குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?

Added : மார் 20, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்?

குஜராத்: உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.,வின் அசுர வெற்றியை அடுத்து, மோடி அலையைப் பயன்படுத்தி குஜராத்தில் முன்கூட்டியே சட்டசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.


மோடி அலை


பிரதமர் மோடி முதலமைச்சராக இருந்த மாநிலமான குஜராத்தில் 2019-ல் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 19 ஆண்டுகளாக அங்கு பா.ஜ., தொடர்ந்து ஆட்சி செய்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 4 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுக்க மோடி அலை வீசுவதாகக் கூறியுள்ள குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட்டால் 182-ல் 150க்கும் மேற்பட்ட இடங்களை பா.ஜ.,வெல்லும் என கூறியுள்ளார்.


முன்கூட்டியே தேர்தல்


முன்கூட்டியே தேர்தல் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், கட்சித் தொண்டர்கள், தேர்தலுக்கான வேலையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். மேலும் மோடி, அமித்ஷா அடங்கிய பேனர்களை தயாரித்து வருகின்றனர். குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அங்கு பா.ஜ., பெறும் வெற்றி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201713:18:05 IST Report Abuse
Pasupathi Subbian அடிக்கும் மோடி அலையை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களோ.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201711:11:27 IST Report Abuse
Nallavan Nallavan குஜராத்தில் இந்த முறையும் பெரும்பான்மை கிட்டும் ..... ஆனால் இதுவரை கிடைத்தது போல அல்ல ....
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
21-மார்-201710:33:28 IST Report Abuse
Jayadev அங்கே ஏற்கனேவே கோஷ்டிகள் இருக்கிறது மோடியின் எதிரி ஹிருத்திக் படேல் இன்றைக்கு வலுவாக இருப்பதால் இப்படி டூபாக்கூர் செயதிகள் பிஜேபி வெளியிடும் ஆனால் தேர்தல் வராது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:36:00 IST Report Abuse
Srinivasan Kannaiya அம்மாவாசை சோறு நிதம் கிடைக்குமா.... சந்தேகமே....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201708:35:18 IST Report Abuse
Srinivasan Kannaiya தேன் குடித்த நரி ஆகிவிட்டீர்கள்...போல் உள்ளதே... மீண்டும் வெற்றி கனியை சுவைக்க மனம் ஏங்குதா....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-201707:33:06 IST Report Abuse
K.Sugavanam காற்றுள்ள போதே தூற்றிக்கொள்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201704:16:17 IST Report Abuse
Kasimani Baskaran இது மோடி அலை அல்ல மோடி சுனாமி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை