'தா'வரம்...மண்ணுக்கு இதுதானே வரம்...! இன்று உலக வன நாள்| Dinamalar

'தா'வரம்...மண்ணுக்கு இதுதானே வரம்...! இன்று உலக வன நாள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
'தா'வரம்...மண்ணுக்கு இதுதானே வரம்...! இன்று  உலக  வன  நாள்


மரம் தாய்அதை மறந்தாய்-கவிஞர் அறிவுமதி.மரம் தான் மரம் தான்மரம் தான்அதை மறந்தான் மறந்தான்மனிதன் மறந்தான்-கவிஞர் வைரமுத்து.

இப்படி ஏராளமான கவிதைகள், இயற்கை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன. இதை எல்லோரும் உணர்ந்துக் கொண்டிருந்தால், இன்று தமிழகம் எங்கும் மரங்களின் ஆட்சி வியாபித்திருக்கும். ஆனால், வளர்ச்சி என்ற சப்பை கட்டு கட்டி, மரங்களை அடியோடு சாய்த்ததால், வெயிலின் உக்கிரம் வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், மார்ச் 21ம் தேதி, உலக வன நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கும், மேம்பாட்டுக்கும், வனவளம் மிகவும் முக்கியமானது. 'காங்கோ மற்றும் அமேசான்' போன்ற வெப்பமண்டல பகுதிகளில், மழை அதிகமாக பெய்கிறது என்றால், அங்கு வன வளம் அதிகமாக இருக்கிறது.
மரங்கள் இல்லாத நிலப்பரப்பில், மழை பெய்தால், மூன்று சதவீதம் தண்ணீர் மட்டுமே, நிலத்தால் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள தண்ணீர் பள்ளத்தாக்கு பகுதியை நோக்கி ஓடி, யாருக்கும் பயனில்லாமல் போகிறது. அதிக வனம் உள்ள பகுதிகளில், மழை பெய்தால், 33 சதவீதம் தண்ணீர் நிலத்துக்குள் சென்று, நீர்மட்டத்தை உயர்த்துகிறது.

வெறும் 20 சதவீதம் தான்

ஒரு நாட்டின் மொத்த நிலப்பரப்பில், 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டில், 20 சதவீதத்துக்கும் குறைவான காடுகளே உள்ளன. இதனால், பருவமழை பொய்த்து, காலநிலை மாற்றத்துக்கு வித்திடுகிறது.ஆண்டுதோறும், பல்வேறு திட்டங்கள் மூலம், மரங்கள் நடப்பட்ட போதும், முறையான பராமரிப்பு இல்லாததால், இதுபோன்ற திட்டங்களும் செயலிழந்து வருகின்றன.இச்சூழலில், உலக வன நாளை, வெறும் விழிப்புணர்வு ஊர்வலத்தோடு மட்டுமே முடிக்காமல், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியோடு, ஒவ்வொருவரும், தங்களால் இயன்றளவு, மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும். அப்போது தான், நாம் மட்டுமல்லாமல், நாளைய தலைமுறையும் நலமாக வாழ முடியும்.
மிகப்பெரிய சொத்து

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகி சிராஜ்தீன் கூறுகையில், ''வனத்தை பெருக்கினால், விலை மதிப்பில்லாத காற்றும்,தண்ணீரும் கிடைக்கும். பாசியிலிருந்து ஆலமரம் வரை, புழு, பூச்சி, பறவை, விலங்கு, மரம், செடி, கொடி என, பல்லுயிர் பரப்பை பாதுகாத்தால் மட்டுமே, உயிர்கோளத்தை பாதுகாக்க இயலும். வரும் தலைமுறைக்கு, நம்மால் சேர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து, வனம் மட்டுமே,'' என்றார்.-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.