'ஆர்.எஸ்.எஸ்., தலையீடு கிடையாது'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ''உ.பி., மாநில முதல்வர் தேர்வில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடவில்லை,'' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். உ.பி., முதல்வராக, இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்றுடைய, யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
இது குறித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உ.பி., மாநில, பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தான், யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தனர். கட்சியின் விதிமுறைப்படி, தங்கள் தலைவரை, எம்.எல்.ஏ.,க்கள் முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிட்டது கிடையாது. யோகி ஆதித்யநாத், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். துரதிருஷ்டவசமாக, சிலர், அவர் மீது, ஜாதிச் சாயம் பூசுகின்றனர். ஆதித்யநாத்திற்கு போதிய வாய்ப்புகள் தராமல், அவரை விமர்சிப்பது, நியாயமற்றது. எதிரிகளின் விமர்சனங்கள் பொய்யானவை என்பதை, யோகி ஆதித்யநாத் நிரூபிப்பார்.

இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201714:10:08 IST Report Abuse
Pasupathi Subbian ஹிந்துக்கள் என்றாலே வெறுப்பு வரும் பார்ட்டிகளை மனதில் வைத்துக்கொண்டு எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் அப்படித்தான் என்று புறம்தள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்