பெண் இன்ஜி., தற்கொலை வழக்கு இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஜி., தற்கொலை வழக்கு இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை

Added : மார் 20, 2017 | கருத்துகள் (8)
Advertisement
பெண் இன்ஜி., தற்கொலை வழக்கு இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டு சிறை

தஞ்சாவூர் : தஞ்சையில், சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அகிலா (எ) அகிலாண்டேஸ்வரி, 32; சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், சென்னையில் ஒரு நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் பணிபுரிந்தார். பல்வேறு நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வும் செய்து கொடுத்துள்ளார்.
விசாரணை : அப்போது, சிலரிடம் பணம் பெற்று, வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து, 2007ல், தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம், கார்த்திக் என்பவர் புகார் அளித்தார்.இதையடுத்து, தஞ்சாவூரை சேர்ந்த ஜானகிராமன், இளையராஜா மற்றும் அகிலா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் விசாரணை நடத்தினார். விசாரணைக்காக, திருச்சி வந்த அகிலாவை, 2007ல் நவம்பர் 11ம் தேதி, சேதுமணி மாதவன், போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்து, தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்ததாகவும், அந்த அறைக்கு அவர் அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், 2007 நவம்பர் 19ம் தேதி, விடுதி அறையில், அகிலா துாக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கு இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் உள்ளிட்டோர் தான் காரணம் என, புகார்கள் எழுந்தன. அகிலா, தன் தாய்க்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில், தன் சாவுக்கான காரணங்களையும், சேதுமணி மாதவன் உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். உயிரிழந்த அகிலா, புதுக்கோட்டை முன்னாள் எம்.பி., முத்துச்சாமி வல்லத்தரசின் மகன் வழி பேத்தி என்பதால், இந்த வழக்கு, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, சேதுமணி மாதவன், அவருக்கு உதவியாக இருந்ததாக, தஞ்சாவூர் அரசு வாகன பணிமனை முன்னாள் பணியாளர் பாலு, போலீஸ் ஏட்டு கணேசன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக பின், இந்த வழக்கு, 2008ல் சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்த சேதுமணி மாதவன், மீண்டும் பணியில் சேர்ந்து, தற்போது மதுரை தெப்பக்குளம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். பாலு, சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.தஞ்சாவூர், மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், நேற்று மாலை தீர்ப்பளித்தார். அதில், கூட்டு சதிக்கு, 10 ஆண்டு கடுங்காவல், அரசு ஊழியர் நம்பிக்கை துரோகம் செய்தலுக்கு, 10 ஆண்டு கடுங்காவல், சட்டத்துக்குப் புறம்பாக அடைத்து வைத்தலுக்கு, இரண்டு ஆண்டு சாதாரண சிறை தண்டனை விதித்த நீதிபதி, இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க (10 ஆண்டுகள்) உத்தரவிட்டார். பாலு இறந்து விட்டதால், தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஏட்டு கணேசனும், விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ
21-மார்-201716:48:46 IST Report Abuse
Nalanvirumbi இவனையெல்லாம் உடனே கொல்லக்கூடாது. HIV, CANCER போன்ற நோய்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகளை சோதனை செய்வதற்கு இவனையெல்லாம் பயன்படுத்தலாம்......
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-மார்-201713:25:10 IST Report Abuse
Meenu மூஞ்சிய பாருங்க, சரியான ரவுடி மாதிரி. ஒரு ஆபிசருக்கு உண்டான மூஞ்சியா இது.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுது. ஜென்மத்துக்கும் ஜெயிலில் போடணும்.
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
21-மார்-201713:12:24 IST Report Abuse
Muthukumaran இந்த நாயை விஷ ஊசி போட்டு கொன்று விடலாம். எதுக்கு சிறை தண்டனை?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை