதிகாரிகளுடன், இந்தியத் துாதரக அதிகாரிகள், மதகுருக்கள்காணாமல் போனது குறித்து, புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பாக்., அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே, சந்தேகத்தின் அடிப்படையில், மதகுருக்களிடம், பாக்., புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக, பாக்.,அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


பத்திரமாக, டில்லி வந்தனர்


ஆனால்,இரு மதகுருக்களும், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், தொலைதுாரப் பகுதியில் இருந்ததாலும், அங்கு தொலைபேசி கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததாலும், அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த நிலையில், காணாமல் போன இருவரும், நேற்று, பத்திரமாக, டில்லி வந்து சேர்ந்தனர். அவர்களை, குடும்பத்தினரும், நலன் விரும்பிகளும், டில்லி விமான நிலையத்தில் வரவேற்றனர். தலைமை மதகுரு, சையத் ஆஸிப் நிஸாமியின் மகன் ஆமிர் நிஸாமி, தன் தந்தையும், உறவினரும், இந்தியா திரும்ப உதவிய, மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jay - toronto,கனடா
21-மார்-201721:37:31 IST Report Abuse

jayஇதற்கு பின்னும் இந்தியாவை கேவலமா பேசுவார்கள் ,, நன்றிகெட்டவர்கள்

Rate this:
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
21-மார்-201720:32:55 IST Report Abuse

Amanullahதிருமதி sushmaa அவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்

Rate this:
21-மார்-201716:12:03 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்இதெல்லாமே சுத்த பொய். அவர்கள் மார்க்கத்தில் மெக்கா , மதீனா தவிர வேறேதும் புனிதமானது அல்ல. மேலும் நம் கோவில்கள் போன்று ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சிறப்பு இல்லை. அவர்களுக்கு அது தொழுகை செய்யும் இடம் அவ்வளவே. அதை விடுத்தது புகழ்பெற்ற மசூதிக்கு சென்றேன் என்பதெல்லாம் சுத்த பொய்யாகவே தோன்றுகிறது. உளவுத்துறை இவர்களை கண்காணிக்க வேண்டும்.

Rate this:
21-மார்-201716:02:54 IST Report Abuse

ரங்கன்அமைதி மார்க்கமாச்சே.... அமைதியாக இந்தியாவுக்கு ஆப்பு வைக்கப் போயிருப்பாங்க.... இல்லே, காணாம போனமாதிரி போட்டுப் பாக்குறாங்களோ என்னவோ?

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
21-மார்-201715:50:06 IST Report Abuse

N.Purushothamanசுஷ்மா அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. .இந்தியர்களை இந்தியர்களாக பார்ப்பது பா.ஜ மட்டும் தான்...

Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201711:22:03 IST Report Abuse

Swaminathan Nathதன் உடல் நிலை சரி இல்லாவிட்டாலும் நாட்டிற்காக, உழைக்கிறார், சுஷ்மாவிற்கு பாராட்டுக்கள் , வேறுபாடு இல்லாமல் உழைக்கிறார் , இது மற்றவர்களுக்கு புரிந்தால் சரி ,

Rate this:
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
21-மார்-201711:17:32 IST Report Abuse

CHANDRA GUPTHANதீவிரவாதிகளை பார்க்க போயிருப்பானுங்க . எங்கே எவனை தூண்டிவிட்டு குளிர் காயலாமுன்னு பேசியிருப்பானுங்க. எத்தனை கோடி கிடைக்கும் என்று பேசி முடிச்சிருப்பார்கள் . வேறென்ன தெரியும் இவங்களுக்கு

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-மார்-201710:33:00 IST Report Abuse

Malick Rajaசுஷ்மா ஸ்வராஜ் பாரம்பரியத்தில் வந்த இந்திய குடிமகள் அதிலும் நல்ல பரம்பரையில் வளர்க்கப்பட்டு தகுந்த கல்வியறிவுடன் இருப்பவர்.. பதவியில் இருப்பினும் இல்லாவிடினும் அகந்தை .. வெறுப்பற்றவர் பொறுப்புடன் தனக்கு அளிக்கப்பட்டுள்ளவைக்கு கடைமையாற்றுபவர் .. தனது பண்பின் காரணமாகவே அவரின் உடல் நலம் பேணிக்காக்கப்பட்டுள்ளது.. தினை வித்திட்டார் தினையை பெற்றார்

Rate this:
Seenivasakumar Ganapathi - rajpalayam,இந்தியா
21-மார்-201711:41:41 IST Report Abuse

Seenivasakumar Ganapathiநன்றி......

Rate this:
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-மார்-201710:15:02 IST Report Abuse

Mohamed Ilyasசுஸ்மாவின் வெளியுறவு கொள்கை (காணாமல் போனவர்களை கண்டு பிடித்து கொடுப்பது ) என்று நினைத்து கொண்டார் போலும் .

Rate this:
Seenivasakumar Ganapathi - rajpalayam,இந்தியா
21-மார்-201711:43:19 IST Report Abuse

Seenivasakumar Ganapathiமார்க்கம் தான் உலகம் முழுவதும் உள்ளீர்கள். உங்க சொந்த நாட்டுக்குத்தானே போயிருக்கார். நீங்களே கண்டுபிடிக்க வேண்டியதுதானே......

Rate this:
sudharshana - chennai,இந்தியா
21-மார்-201709:02:12 IST Report Abuse

sudharshanaசுஷிமா சுஷிமா எத்தனை தடவை சொன்னாலும் போதாது அவர் முயற்சி மட்டுமே... அவர் உடல் நிலையிலும் எவ்வளவு அக்கறை கொள்கிறார்.., சுஷிமா விற்கு பாராட்டுக்கள். நல் வாழ்த்துக்கள்.

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement