பதிவு செய்த நாள் :
ஜெ., மரணத்திற்கு விசாரணை கமிஷன்
ஐகோர்ட்டில் மத்திய அரசு கைவிரிப்பு

சென்னை,:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய அரசு பதிலளித்து உள்ளது.


முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 செப்., 22 இரவில், உடல்நலக் குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின், டிச., 5ல் மறைந்தார்.
ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூவர் மூலம் ஜெ., மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, உயர் நீதிமன்றத்தில், சென்னை,

அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., உறுப்பினர் ஜோசப், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

ஏழாவது அட்டவணை


இம்மனுக்கள், தற்காலிக தலைமை நீதிபதி, எச்.ஜி.ரமேஷ் தலைமையிலான, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, விசாரணை, நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், சார்பு செயலர் மணிராம் தாக்கல் செய்த பதில் மனு:அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள, இரண்டாவது பட்டியலின்படி, 'பொது சுகாதாரம், மருத்துவமனைகள்' மாநில அரசின் கீழ் வருகிறது. அதன்படி, மாநில முதல்வருக்கு தேவையான மருத்துவ வசதியை அளிக்க வேண்டியது, மாநில அரசின் பொறுப்பு.

ஒப்பிடமுடியாது


மேலும், 'போலீஸ்' மற்றும் 'பொது ஒழுங்கு'ம் ஏழாவது அட்டவணைப்படி, மாநில அரசின் கீழ் வருகிறது. குற்றங்களை தடுப்பது, கண்டுபிடிப்பது, வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்துவது, கிரிமினல்கள் மீது காவல் துறை மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றுக்கும், மாநில அரசே பொறுப்பு.

Advertisement


எனவே, மாநில அரசுக்கு தான், இதில் முக்கிய பொறுப்பு உள்ளது. விசாரணை கமிஷன் சட்டப்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பதற்கு, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
நேதாஜி இறந்த சம்பவம், சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்தது. நேதாஜி இறப்பையும், ஜெ., இறப்பையும் ஒப்பிட முடியாது. அவை இரண்டும் ஒன்று அல்ல. விசாரணை முடியும் வரை, ஜெ.,யின் உடலை பத்திரமாக வைத்திருக்கும்படியோ, குழு அமைக்கும்படியோ, எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை. இந்த வழக்கில், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

மேலும் முதல் பக்க செய்திகள்:வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - chennai,இந்தியா
22-மார்-201713:07:23 IST Report Abuse

shankarஒரு சட்டத்தில் உள்ள அட்டவணையை காட்டி மாநில அரசின் மீது பொறுப்பை சுமத்துவது எந்தவித்ததிலும் முறையாகாது. மாநில அரசு விசாரணை செய்ய முன்வராது அப்படியே விசாரணை செய்தாலும் அது 100 சதவிகிதம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை எனவே மத்திய அரசே விசாரணை மேற்கொள்ள வேண்டும், தேவை இல்லாமல் மாநில விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தை தட்டி கழிப்பதை பார்க்கும் போது இதில் மத்திய அரசின் பங்கும் உள்ளதோ என என்ன தோன்றுகிறது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:19:20 IST Report Abuse

Endrum Indianஅப்போ கண்டெய்னர் போயாச்சின்னு சொல்லுங்க, அதான் மத்திய அரசு கைவிரிப்பு, இது ஒங்க உள்விவகாரம் என்று.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201717:18:24 IST Report Abuse

Balajiஜெ மரணத்தில் உள்ள மர்மத்தில் மத்திய அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது ..... அதனால் தான் இவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்க பார்க்கிறார்கள்...... மாநில அரசின் உத்தரவில் நடத்தப்படும் விசாரணையில் உண்மைகள் எங்கிருந்து வெளியில் வரப்போகிறது...... அதற்குத்தான் அவர்கள் தப்புவதற்கு பந்தை இங்கு தள்ளிவிட்டார்கள்.........

Rate this:
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
21-மார்-201716:26:06 IST Report Abuse

K. V. Ramani Rockfortமர்மமாக மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஒரு தனிமனிதரல்ல, அவர், தமிழக சட்டமன்றத்துக்கு மட்டுமில்லாமல், பாராளுமன்றத்திலும் ஒரு வலுவான கட்சியின் தலைவராக இருந்தவர். முழு விசாரணையை மத்திய அரசுதான் நடத்தவேண்டும். தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து சதி செய்கிறதோ ?

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
21-மார்-201710:05:08 IST Report Abuse

Sampath Kumarஇரண்டு அம்மாக்களுக்கும் ஒரு ஜோசியர் இருந்தாரு அவரை விசாரித்தால் பல உண்மைகள் வெளி வரும்

Rate this:
21-மார்-201709:06:26 IST Report Abuse

venkateshnalla naadu nalla sattangal.thirudanai pidikka sonnaa thirudane visaritchu kandupidipaan yendru sollum ivargalidem Enna ethirpaarka mudiyum.jaya maranam ragasiyam avarudan puthaikapattathu.ellaam container seyara velai.panam irunthaal Enna vendumaanalum seiyalaam kolaiyum kooda.

Rate this:
Paranthaman - kadappa,இந்தியா
21-மார்-201708:46:29 IST Report Abuse

Paranthamanஜெ மரணம் தொடர்பாக சசிகலாவை சிறையிலே விசாரிக்க வேண்டும்.அதே சிறையில் ஆயுள் தண்டனை பெறவேண்டும்.

Rate this:
Anandan - chennai,இந்தியா
21-மார்-201705:01:52 IST Report Abuse

Anandanஇவங்க சொல்றதை பார்த்தால் சசியும் மோடியும் கூட்டா இந்த விடயத்தில்?

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201704:44:30 IST Report Abuse

Kasimani Baskaranஆட்சியில் SINனம்மாவின் குறுக்கீடுக்கு நீதிமன்றம் என்ன பதில் சொல்கிறது? இது மொத்த இந்தியாவின் பிரச்சினை...

Rate this:
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
21-மார்-201703:41:49 IST Report Abuse

Bala SubramanianDelay பண்ணினால் Sathikala தப்பி விடுவார் மொத்த மாபியா கூட்டத்தையும் சுட்டு தள்ளனும் இல்லாவிட்டால் தமிழகம் படு குழியில் தள்ள படும்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்