ரூ. 54 ஆயிரத்துக்கு 2 பெண் குழந்தை விற்பனை:தாய் உட்பட நான்கு பெண்கள் கைது| Dinamalar

ரூ. 54 ஆயிரத்துக்கு 2 பெண் குழந்தை விற்பனை:தாய் உட்பட நான்கு பெண்கள் கைது

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாகர்கோவில்; 54 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு பெண் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் தாய் உட்பட நான்கு பெண்களை ஆசாரிப்பள்ளம் போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் அருகே வடசேரி அருகுவிளையை சேர்ந்தவர் நீலாவதி 21. இவரது கணவர் முத்து. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்தததால் குடும்பம் வறுமையில் வாடியது.
கடந்த டிசம்பர் மாதம் பிரசவத்துக்காக நீலாவதி ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு குழந்தைகளையும் எப்படி வளர்க்க போகிறேன் என்று நீலாவதி கவலைப்பட்டார்.
இந்த நேரத்தில் அவரது சகோதரிகள் கலா 22, ஜெயா 40 ஆகிய இருவரும் குழந்தையை விற்றுவிடும் படி ஆலோசனை கூறியுள்ளனர். இவர்களது ஆலோசனையில் பேரில் தம்மத்துக்கோணத்தை சேர்ந்த வனஜா 38, என்பவருக்கு ஒரு குழந்தையை 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மற்றொரு குழந்தையை துாத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். மூன்று மாதங்கள் இடைவெளியில் இந்த சம்பவம் வெளிவந்தது.
இதுபற்றி குழந்தை கடத்தல் தடுப்பு அதிகார குமுதா ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாய் நீலாவதி, இவரது சகோதரிகள் கலா, ஜெயா மற்றும் குழந்தையை வாங்கிய வனஜா ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
வனஜாவிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை நெல்லை குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மற்றொரு குழந்தையை மீட்க தனிப்படை போலீசார் துாத்துக்குடி சென்றுள்ளனர்,

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.