தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடக்காது : மத்திய அரசு உறுதி அளித்ததாக ஜெயக்குமார் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடக்காது : மத்திய அரசு உறுதி அளித்ததாக ஜெயக்குமார் தகவல்

Added : மார் 20, 2017 | கருத்துகள் (12)
Advertisement
தமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடக்காது  : மத்திய அரசு உறுதி அளித்ததாக ஜெயக்குமார் தகவல்

சென்னை: ''தமிழக மீனவர்கள் மீது, இனி எந்த தாக்குதலும் நடைபெறாது என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது,'' என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதன் மீது நடந்த விவாதம்:
ஸ்டாலின்: இந்திய கடல் எல்லையில், மீன் பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த, பிரிட்ஜோ என்ற மீனவர் இறந்தார்; சரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார்.இந்தியாவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய சூழலில், இலங்கை கடற்படை அத்துமீறி உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை, இலங்கை அரசு ஏற்பதில்லை. பேச்சு நடந்தாலும், தாக்குதல் தொடர்கிறது. இந்த மாதத்தில் மட்டும், 32 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். அதை தடுக்க, மத்திய அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு, கச்சத்தீவை மீட்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார்: கச்சத்தீவை பெற வேண்டும் என்கிறார். 1974ல் தாரை வார்த்து விட்டனர். இதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர்.அமைச்சர்: நான், 1974 என்று தான் கூறினேன். அதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள்?
ஸ்டாலின்: நான் அரசியலை கடந்து, மீனவர்களுக்கு விடிவு பிறக்க வேண்டும் என, பேசுகிறேன். சபாநாயகர் தனபால்: அவர், உங்கள் ஆட்சி குறித்து எதுவும் கூறவில்லை.
ஸ்டாலின்: அமைச்சர் கூறிய ஆண்டில், ஆட்சியில் இருந்தது தி.மு.க., அப்போது, கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என, முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமருக்கு கடிதம் எழுதினார். அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, கச்சத்தீவை வழங்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, லோக்சபாவில் செழியன் பேசினார். தி.மு.க., சார்பில், கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஜெயக்குமார்: ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீங்கள் ஏன் செய்யவில்லை?
ஸ்டாலின்: அனைத்து கட்சி கூட்ட தீர்மானத்தில் கையெழுத்திட, அ.தி.மு.க., மறுத்தது ஏன்?ஜெயக்குமார்: இது குறித்து, ஏற்கனவே விவாதித்து விட்டோம். எனவே, இப்பிரச்னையை, தமிழக மக்களிடம் விட்டு விடுவோம். அவர்களுக்கு, யார் துரோகம் செய்தது என்பது, நன்றாக தெரியும்.மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்த தகவல் தெரிந்ததும், அமைச்சர்களுடன் டில்லி சென்றேன். அங்கு, வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசினோம்.
காற்றின் வேகம் காரணமாக, கப்பல் திசை மாறும்போது, எல்லை தாண்டும் சூழல் ஏற்படும். எனவே, மீனவர்களை கைது செய்யக் கூடாது; துன்புறுத்தக் கூடாது; சுடக்கூடாது என, வலியுறுத்தினோம். அவரும், 'இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது' என, உறுதி அளித்தார்.ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்த, 1,240 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என, வலியுறுத்தினோம். அவர் ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் வீதம், மூன்று ஆண்டு களுக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். இந்நிதியில், பாக் வளைகுடா பகுதியில், கட்ட மைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.இலங்கை வசம், 128 விசைப்படகுகள் உள்ளன. அவற்றை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என, வலியுறுத்தினோம். ஏற்கனவே, தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இடையே, நான்கு சுற்று பேச்சு நடந்துள்ளது. அப்போது, 'சுருக்கு வலை, இரட்டை மடிப்பு வலை பயன்படுத்தக் கூடாது' என, இலங்கை மீனவர்கள் வலியுறுத்தினர். அதை ஏற்று, அந்த வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 'இழுப்பு வலையை பயன்படுத்தக் கூடாது' என்றனர்; அதையும் படிப்படியாக குறைத்து வருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:14:18 IST Report Abuse
Balaji அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்..... உடனடியாக நம்பிவிடுவதா????? முதலில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்க்கே இன்னும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்யாமல், அவர்கள் சுடவில்லை என்று வக்காலத்து வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்........ இதில் அவர்கள் சொல்வதை அப்படியே நபுரீங்களாக்கும்.........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201711:26:34 IST Report Abuse
Nallavan Nallavan அவனுக கொடுத்த உறுதியைத் தண்ணியில எழுதி வையுங்க பாஸ் ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201709:12:55 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்றைய நாளில் மிக சிறப்பான உயரிய சிரிப்பு செயதி இதுதான்...
Rate this:
Share this comment
Cancel
SANKAR - calgary,கனடா
21-மார்-201708:37:39 IST Report Abuse
SANKAR மீன்பிடி படகுகள் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு மீன் இனவிருத்தி இல்லை.. என்ன செய்வார்கள் மீனை தேடி உள்ளெ போகிறார்கள்... கடைசியில் இலங்கை சிறையில் அடை படுகிறார்கள்... வாழ்க்கை போராட்டம் ஆகி விட்டது...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201719:10:05 IST Report Abuse
Rajendra Bupathiஉங்கள் கருத்து உண்மைதான்?...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201719:11:24 IST Report Abuse
Rajendra Bupathiஆமாம் நாமோ, மத்திய அரசோ உறுதி மொழி கொடுத்து என்ன ஆவப்போவுது? இலங்கை அரசு கொடுக்க வேணாமா?...
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201719:12:44 IST Report Abuse
Rajendra Bupathiஅடிக்கறவங்கதான் அடிக்கமாட்டோம் அப்படின்னு உறுதி மொழி கொடுக்கணும்?...
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201708:25:22 IST Report Abuse
Rajendra Bupathi ஒரு நாட்டு எல்லையை தாண்டி அவுங்க பகுதிக்கு போனா அந்த நாடு நடவடிக்கை எடுக்குமா? இல்ல எடுக்காதா? நாம எடுப்போமா? இல்ல எடுக்க மாட்டோமா?
Rate this:
Share this comment
Rajasekar K D - Kudanthai,இந்தியா
21-மார்-201715:03:05 IST Report Abuse
Rajasekar K Dநடவடிக்கை எடுக்கலாம் ஆனால் சுடக்கூடாது. இலங்கைக்கு பாகிஸ்தான் இந்த விஷயத்தில் மேல்....
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201708:23:44 IST Report Abuse
Rajendra Bupathi யாருமே எல்லையை தாண்டி போகாதீங்க?போனா அதுக்கு அரசு எந்த வித பாதுகாப்பும் கொடுக்காதுன்னு அறிவிக்கனும்? ஆனா ஓட்டு வங்கி அங்க இருக்கே எந்த கட்சி காரன் அப்படிசொல்லுவான்?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201708:21:59 IST Report Abuse
Rajendra Bupathi ஆமாம் இவர்கள் எல்லை தாண்டத வரையில்?ஆனா பொழப்ப ஓட்டனுமே? அதனால அங்க போயிதான் ஆவனும்? ஒத பட்டுதான் ஆவனும்? ஜெயிலுக்கு போயிதான் ஆவனும்? இதை எல்லாம் யாரும் தடுக்கவே முடியாது? விதி யாரை உட்டுது?
Rate this:
Share this comment
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
21-மார்-201707:24:59 IST Report Abuse
Jaya Prakash நம்பிட்டோம் அங்கிள்....
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201719:09:15 IST Report Abuse
Rajendra Bupathiநீங்க நம்புனாலும் நம்பாட்டாலும் உண்மை அதுதான் மாப்பள?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை