279 தொழில்நுட்ப கல்லூரிகள் : 23 பல்கலைகள் 'டுபாக்கூர்'| Dinamalar

279 தொழில்நுட்ப கல்லூரிகள் : 23 பல்கலைகள் 'டுபாக்கூர்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் வெளியிடுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும், 23 பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் கல்லுாரிகளும் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் படித்தால், அங்கீகாரம் பெற்ற கல்விச் சான்றிதழ் கிடைக்காது என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.இந்த பட்டியலில், 66 போலி கல்லுாரிகள் மற்றும் 23 போலி பல்கலைகளுடன், டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிர மாநிலங்கள் உள்ளன. 'இந்த போலி கல்லுாரி, பல்கலைகள் குறித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிய அனுமதியை பெறும்படி, இந்த கல்வி அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

போலி கல்வி நிறுவனங்கள் குறித்த தகவலை, www.ugc.ac.in மற்றும் www.aicte-india.org இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marimuthu Palanimuthu - salem,இந்தியா
21-மார்-201716:47:11 IST Report Abuse
Marimuthu Palanimuthu வெட்கக்கேடு அனுமதி கொடுத்தது யார்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
21-மார்-201713:25:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அச்சச்சோ இப்போதான் தெரியுமோ எவ்ளோ மந்திரிகள் இருக்காளா அவ்ளோ கல்லூரிகளும் பலக்லைக்கழகங் களும் இருக்கே டூஆக்குற லே முதலிடம் பிஹார் ரெண்டாவது ஒரிசா மூணாவது தமிழ்நாடு என்று படிச்சேன் இதை தொடர்வானா கார்நாடகா ஆந்திரா கேரளம் ..........................................நீளமான தொடர்ச்சிகளே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.