என்னை கடிச்ச நாய்களை பிடிங்க! : போலீசில் இப்படியும் ஒரு புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்னை கடிச்ச நாய்களை பிடிங்க! : போலீசில் இப்படியும் ஒரு புகார்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
என்னை கடிச்ச நாய்களை பிடிங்க! : போலீசில் இப்படியும் ஒரு புகார்

திருப்பூர்: 'என்னை கடித்த நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும்' எனக் கூறி, திருப்பூரில் ஒருவர், போலீசில் புகார் கொடுக்க சென்றதால், போலீசாருக்கு, ஆத்திரத்தோடு, சிரிப்பும் வந்தது.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், நேற்று காலை, வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, ராமகிருஷ்ணன், 40, என்பவர் தள்ளாடியபடி வந்து, வரவேற்பாளரிடம் ஒரு புகாரை சொன்னார்.'ஊத்துக்குளி ரோட்டில் நடந்து சென்ற போது, என்னை, மூன்று நாய்கள் கடித்து விட்டன; அதை உடனடியாக பிடிக்க வேண்டும்' என்பது தான், அந்த புகார். பணியில் மூழ்கியிருந்த போலீசார், ஒவ்வொருவரின் முகத்தை பார்க்க, ஆத்திரம் கொப்பளித்தாலும், மறு பக்கம் சிரிப்பையும் அடக்க முடியவில்லை. இதை கண்டுகொள்ளாத ராமகிருஷ்ணன், நாய்களின் பெயர் ஜூலி, செம்பட்டை, கருப்பன் என கூறியதால், 'ஆரம்பமே இப்படி இருக்கே...' என, போலீசார் நொந்து கொண்டு, 'ஏம்பா... இது, போலீஸ் ஸ்டேஷன்... முதல்ல மருத்துவமனைக்கு போய் ஊசியை போட்டு கொள்' என, அறிவுறுத்தினர். ஆனால், போலீசாரின் பேச்சை காதில் வாங்காத அவர், 'எங்க ஏரியாவுல நிறைய நாய்கள் சுத்தி சுத்தி வருது. எங்க ஏரியாகாரங்க தான், இங்க போய் புகார் கொடுக்க சொன்னாங்க' என, திரும்பத் திரும்ப பேசியபடி, அடம் பிடித்தார். ஒரு வழியாக, அந்த நபருக்கு புரிய வைத்து, அனுப்புவதற்குள், போலீசார் படாதபாடு பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
21-மார்-201722:12:51 IST Report Abuse
raghavan சிரிக்கவேண்டிய விஷயமா இது? தெருநாய்களை முற்றிலுமாக ஒழியுங்கள் என்று பெரும்பாலானோர் சொன்னாலும் அதை காரில் பவனி வரும் இரண்டுகால் பிராணிகளின் சட்ட பேச்சுக்கு பயந்து கொண்டு அதிகாரிகள் ஒதுங்கிவிடுகிறார்கள், இதனால் அவதி படுவது தெருவில் நடந்து பிழைப்பை நடத்தும் சாதாரண மனிதர்கள்தான். குறிப்பாக, கசாப்பு கடை, மீன் மார்க்கெட் இங்கெல்லாம் சுற்றி திரியும் நாய்கள் கூட்டம் பயங்கர வெறியோடும் பலத்தோடும்தான் திரிகின்றன. நாய்களுக்குள் ஏரியா சண்டை நடந்தால் நடுவில் மாற்றுபவன் பாடு திண்டாட்டம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201716:01:12 IST Report Abuse
Syed Mustafa ஜுலி பேச்சைக் கேட்டு கருப்பனும்,செம்பட்டையும் செஞ்சது சரியில்ல இருந்தாலும் முன் ஜாமின் போட்டு வைக்கிறது நல்லது ?
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201712:00:27 IST Report Abuse
Venki தெரு நாய்களுக்கு முற்றிலும் ஒழிக்க வேண்டும் வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Stalin - Kovilpatti,இந்தியா
21-மார்-201711:10:09 IST Report Abuse
Stalin அவங்க வேலையை வேற அவங்கடா போய் இப்படி சொல்லலாமா
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
21-மார்-201711:04:48 IST Report Abuse
Mohammed Abdul Kadar அந்த நபர் சொல்வது சரி தான், மேலும் அந்த தெரு நாய்களை பிடித்து மேனகா வீட்டில் அல்லது புளுகிராஸ் அமைப்பை சேர்ந்த அவர்களுடைய வீட்டில் விட்டு விடுவது நல்லது , கரணம் இப்படி பட்ட வெறி நாய்களை கொல்வது பாவமாம் ஆனால் வெறி நாய் கடித்து மனிதன் இரநதால் பாவம் இல்லையாம் ஆகவே இந்த வெறிநாய்கள் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வளர்க்க வேண்டும் , அவர்களும் கடி பட வேண்டும் ,
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
21-மார்-201705:39:24 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே முட்டாள் போலீஸ் காரங்க, அந்த நாய்களை பிடிக்காம அலையும் நகராட்சி ரெண்டு கால் நாய்ங்க மேல கேசு பதிந்திருக்கலாம் ?
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
21-மார்-201704:40:02 IST Report Abuse
Subramanian Arunachalam திரு ராமகிருஷ்ணன் அவர்கள் செய்தது சரியே . நாய் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஒரு காட்டுமிராண்டி கும்பல் மனிதர்களை வெறி நாய்களை விட்டு கடிக்க வைத்து அதை veடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது . இதற்கு நீதி மன்றங்களும் ஆதரவு கொடுக்கிறது . அதனால்தான் ஒரு சாமானியன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை