ரேஷனில் தரமற்ற பருப்பு வினியோகம் | ரேஷனில் தரமற்ற பருப்பு வினியோகம்; ரூ.199 கோடி வீணாகும் அவலம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரேஷனில் தரமற்ற பருப்பு வினியோகம் :
ரூ.199 கோடி வீணாகும் அவலம்

ரேஷன் கடைகளில், தரமற்ற துவரம் பருப்பு வழங்கப்படுவதால், மக்கள் வரிப்பணம், 199 கோடி ரூபாய் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், 1 கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தலா, 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, துவரம் பருப்புக்கு பதில், அதே சுவையுடைய கனடா மஞ்சள் பருப்பு வழங்கப்படுகிறது.

ரேஷன், தரமற்ற, பருப்பு, வினியோகம்

நிதி நெருக்கடியால், உளுந்தம் பருப்பை நிறுத்தி விட்டு, துவரம் பருப்பு, பாமாயில் மட்டும் வழங்க, அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மக்கள் விருப்பம்


அதன்படி, 20 ஆயிரம் டன் அளவுக்கு, துவரம் பருப்பு மற்றும் கனடா மஞ்சள் பருப்பு வாங்க, நுகர்பொருள் வாணிப கழகம், 10ம் தேதி, 'டெண்டர்' கோரியது. அதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில்,

நாமக்கல்லைச் சேர்ந்த, ஒரு குழுமத்தின் இரு நிறுவனங்களுக்கு மட்டுமே, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரேஷனில் வழங்கும் துவரம் பருப்பு தரமற்று இருப்பதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பொது மக்களில் சிலர் கூறியதாவது:

மூன்று மாதங்களுக்கு பின், ரேஷனில் பருப்பு தருவதாக வந்த தகவலை தொடர்ந்து, வாங்கச் சென்றோம். ஒரு கிலோ துவரம் பருப்பில், 200 கிராம் வரை, பருப்பு போல் காணப்படும் விதைகள், கல் உள்ளிட்டவை உள்ளன. பருப்பு வேகவும் அதிக நேரமாகிறது. ஏற்கனவே, சர்க்கரை, கோதுமை முழு அளவில் வழங்காத நிலையில், தரமான பருப்பு வழங்க, அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதி நெருக்கடி


இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் பருப்பு சப்ளையில், இதற்கு முன், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு குழும நிறுவனங்களும், அரசியல்வாதிகள் மட்டுமே பயனடைந்தனர். எனவே, நிதி

Advertisement

நெருக்கடியை காரணம் காட்டி, அத்திட்டத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது, செப்., மாதம் வரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக, 20 ஆயிரம் டன் பருப்பு, 1 கிலோ, 86.50 ரூபாய்க்கு வாங்க, கடந்த வாரம் ஆர்டர் வழங்கப்பட்டது; அதன் மதிப்பு, 199 கோடி ரூபாய்.
நாமக்கல்லைச் சேர்ந்த அந்நிறுவனங்கள், வழக்கம் போல் தரமில்லாத பருப்பு சப்ளை செய்வதால், மக்கள் பணம் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆர்டர் கொடுத்துள்ள முழு அளவுக்கு பருப்பு வரவில்லை. எனவே, உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி, இனி வருவதை, தரமான பருப்பாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201721:47:33 IST Report Abuse

Tamilanநாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்துவதாக கூறி, உலகின் மூளை முடுக்குகளில் இருந்தெல்லாம் மிக மலிவான பொருட்களை பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு இறக்குமதி செய்வது வழக்கமாகி விட்டதும் இதற்கு ஒரு காரணம்.

Rate this:
21-மார்-201718:31:13 IST Report Abuse

ரங்கன்இதெல்லாம் அம்மா ஆட்சியின் சாதனைகள்..... சொன்னதையும் செஞ்சார், சொல்காததையும் செஞ்சார்...அம்மா... அப்பிடி ஒரு ஆளுமை...

Rate this:
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:11:24 IST Report Abuse

Balajiமன்னார் குடி மாபியாக்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனமாக இருக்கும்...... அதனால் தான் தைரியமாக இப்படி 20 சதவிகிதம் அளவுக்கு கலப்படத்தை செய்ய முடிகிறது...... அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கையெடுத்தால் மாபியா கும்பல் அவர்களை சும்மா விடமாட்டார்கள்...... இந்த பயத்தினாலேயே அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க அஞ்சுவார்கள்........ இன்னும் என்னவெல்லாம் நடக்க்க போகிறதோ?????

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
21-மார்-201717:48:08 IST Report Abuse

Endrum Indianஅப்படியே நம்ம 122 கூமூட்டைகளின் மூளை போல வித விதமான கலரில் வந்தாலும் போடுவது ஒரே டாஸ்மாக் அரசு ரேஷன் கடைகளில், என்ன ஒற்றுமை.

Rate this:
21-மார்-201716:21:59 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்ஆட்சி இந்த லட்சணத்தில் தான் நடக்கிறது. அந்த உணவு துறை காமராஜ் என்ன செய்கிறார் , பாரப்பன அக்ரஹாரா சிறை கைதிக்கு கால் பிடித்து விடுகிறாரா?

Rate this:
Janarthanan - Al Khor,கத்தார்
21-மார்-201714:37:27 IST Report Abuse

Janarthananஅன்றாட காட்சி மக்கள் எதனை சாப்பிட்டால் அவங்களுக்கு என்ன ??? இவ்வகை தரமற்ற உணவை உண்பதால் ஏழைகளின் உடல்நிலை மிகவும் கேள்விக்குள்ளாகியது ??? ஏன் இந்த அவலம் ? இதற்கு பதில் நீங்கள் ஒன்றுமே குடுக்காமல் இருந்து விடலாம் ?? அப்படி உடல்நிலை பாதித்து அரசு ஹோச்பிடல சென்றா அங்கு டாக்டர் தான் முக்கியதோவம் தவிர இந்த மக்களுக்கு இல்லை? அவர்கள் அவங்க ஆதங்கத்தை வெளியே காண்பித்தாள் , அவர்கள் மீது டாக்டர்கள் காக்கும் தடுப்பு சட்டம் பாயுமாம் ?? என்ன கொடுமை இது ? எப்பொழுது இந்த சமுதாய ஏற்ற தாழுவுகள் குறைய போகிறதோ

Rate this:
பொலம்பஸ் - CHENNAI,இந்தியா
21-மார்-201714:00:38 IST Report Abuse

பொலம்பஸ்அட கம்மனாட்டிங்களா.....

Rate this:
Sampath Kumar - chennai,இந்தியா
21-மார்-201713:57:24 IST Report Abuse

Sampath Kumarமோடி வந்தால் எல்லாம் சரி ஆகும் அதுக்குதான் இது எல்லாம்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-மார்-201714:37:18 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்மோடி வந்ததால் தான் இதெல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.....

Rate this:
Balu N - Trichy,இந்தியா
21-மார்-201712:09:21 IST Report Abuse

Balu Nபருப்பு விலை வெளி சில்லறை கடையிலேயே 60 முதல் 72 ரூபாய் தான் விற்கிறது . இவர்கள் ஏன் 86 .50 ரூபாய்க்கு எதற்க்காக டெண்டர் விட்டிருக்கார்கள், அதுவும் வீணாப்போன துவரம் பருப்புக்கு.... ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு ஜாலிதான் .........

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
21-மார்-201711:06:43 IST Report Abuse

நக்கீரன்அரசில் இருப்பவர்கள் இப்படி வெளிப்படையாகவே மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள். கேட்பதற்கு அரசியல் கட்சிகளுக்கோ மக்களுக்கோ துப்பில்லை. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? இந்த மக்களை எவ்வளவுதான் செருப்பால் அடித்தாலும் புத்தி வராது.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement