1,180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு! Dinamalar
பதிவு செய்த நாள் :
பாதிப்பு!
1,180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

மின் தேவை அதிகரித்து வரும் சூழலில், ஒரே சமயத்தில், 1,180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.பராமரிப்பு பணிக்காக, கல்பாக்கம் அணு மின் நிலையத்தில், நேற்று முன்தினம் மதியம், 220 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

 1,180 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

என்.டி.பி.எல்., - என்.எல்.சி., மின் நிலையங்களில், தொழில்நுட்ப கோளாறு, 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, 750

மெகாவாட் உற்பத்திநிறுத்தப்பட்டது.

மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்


வட சென்னை மின் நிலையத்திலும், பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக, 210 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய மின் நிலையங்களில்,தமிழகத்துக்கு, 5,475 மெகாவாட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றில் பழுது, பராமரிப்பு பணியால், சில தினங்களாக, சராசரியாக, 3,800 மெகாவாட் மட்டும், தினமும் வழங்கப்படுகிறது.தற்போது, வெயில் கடுமையாக உள்ளதால், அன்றாட மின் தேவை, 13 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது.

Advertisement

இது, தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால், விரைவில் பழுதை சரி செய்யுமாறு, மத்திய மின் நிலைய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதுஇவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement

Advertisement

மேலும் எக்ஸ்குளுசிவ் செய்திகள்:



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
மேலும் செய்திகள்