தடுப்பூசி ரத்தக்கட்டு கேன்சராக மாறியது; சிகிச்சைக்கு தவிக்கும் 6 வயது சிறுவன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி ரத்தக்கட்டு கேன்சராக மாறியது; சிகிச்சைக்கு தவிக்கும் 6 வயது சிறுவன்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தடுப்பூசி ரத்தக்கட்டு கேன்சராக மாறியது; சிகிச்சைக்கு தவிக்கும் 6 வயது சிறுவன்

சத்தியமங்கலம்: தடுப்பூசி ரத்தக்கட்டு, கேன்சர் கட்டியாக வளர்ந்ததால், 6 வயதுசிறுவனின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், கொமரபாளையத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 28; மனைவி சுசீலா, 24. இவர்களின் மகன் அன்பரசு, 6; குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும் போது, அங்கன்வாடி மையத்தில், அம்மை தடுப்பூசி, சிறுவனின் வலது தொடையில் போட்டனர்.
ஊசி போட்ட இடத்தில், சிறிய ரத்தக்கட்டு உருவானது. நாளடைவில் சரியாகி விடும் என, கருதினர். ஆனால், 2 வயது வரை சிறிதாக இருந்த ரத்தக்கட்டு, குழந்தையுடன் சேர்ந்து கட்டியாக வளர்ந்தது. சிறுவனுக்கு தற்போது, 6 வயதாகும் நிலையில், 3 கிலோ எடையில், கேன்சர் கட்டியாக மாறியுள்ளது.
கட்டட கூலி தொழிலாளியான ராதாகிருஷ்ணன், இதுவரை, மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தும், குணமாக்க முடியவில்லை.சக குழந்தைகளை போல, அன்பரசுக்கும் பள்ளி செல்லும் ஆசை எழுந்துள்ளது. 'உடல்நிலை எப்போது சரியாகும்; நான் எப்போது பள்ளி செல்வேன்' என அவன் கேட்கும் கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல், ஏழை பெற்றோர் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தாய் சுசீலா, கண்ணீருடன் கூறியதாவது: ரத்தக்கட்டு, கட்டியானவுடன் மருத்துவர்களிடம் காட்டினோம். சாதாரண கட்டி தான்; நாட்கள் செல்ல செல்ல கரைந்து விடும் என்றனர். ஆனால், 3 கிலோ எடையில் கேன்சராக மாறி விட்டது. நாங்களும் பார்க்காத மருத்துவம் இல்லை. 'கேன்சர் கட்டி இருக்கும் காலை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். எங்களிடம் இதற்கு மேல் வைத்தியம் பார்க்க வசதியில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம், அரசு தரப்பில், உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உதவ நினைப்பவர்கள், 83445 45882, 89034 17882 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manivannan - chennai,இந்தியா
22-மார்-201713:29:08 IST Report Abuse
manivannan இந்த குழந்தையின் நிலைமையை கண்டு நம் நீதிபதியே நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் நல்ல விஷயம். அவருக்கு பாராட்டுக்கள் தினமலருக்கு மிகவும் நன்றியும் பாராட்டுகளும். இந்த பகுதியிலேயும் எல்லாரும் மிகவும் நல்ல வழிகளை காண்பித்து இறைவனை வேண்டி அக்கறை காண்பித்திருப்பது மனித நேயத்திற்கு சான்றாக இருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிச்சயமாக ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்பார்.. அவரால் ஆகாதது ஒன்றும் இல்லை. ... குழந்தைக்கு குணமடைய ஆசிர்வாதம்
Rate this:
Share this comment
Cancel
ramamoorthy - NEW DELHI,இந்தியா
21-மார்-201719:55:20 IST Report Abuse
ramamoorthy சென்னை ஐகோர்ட் க்கு ரொம்ப நன்றி. இந்த பிஞ்சு குழந்தையின் மருத்துவ உதவிகளை செய்ய அரசுக்கு உத்தரவு இன்று பிறப்பித்ததாக அறிகிறேன். நீதி மன்றங்களில் இவ்வளவு வேலை பளுக்கு நடுவே மக்கள் மனதில் பாலை வார்த்த நீதிபதிக்கு நன்றி. தினமலருக்கும் நன்றி. உயர் தர சிகிச்சை கிடைக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்.
Rate this:
Share this comment
vasu - chennai,இந்தியா
22-மார்-201701:20:52 IST Report Abuse
vasuதிரு நீதிபதி அவர்களுக்கு நன்றிகள் கோடி ஐயா.....அப்படியே அந்த உதவி சரியான நேரத்தில் வந்தடைய (சோம்பேறி அரசினால் )கண்காணிப்பதும் நல்லது... அப்படி கண்காணித்து இந்த பிள்ளையை குணப்படுத்தினால் நீங்களே உண்மையான மனிதவடிவ தெய்வம் அய்யா.....உங்களின் சந்ததிகள் நீடுடி வாழ்க......ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel
Jamesbond007 - Nagercoil,இந்தியா
21-மார்-201719:04:14 IST Report Abuse
Jamesbond007 உடனடி தேவை இந்தவிதமான கட்டியை நீக்கும் முறையை அறிந்த டாக்டர்ஸ். அந்த ஸ்பெசலிஸ்ட் டாக்டரிடம் இவர்களை கொண்டு சேர்க்க இந்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-மார்-201717:29:19 IST Report Abuse
samuelmuthiahraj தடுப்பு ஊசி போட்ட அரசின் சார்பில் சிறுவனுக்கு இதுவரை மேற்கொண்ட மருத்துவ செலவீனமும் இனி மேற்கொள்ளவேண்டிய செலவீனமும் பணிக்கு செல்லமுடியாது பையனை பராமரிக்கும் பெற்றோருக்கு உரிய செலவீனமும் அரசு கொடுத்திடவேண்டும் உரிய நடவடிக்கையினை தினமலர் நிறுவனம் எடுப்பது நல்லது
Rate this:
Share this comment
Cancel
Parthiban V - Tamilnadu,இந்தியா
21-மார்-201715:06:37 IST Report Abuse
Parthiban V வேலூர் சி எம் சி ஹாஸ்பிடல் அல்லது சென்னை அடையார் கான்செர் இன்ஸ்டிடியூட் போகலாமே...
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
21-மார்-201709:08:44 IST Report Abuse
manivannan ஆண்டவரே நீரே இரக்கத்தின் தேவன் அப்பா இந்த குழந்தையை கண்ணோக்கி பாரும் அப்பா. இந்த கட்டியை மறைய செய்யும் அப்பா. தேவன் நீரே சிகிச்சை க்கான வழியை திறந்து கொடும் ஆண்டவரே ,நீர் மாத்திரமே இந்த குழந்தையை குணமாக்கி ஆசீர்வதியும். நன்றி ஆண்டவரே.
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
21-மார்-201701:25:09 IST Report Abuse
LAX கடவுளே.. உயிர் காக்கும் கடவுள்களாக நம்பப்படும் மருத்துவர்கள், உடனடியாக இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்து, இவனுக்கும், இவனது பெற்றோருக்கும் நிம்மதி அளிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Mahendran - Simi Valley,யூ.எஸ்.ஏ
21-மார்-201709:00:16 IST Report Abuse
Mahendranஇந்த சிறுவனின் பெற்றோர்கள் கீலே உள்ள மருத்துவரை அணுகினால் உடனே சரி செய்ய வாய்ப்பு உள்ளத்து. Dr. Yeshi தொண்டன். Mcleod Ganj, Dharamsala, Distt. Kangra H.P. Pin - 176219 Ph: 0091 1892 221461 ://yeshidhonden.com/contact-info/...
Rate this:
Share this comment
Mahendran - Simi Valley,யூ.எஸ்.ஏ
21-மார்-201709:02:35 IST Report Abuse
Mahendranஇந்த சிறுவனின் பெற்றோர்கள் கீலே உள்ள மருத்துவரை அணுகினால் உடனே சரி செய்ய வாய்ப்பு உள்ளத்து. Dr. Yeshi தொண்டன். Mcleod Ganj, Dharamsala, Distt. Kangra H.P. Pin - 176219 Ph: 0091 1892 221461 ://yeshidhonden.com/contact-info/...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201711:32:06 IST Report Abuse
Nallavan Nallavanமகேந்திரன் குறிப்பிட்ட தகவலை அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிப்பேன் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை