பன்னீர் அணி புதிய ஆதாரம் | தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய ஆதாரம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி புதிய ஆதாரம்

தேர்தல் கமிஷனில், அ.தி.மு.க., பன்னீர் அணியினர் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்தது, சசிகலா அணியினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீர் அணி, புதிய ஆதாரம்

அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது சரியா என்பது குறித்தும், இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது தொடர்பாகவும் முடிவெடுக்க, சசி மற்றும் பன்னீர் அணியினரை, நாளை நேரில் ஆஜராகும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், தங்கள் தரப்பு நியாயங்களை, மேலும் வலுப்படுத்தும் வகையில், பன்னீர் அணியினர், நேற்று கூடுதல் ஆதாரங்களை,தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்தனர்.
இது குறித்து, பன்னீர் ஆதரவு நிர்வாகிகள் கூறியதாவது:

கட்சி எங்கள் பக்கம்


அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர், கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அப்படி, சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. அவர் நியமனம் செல்லாது எனஅறிவிக்கப்பட்டால், அவர் நிர்வாகிகளை நீக்கியது, புதிய நிர்வாகிகளை நியமித்தது என, அனைத்தும் செல்லாததாகி விடும். மேலும், கட்சி எங்கள் பக்கம் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக, 12 எம்.பி.,க்கள், 12 எம்.எல்.ஏ.,க்கள்,

Advertisement

6,000 நிர்வாகிகள், 45 லட்சம் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணங்கள், தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, தேர்தல் கமிஷன், எங்களுக்கு சாதகமாக முடிவெடுக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Lemuria,இந்தியா
21-மார்-201721:48:54 IST Report Abuse

Ramanதமிழனை முட்டாள் ஆக்கும் சின்னங்களை முடக்கினால் நல்லது

Rate this:
21-மார்-201719:06:06 IST Report Abuse

ரங்கன்யப்பாடியோவ்... அவிங்க காரியம்னா எப்பிடி வுழுந்து, வுழுந்து ஆவணங்கள், கையெழுத்துக்கள்னு ரெண்டே நாள்ள சேக்கறாங்க.... இந்த அக்கறையில் 10 சதவீதமாவது மக்கள் நலனில் காட்டுங்கப்பா...

Rate this:
Narendran Mohan - Chennai,இந்தியா
21-மார்-201718:42:27 IST Report Abuse

Narendran Mohanபேசாம ரெட்டை இலையில் இருந்து ஆளுக்கு ஒரு இலையை புடுங்கி குடுத்துற வேண்டியது தான்

Rate this:
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201717:40:19 IST Report Abuse

Balajiஅநேகமாக தேர்தல் ஆணையத்தின் முடிவு இந்த விவகாரத்தில் சசி பொது செயலாளர் ஆனது செல்லாது என்றும் தற்போது பொது செயலாளர் இல்லாத நிலையில் கட்சியின் சின்னத்தை யாருக்கும் ஒதுக்க முடியாது என்றும் அறிவிக்கும்.......... இப்படி தான் தேர்தல் ஆணையத்தின் முடிவு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்......... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று........

Rate this:
21-மார்-201716:18:49 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சீக்கிரம் முடிவை சொல்லி விடுங்கள். டிவி சீரியல் போல நீண்டுகொண்டே போகிறது. மக்களுக்கு போரடிக்கிறது. அதிரடி படம் போல இருக்கவேண்டும். இரட்டை இலைக்கு தடை, சசிகலா நியமனம் செல்லாது அவர் எடுத்த கட்சி முடிவுகள் செல்லாது, போண்டா வெளியேற்றம் என்று தினமும் சுட சுட செய்திகள் வந்து கொண்டே இருக்கவேண்டாமா? நாங்களெல்லாம் சினிமா படம் பார்ப்பதையே விட்டுவிட்டோம் இந்த 5 மாதமாக. யாருப்பா அங்க புது படம் எதுவும் இதற்கு நடுவில் ரிலீஸ் செய்யாதீர்கள், அப்புறம் வருத்தப்படுவீங்க.

Rate this:
srinivasan - trichy,இந்தியா
21-மார்-201714:56:56 IST Report Abuse

srinivasanதினம் நீ ரொம்ப ஜால்ரா போடுறியே ஓபிஸ் கும் ஸ்டாலினுக்கும் . கொஞ்சம் குறைச்சுக்கோ உடம்புக்கு நல்லது இல்ல.

Rate this:
Suresh -  ( Posted via: Dinamalar Android App )
21-மார்-201714:52:51 IST Report Abuse

Sureshபி.ஜே.பி ன் பேச்சை கேட்டு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒன்று பன்னீர் அணிக்கு அல்லது முடக்கி வைக்கும். ஏனெனில் இந்த விசயங்களும் தான் பி.ஜே.பி-க்கு உதவியாக அமையும். பன்னீர் பி.ஜே.பி - ன் கையாள் என்பதை மறந்து விட வேண்டாம். நேர்வழியில் தமிழகம் வர முடியாத B. J. P கொல்லைபுற வழியாக பன்னீர் உதவியுடன் தமிழகம் வர எத்தனிக்கிறது. சிங்கம் இல்லாததால் இவர்களுக்கு எல்லாம் குளிர் விட்டுப் போச்சு. துரோகி பன்னீர் .

Rate this:
RK NATARAJ - madurai ,இந்தியா
21-மார்-201718:22:42 IST Report Abuse

RK NATARAJநீ லூசா? தமிழகத்தின் உதவி தேவை இல்லாமலே பிரதமர் ஆயாச்சு...

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-மார்-201718:29:54 IST Report Abuse

Cheran Perumalஅந்த அசிங்கம் தான் கூண்டுக்குள் போய்விட்டது. இனி ஜெயா மரண விசாரணை நடந்தால் ஆயுள் தண்டனை வேறு காத்திருக்கிறது. எனவே ஏதாவது ஒரு கேசில் உள்ளே போய்விட்டால் அசிங்கத்தின் கூண்டுக்கே முறைவாசல் செய்யலாமே. பிதற்றுவதை விட்டு ஆக வேண்டியதை பாருங்கள்....

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
21-மார்-201711:18:31 IST Report Abuse

ganapati sbஇது பொது தேர்தல் இல்லாததால் பேசாமல் தற்சமயம் இரட்டை இலையை முடக்கி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்குகள் பெரும் அணிக்கே அந்த சின்னம் என கூறிவிடலாம்

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201714:54:32 IST Report Abuse

தமிழ்வேல் இதுல தாமரைக்கு கொஞ்சம் ஓட்டு கூட விழும்....

Rate this:
Stalin - Kovilpatti,இந்தியா
21-மார்-201711:00:58 IST Report Abuse

Stalinதனது ஆதரவாளர்களுடன் போய் சேர்ந்தார் னு சொல்ராங்க அப்ப இந்த தமிழ்நாட்ல உள்ள ஓட்டளிக்கும் ஏமாளிகள் எப்பதா திருந்துவதாக எண்ணம். திராவிட கட்சிகள் வேண்டாம் என நினைக்கும் வேளையில் அந்த கட்சியல்ல 1 .5 கோடி ஏமாளிகள் இன்னும் இருப்பதாக சொல்வது வேதனை

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201710:54:04 IST Report Abuse

ஜெயந்தன்இரட்டை இல்லை சின் னத்தை முடக்குவதற்கும் சென்னை துறைமுகத்தில் கடந்த நன்கு நாட்களாக கள்ள நோட்டும் ஆயுதங்களும் கன்டைனரில் வந்திருப்பதாக சொல்வதற்கும் சம்பந்தம் இருக்குமோ ??? நான்கு நாட்களாக சல்லடை போட்டும் பிடிபடாத கள்ள நோட்டு நாளை பிடி படுமோ?? " இரட்டை இல்லை சின்னம் முடக்கம்" " கன்டைனரில் கோடி கோடி யாங்க கள்ள நோட்டு அல்லது ஆயுதம் " இந்த இரண்டு சேதியும் நாளை வருமோ ?? இதைப்பார்த்து தமிழக மக்கள் இரட்டை இலையை முடக்கியது சரி என்று எண்ண வேண்டும்.. . தமிழகத்தில் தீவிர வாதிகளின் பிரச்சனை என்று சொல்லி ஆட்சியை கூட கலைத்து விடலாம்... அப்புறம் R .K நகரில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அங்குள்ள வாக்காளர்கள் பிஜேபி க்கு வாக்களித்துவிடுவார்கள் என்று கூட பிஜேபி காரர்கள் எண்ணலாம் அல்லவா??? அதன் பிறகு தமிழிகத்தை வளைத்து விடலாம் என்றும் இருக்குமோ ???

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201714:53:56 IST Report Abuse

தமிழ்வேல் திணைக்கும், அந்த 122 ம் இப்போ கன்டைனர்ல அடைச்சிடுறானுவோளா ?...

Rate this:
Sastha Subramanian - Chennai,இந்தியா
21-மார்-201715:34:29 IST Report Abuse

Sastha Subramanianகற்பனை பிரமாதம் சபாஷ் ....

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement