ஸ்டாலின் கேள்வியால் திணறிய மந்திரி | ஓ.பி.எஸ்.சும் நாங்களும் அப்படி என்ன செய்தோம்: ஸ்டாலின் கேள்வியால் திணறிய மந்திரி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாங்களும் ஓ.பி.எஸ்.சும் அப்படி என்ன செய்தோம்:
ஸ்டாலின் கேள்வியால் திணறிய மந்திரி

சென்னை, ''சட்டசபை கூட்டத்தில், நாங்களும், ஓ.பி.எஸ்.,சும் அப்படி என்ன செய்தோம் என்பதை, அமைச்சர் காமராஜ் விளக்க வேண்டும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 ஸ்டாலின், கேள்வி, திணறல், மந்திரி

சட்டசபையில், நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, குறுக்கிட்டு பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ஸ்டாலினை பார்த்து, ''நீங்களும், அவரும், கடந்த சட்டசபை கூட்டத்தில் எப்படி நடந்து கொண்டீர்கள் என்பதை அறிவோம்,'' என்றார். அதற்கு ஸ்டாலின், ''நீங்கள் அவ்வாறு எப்படி கூறலாம்; நாங்களும், ஓ.பி.எஸ்.,சும், அப்படி என்ன செய்தோம் என்பதை விளக்க வேண்டும். இல்லையேல், அந்த வார்த்தையை திரும்பப் பெற வேண்டும்,'' என்றார். அதற்கு அமைச்சர், ''அவர், சட்டசபைக்குள் நுழைந்த போது, நீங்கள், மேசையைத் தட்டி வரவேற்றீர்கள்; மாற்றுக்கட்சி உறுப்பினர் வரும் போது, சட்டசபையில் மேசையை தட்டிய வரலாறு உண்டா,'' என்றார்.
அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ''நீங்கள், குற்றவாளி பெயரை கூறும் போதெல்லாம், எந்த நோக்கில் மேசையை தட்டுகிறீர்கள். நாங்கள், உறுப்பினரின் பெயரை குறிப்பிட்டபோது தான், மேசையை தட்டினோம்,'' என்றார்.


மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து, மாவட்ட செயலர்களுடன், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., மூன்று அணிகளாக பிரிந்து போட்டியிடும் நிலையில், தி.மு.க.,வில், சாமானிய வேட்பாளரான மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நேற்று அறிவாலயத்தில், மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், வெற்றிக்கான வியூகம் அமைத்தல், தேர்தல் பணிக்குழு நியமித்தல், கூட்டணி கட்சி தலைவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைத்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.இதே போல, தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை வகித்தார்.இதில், பட்ஜெட் கூட்டத்தொடரில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, ஆர்.கே.நகர் தொகுதியில்,தி.மு.க.,வுக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் செய்வது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., தீர்மானம்:23ல் ஓட்டெடுப்பு


தி.மு.க.,வினர் கொடுத்த கடிதத்தை ஏற்று, வரும்,

Advertisement

23ல், சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம், சட்டசபையில் கொண்டு வரப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபையில், சபாநாயகர் தனபால் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. சபை விதிகளின்படி, சபாநாயகர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இயலாது.
எனவே, சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, மார்ச், 9ல், தி.மு.க., சார்பில் மீண்டும் கடிதம் கொடுக்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க., சார்பில் கொடுக்கப்பட்ட கடிதம் குறித்து பேச முயன்றார்.
அப்போது, சபாநாயகர் குறுக்கிட்டு, 'அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும்' என, உறுதி அளித்தார். அதன்படி, வரும், 23ல், தீர்மானம் ஓட்டெடுப்பிற்கு வர வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகி உள்ளது. அந்த தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்த, தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
21-மார்-201723:04:58 IST Report Abuse

rmrமக்கள் உங்கள் இருவரையும் நம்ப போறது கிடையாது, உங்க ஊழல் அரசியல் முடிவுக்கு வரும்

Rate this:
adalarasan - chennai,இந்தியா
21-மார்-201722:43:02 IST Report Abuse

adalarasanநீங்கள் , ஏன் கூட, , கூட, பன்னீர் செல்வம் அவர்களை, சேர்த்துக்கொள்கிறீர்கள் , உங்களுடன் அவர் வொன்றும் செய்யவில்லை, நீங்கலும், உங்கள், சகாக்களும் என்ன செய்தீர்கள் என்று, உங்களில் மனசாட்சியை தொட்டு பாருங்கள்? அறிவிக்கும் உங்களுக்கு ஒரு சபாநாயகரின் சட்டையை பிடித்து, இழுத்து, ஏசி, அவர் மேஜையை, உடைத்து,வெளியேற்றி, அதில் வேறு, தாங்களாகவே இருவர் அமர்ந்த , காட்சிகளையெல்லாம் , மக்கள் பார்த்தார்கள். கனம், கோர்ட்டார் அவர்களுக்கும், அதிகாரபூர்வமாக, கொடுதாகி விட்டது? [போராடத்திற்கு தாங்கள் வேறே சட்டையை தானாகவே கிழித்து, திடீரென்று, காரில் இருந்து இறங்கி, மார்பை காட்டும் காட்சி ஆகா?வெட்கப்படாமல், எப்படி, வொண்றுமே நடைபெறாதுதுபோல் கேட்கிறீர்கள்? தமிழக மக்கள் அன்று வெட்கி தலை குனிந்தார்கள்

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
21-மார்-201719:51:17 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranசட்டசபையில் நேற்று சாதாரண உறுப்பினரான 'பன்னீர் செல்வம் ' நுழைந்தபோது 'மேஜையைத்தட்டி ' ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் திமுக உறுப்பினர்கள் வரவேற்றது அதுவும் திமுக செயல்தலைவர் ,சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்தபோது ' நீங்கள் சசிகலா என்ற குற்றவாளியின் பெயரை கூறும்போது கைத்தட்டுகிறீர்கள் ? நாங்கள் ஒரு உறுப்பினர் அவைக்கு வந்ததற்கு தான் மேஜையை தட்டினோம் ' என்று கூறியுள்ளார். அதற்கு அமைச்சர் 'மாற்று காட்சி உறுப்பினர் அவைக்குள் வரும்போது மேஜையை தட்டும் வரலாறு உண்டா ? என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கமுடியாமல் திணறியது ஸ்டாலின்தான் .

Rate this:
Jamesbond007 - Nagercoil,இந்தியா
21-மார்-201718:57:45 IST Report Abuse

Jamesbond007ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் சந்திக்கும் அந்த நொடியிலிருந்து சிரிச்சப் போச்சு ரவுண்டு ஸ்டார்ட் ஆயிடும், இது தெரியாம இருந்த OPS யை சின்னம்மா அவுட்டாக்கிட்டு ஜெயிப்பாங்கன்னு பார்த்தா ஜெயில்ல போய் இருக்குறாங்க....கடைசியில சிரிச்சா போச்சு ரவுண்டுல ஜெயிச்சது நம்ம தளபதிதான்....

Rate this:
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201717:09:21 IST Report Abuse

Balajiஎதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பில் இருந்து செயல்பட இப்போதாவது முயற்சிகளை திரு.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்...... தேவையில்லாத கதைகளை பேசுவதால் என்ன கிடைத்துவிடப் போகிறது...... நேற்று நடந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்து மேஜையை திட்டியதாக செய்தி வந்தது...... அது போன்று ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டும்..... மக்கள் நலனை முன்னிறுத்தினாலே போதும் மக்கள் இவர்களை ஆதரிக்க....... இதை யோசித்து செயல்பட்டால் நன்றாக இருக்கும்....

Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
21-மார்-201715:24:26 IST Report Abuse

GUNAVENDHANஇந்த ஆட்சியை கலைக்க பன்னீர்செல்வம் தயவு இசுடாலினுக்கு தேவைப்படுகிறது , எனவே பன்னீர் சட்டசபைக்குள் நுழைந்தால் கையையும் தட்டுவார்கள், எழுந்துகூட திமுகவினர் நிற்பார்கள், எல்லாம் பன்னீர் இன்னும் ஏழெட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் இழுத்து, ஆட்சியை கலைக்கும் வரை தான் இந்த மதிப்பு , மரியாதை, ஏற்றிவிடுதல் எல்லாம் , திமுகவினரின் ஒரே திட்டம் எப்படியாவது ஆட்சியை கலைத்து தேர்தலுக்கு வழி வகுத்து விடவேண்டும் என்பது மட்டும் தான் . ஆட்சி கலைந்து தேர்தல் வந்தால் அப்போது இதே பன்னீரை கண்டபடி பேசி அவர் மேற்கொண்டு அரசியலில் முன்னேறமுடியாதபடி எல்லாவற்றையும் இதே திமுகவினர் செய்யப் போகிறார்கள் . அப்போது தான் பன்னீருக்கு உரைக்கப் போகிறது . சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்களே அது போல இப்போது திமுகவினர் பன்னீரை ஏற்றி விடுவதெல்லாமே அவர்கள் ஆட்சியை கொண்டுவந்து கொள்ளையடிக்கத்தான் .

Rate this:
ezhumalaiyaan - Chennai,இந்தியா
21-மார்-201719:02:02 IST Report Abuse

ezhumalaiyaanஇரண்டு தீமைகள் இருந்தால் எது குறைந்த சேதாரம் செய்யுமோ அதைத்தான் அனுசரித்து போகவேண்டும். தமிழக அரசியலில் BEST VS WORST இல்லை. BAD VS WORSE...

Rate this:
karthi - MADURAI,இந்தியா
21-மார்-201715:02:15 IST Report Abuse

karthiஅதானே. அவரு என்ன புஷ்பா புருஷன் யாருன்னா கேட்டாரு?.

Rate this:
sachin - madurai,இந்தியா
21-மார்-201711:15:32 IST Report Abuse

sachin2 ஜி வழக்கில் சி பீ ஐ வாய்தா மேல வாய்தா வாங்கி கொண்டு இருக்கிறது ....கணக்கு பதிவு துறை இதை நாங்கள் ஊழல் என்று சொல்லவே வில்லையே இதை இப்படி செய்து இருந்தால் நாட்டிற்கு இழப்பு வந்து இருக்காது என்று தானே பதிவு செய்து இருக்கிறோம் என்று சொல்லி விட்டது நீதிமன்றத்தில் .......இது அரசின் கொள்கை முடிவு என்று ராசா தெளிவாக சொல்லி விளக்கத்தை கொடுத்து விட்டார் .......அதன் செயலாளர் நானும் கையெழுத்து போட்ட பிறகு தான் ராசா வும் கையெழுத்து போட்டார் என்று தெளிவாக சொல்லி விட்டார் ..ஒரு துறைல அதன் செயலாளர் கையெழுத்து போட்ட பிறகு அமைச்சர் போடுவார் அதன் பிறகு அது நடைமுறைக்கு வரும் இது தான் நடந்து உள்ளது ......

Rate this:
Sippi - Paris,பிரான்ஸ்
21-மார்-201713:47:08 IST Report Abuse

Sippiகனியக்கா நீரா ராடியா கூட பேசவே இல்ல. வோல்டாஸ் கட்டடம் கைமாறவே இல்ல. சாதிக் பாஷா இயற்கையாத்தான் செத்துப் போனாரு. வேற என்னல்லாமோ வாயில வருது....

Rate this:
21-மார்-201715:46:27 IST Report Abuse

KittuCbeEppadio BJP ruling Ku vanthachu. 2G enna aana enna. Athai solliyey Amma aatchikku vanthu poi sernthaachu...

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
21-மார்-201716:51:52 IST Report Abuse

Karuthukirukkanபாபர் மசூதி தானாகவே இடிஞ்சு விழுந்திரிச்சு 2002 இல் 2000 பேர் தன்னை தானே வெட்டி கொண்டு செத்து போய்ட்டானுக மோடி அமித் ஷா மற்றும் உளவுத்துறையை வெச்சு ஒரு இளம் பெண்ணை வேவு பார்க்க சொன்னது சும்மா லுல்லாயிக்கு அதே மாறி தான் சிப்பி கண்ணா இதுவும்...

Rate this:
சொடலை - Chennai,இந்தியா
21-மார்-201718:14:09 IST Report Abuse

சொடலைஜெயா மக்களின் மனதில் நிரபராதி... ஆனால் நாதஸ் குடும்பம் கோர்ட் சொல்லாவிட்டாலும் என்றுமே மக்களின் மனதில் குற்றாவாளிகள் தான் அதை மாற்ற முடியாது...

Rate this:
sachin - madurai,இந்தியா
21-மார்-201711:08:24 IST Report Abuse

sachinஜெயா ஒரு குற்றவாளி ...இப்படி சொன்னது நாட்டின் உச்சநீதிமன்றம் ....சசிகலா குற்றவாளி ......தினகரன் பெரா குற்றவாளி .......நடராஜன் குற்றவாளி இப்போது கேள்வி கேட்க்கும் எல்லாரும் முதலில் ஜெயாவை ஏன் இப்படி மக்கள் பணத்தை ஏமாற்றி ரத்தத்தை உறிஞ்சி இப்படி ஊழல் செய்து குற்றவாளி என்று பேர் எடுத்து செத்து போனீங்க என்று அவர் சமாதில போய் கேளுங்க ............

Rate this:
21-மார்-201715:54:15 IST Report Abuse

KittucbeIvanungalukkellam soranai konjam kooda kidayathu. kutravaalikal ellaam Thangam. kutram saattapattavarkal​ ellaam kenayanunga....

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
21-மார்-201716:59:08 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்Sachin - Madurai,இந்தியா :- திமுக மிகவும் நேர்மையான கட்சி .. அவர்கள் ஊழல் எதுவுமே செய்ததில்லை . கூவத்தில் முதலை இருந்ததால் தான் கூவம் சீரமைப்பு திட்டம் கை விடப்பட்டது.. உதய குமார் தானாகவே போய் குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.. அவர் உதய குமாரே இல்லை .. அனாதை என்று அவரது தாய் தந்தையர் சொல்லிவிட்டார்கள்.. ஜவகரிஸ்ட் பத்திரிகை தானாகவே மூடப்பட்டது. அதற்கும் கனிமொழி யார் மகள் என்ற வழக்கிற்கும் சம்பந்தமே இல்லை .. ஆ ராசா வீடு கட்டியதெல்லாம் நேர்மையாக சம்பாதித்ததே .. சன் டிவி பி எஸ் என் எல் கேபிள் இணைப்புகள் கரிகாலன் காலத்திலேயே போடப்பட்டிருந்தது . மாறன் அமைச்சரான பிறகு அது தோண்டி எடுக்கப்பட்டது.. ஏர்செல் நிறுவனம் தானமாக விற்க பட்டது.. கலைஞர் டிவிக்கு வந்த பணம் எல்லாம் தர்மம் .. குருமுட்டை.. மக்களை இன்னும் ஏமாற்றி பிழைக்க கட்டுமரம் குடும்பத்தினர் நாடகம் போடலாம். உனக்கு என்ன இத்தனை அக்கறை ? நீயும் அதன் ஆட்சியில் கமிஷன் பெறும் ஆசாமியா ? வெட்கம் மானம் சூடு சுரணை எதுனாச்சும் இருந்தால் இப்படி கருத்து போடும் முன் யோசித்து போடு ......

Rate this:
சொடலை - Chennai,இந்தியா
21-மார்-201718:11:50 IST Report Abuse

சொடலைகருணாநிதி ஒரு ஊழல் பெருச்சாளி...

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
22-மார்-201711:29:36 IST Report Abuse

வந்தியதேவன்கவுண்டரே.... தீர்ப்ப மாத்து...?...

Rate this:
Abdul Basith - deira dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:37:37 IST Report Abuse

Abdul Basithஒரு மாதிரியா உருப்படியா எதுவும் ஆகாவிட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சுவாரசியமாக தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் என்ன பல்லாயிரம் ஆயிரம் கி மீ மேல் தூரத்தில் இருந்தாலும் மனம் மட்டும் அங்கே உள்ள அரசியலை பற்றியே சிந்தனை, எந்த முன்னேற்றமும் இல்லாம நம்ப நாடு இப்பிடி வெட்டி மனிதர்களால் செயல் பாடு இன்றி வாத பிரதி வாதங்களோடு நாட்கள் வீணாக ஓடுகிறதே என்று வேதனை தன மிச்சம். எதுவும் நடக்கபோவதில்லை... இந்த செய்தியில் பாருங்கள் எவ்வளவு வீண் சங்கதிகள்... பொன்னான நேரம் மண்ணாக போகின்றது....

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement