23 பல்கலைகள் 'டுபாக்கூர்' | 279 தொழில்நுட்ப கல்லூரிகள், 23 பல்கலைகள் 'டுபாக்கூர்' Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
279 தொழில்நுட்ப கல்லூரிகள்
23 பல்கலைகள் 'டுபாக்கூர்'

புதுடில்லி, :நாடு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைகள், டுபாக்கூர்

ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும்
வெளியிடுகின்றன.


சான்றிதழ் கிடைக்காது


அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும், 23பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் கல்லுாரிகளும் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் படித்தால், அங்கீகாரம் பெற்ற கல்விச் சான்றிதழ் கிடைக்காது என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில், 66 போலி கல்லுாரிகள் மற்றும் 23 போலி பல்கலைகளுடன், டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிர மாநிலங்கள்உள்ளன.

கடிதம்


'இந்த போலி கல்லுாரி, பல்கலைகள் குறித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தகவல்

Advertisement

கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிய அனுமதியை பெறும்படி, இந்த கல்வி அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
போலி கல்வி நிறுவனங்கள் குறித்த தகவலை,www.ugc.ac.in மற்றும் www.aicte-india.org இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnai Kannan - CHENNAI,இந்தியா
21-மார்-201723:03:00 IST Report Abuse

Chinnai Kannan by taking more action they will close college.atleast ugc will get money from those colleges next year is the only reason for not taking action.for that students time,money is wasted.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:03:48 IST Report Abuse

Balajiஅனைத்து போலி கல்வி நிறுவனங்களின் மற்றும் பல்கலைக்கழகங்களின் பெயர்களை வெளியிட வேண்டும்...... அதை எதற்க்காக மூடி வைக்கிறார்கள் என்று புரியவில்லை....... மாணவர்களின் மீது அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது........ இல்லையென்றால் பெறவேண்டியதை பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை........ உடனடியாக முறையான அனுமதி பெற்ற பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவங்களின் பெயர்களை வெளியிட வேண்டும்............

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
21-மார்-201716:32:08 IST Report Abuse

Indianபலர் போலிச்சான்றிதழ்களுடன் அரசின் மிகப்பெரும் பதவிகளில் இருக்கவில்லையா..

Rate this:
karthi - MADURAI,இந்தியா
21-மார்-201715:00:08 IST Report Abuse

karthiஇது தெரிஞ்சும் சும்மா கைகட்டி வேடிக்கை பாக்குற நாம தான் பெரிய "டுபாக்கூர்".

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-மார்-201709:11:30 IST Report Abuse

Srinivasan Kannaiyaகல்லூரி செல்லாமல் காசுக்காக மட்டும் இந்த பல்கலை கழகங்களால் கொடுக்கப்படும் பட்டங்கள் அயல்நாடுகளில் சக்கை போடு போடுகிறது.... இன்னும் சொல்ல போனால் அயல்நாடுகளில் உண்மையாக படித்து பட்டம் வாங்கியவர்களை விட டுபாக்கூர் பட்டங்கள் வைத்து இருப்பவர்கள்... குரலை உயர்த்தி பேசி மிகந்த செல்வாக்குடன் இருக்கிறார்கள் என்பது உண்மை... இந்த டுபாக்கூர் பட்டங்களில் மத்திய அரசு கல்வி துறையும் உண்மைதான் என்று சாப்பா குத்தி பல நாடுகளுக்கு அனுப்புகிறது... இந்தியாவில் டுபாக்கூர் பட்டங்கள்அ,,த்தாட்சிகள் பெருகிவிட்டது என்பது நிதர்சனமான உண்மை....

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
21-மார்-201708:39:51 IST Report Abuse

balakrishnanஇந்த லட்சணத்தில் இங்கே இருந்து படித்து வெளியே வருபவர்கள் என்ன தகுதியோடு இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், தற்போது பொறியியியல் கல்லூரியில் படித்து வெளிவருபவர்கள் பத்து சதவிகிதத்தினர் கூட அந்த படிப்புக்கு ஏற்ற தகுதியை பெறவில்லை என்ற ஒரு ஆய்வு வேதனை அளிக்கிறது, மேலும் இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே வேலைவாய்ப்பை பெறுகிறார்கள், இப்படிப்பட்ட சூழலில் வருடத்திற்கு ரெண்டு கோடி பேருக்கு எப்படி மத்திய அரசு வேலை வழங்கும் என்று தெரியவில்லை

Rate this:
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
21-மார்-201707:23:36 IST Report Abuse

Jaya Prakashஎனக்கு ரொம்ப காலமா ஒரு டவுட்..... யுஜிசி வருடாவருடம் கிளிப்பிள்ளை மாதிரி இந்த லிஸ்டை கொடுத்து வாயை மூடிக்கொள்ளும்.... சட்டம் புரியவில்லை.... போலி என்று சொல்கிறீர்கள் ... அப்போ ஆக்ஷன் எங்கே?..... எனக்கு தெரிந்து ஒரு 20 வருடம் யுஜிசி இந்த அறிவிப்பை மட்டும்தான் செய்கிறது..... எந்த அரசாங்கமும் எந்த போலி யின் மீதும் ஆக்ஷன் எடுக்கவில்லை.....

Rate this:
Bava Husain - riyad,சவுதி அரேபியா
21-மார்-201715:31:30 IST Report Abuse

Bava Husainஎன் கேள்வி, உங்கள் கருத்தில்......உண்மை, நன்றி......

Rate this:
kundalakesi - VANCOUVER,கனடா
21-மார்-201706:44:18 IST Report Abuse

kundalakesiகல்வி கற்பிக்கப் படுகிறது. அது JNU வில் இனாம் தின்னு கொழுத்து நாட்டு துரோகம் செய்கிறார்களா, அரசாங்க கஜானாக்கு கப்பம் காட்டாமல் பிரைவேட் கல்வியாக படித்து வெளிநாட்டு வேலையா என பார்க்க வேண்டும்.

Rate this:
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
21-மார்-201705:36:04 IST Report Abuse

என்னுயிர்தமிழகமேநம்ம அண்ணாமலை அதுல இருக்கா?

Rate this:
naveen - ,
21-மார்-201706:09:48 IST Report Abuse

naveenAnnamalai university - distant education ~ ugc has cancelled its accreditation...

Rate this:
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
21-மார்-201705:03:11 IST Report Abuse

Samy Chinnathambiஅப்போ கலைஞர் கருணாநிதி தொழில் நுட்ப கல்லூரி ஒரிஜினலா டூபாக்கூரா சார்?

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement