உ.பி. முதல்வர் தேர்வில் 'ஆர்.எஸ்.எஸ்., தலையீடு கிடையாது'| Dinamalar

உ.பி. முதல்வர் தேர்வில் 'ஆர்.எஸ்.எஸ்., தலையீடு கிடையாது'

Added : மார் 21, 2017 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உ.பி. முதல்வர் தேர்வில்  'ஆர்.எஸ்.எஸ்., தலையீடு கிடையாது'


புதுடில்லி, ''உ.பி., மாநில முதல்வர் தேர்வில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடவில்லை,'' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
உ.பி., முதல்வராக, இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்றுடைய, யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.
இது குறித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
உ.பி., மாநில, பா.ஜ., சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தான், யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தனர்.
கட்சியின் விதிமுறைப்படி, தங்கள் தலைவரை, எம்.எல்.ஏ.,க்கள் முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிட்டது கிடையாது.
யோகி ஆதித்யநாத், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். துரதிருஷ்டவசமாக, சிலர், அவர் மீது, ஜாதிச் சாயம் பூசுகின்றனர். ஆதித்யநாத்திற்கு போதிய வாய்ப்புகள் தராமல், அவரை விமர்சிப்பது, நியாயமற்றது. எதிரிகளின் விமர்சனங்கள் பொய்யானவை என்பதை, யோகி ஆதித்யநாத் நிரூபிப்பார்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-மார்-201719:53:01 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஊழலை வேரறுக்க யார்வந்தாலும் அவர் நல்லவரே. பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து உதவினால் தான் ஜாதி ஒழியும். ஜாதி சான்று இல்லாமல் செய்யனும். ஜாதி வைத்து சலுகை ,இட ஒதுக்கீடு கூடாது.. அப்போதான் >>>>>>>
Rate this:
Share this comment
Cancel
SENTHILKUMAR.S - Chennai,இந்தியா
21-மார்-201712:02:09 IST Report Abuse
SENTHILKUMAR.S முதலில் RSS என்பது தேச விரோத இயக்கமல்ல. மேலும் பிஜேபி இல் உள்ள பெரும்பாலான தலைவர்கள் RSS ல் இருந்து வந்தவர்கள்தான். இதில் மறைக்கவோ வெக்கப்படவோ தேவை இல்லை. இந்த சீனாவுக்கு சாமரம் வீசும் கம்ம்யூனிஸ்ட்களுக்கு RSS என்றாலே எதோ காய்ச்சல் வந்ததுபோல் உளறுவதும் எதையோ புதிதாக கண்டுபிடித்துவிட்டதை போல் பதறுவதும் வேடிக்கை.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201711:34:41 IST Report Abuse
ஜெயந்தன் அதற்கு தமிழர்களின் பகுத்து ஆராயும் அறிவு தான் காரணம்...
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201713:54:29 IST Report Abuse
Agni Shivaஆமாம்.. உலகில் தமிழர்கள் மட்டும் தான் பகுத்து ஆராய்ந்து அறிவோடு நடக்கிறார்கள். மற்ற இனங்கள் அனைத்தும் பகுத்து ஆராயாமல், அறிவற்று, கேனையன்களாக நடந்து கொண்டு இருக்கின்றன. ஏன்யா...முதலில் கிணற்றுக்குள் இருந்து வெளியே வந்து உலகை பார்ப்பதற்கான வழியை தேடு.......
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
21-மார்-201711:31:04 IST Report Abuse
ஜெயந்தன் ஆமாம்... ஆமாம்.. RSS UP யிலும் தலையிடவில்லை... பிஜேபி தமிழக அரசியலிலும் தலையிடவில்லை...அண்ணா தி மு க உட்கட்சி பூசலிலும் தலையிடவில்லை...
Rate this:
Share this comment
Cancel
grg - chennai,இந்தியா
21-மார்-201711:20:36 IST Report Abuse
grg he should accept that RSS was involved in the ion. What is wrong in that? y he should hide? RSS is a patriotic organisation. Consulting RSS is better than consulting some foreigners.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201711:09:03 IST Report Abuse
Swaminathan Nath அவர்கள் கட்சி முடிவு , யாரும் தலை இட உரிமை இல்லை , சசி குற்றவாளியை முதல்வராக வர நமது மாநிலம் இருந்தது , நல்ல வேலை, தப்பித்தது, மக்களுக்கு உழைப்பவர்கள் வந்தால் நாட்டிற்கு நல்லது,
Rate this:
Share this comment
Cancel
அசோக் வளன் - Chuan Chou,சீனா
21-மார்-201710:10:45 IST Report Abuse
அசோக் வளன் தலையீடு இல்லை .... ஆட்சி செய்வதே RSS தான்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201709:28:36 IST Report Abuse
Agni Shiva வெங்கையா நாயுடு இவ்வாறு சொல்வது தவறு. ஆர் எஸ் எஸ் தலையீடு இல்லாமல் இருந்திருந்தாலும், ஆர் எஸ் எஸ் வழிகாட்டுதலில் பெயரில் தான் உத்தர பிரதேஷ் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்களின் தேர்தல் கால அளப்பரிய சக்திக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். ஒரு ஆட்சியாளன் நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்றால் அவன் ஆர் எஸ் எஸ் ஆக தான் இருக்க முடியும். மற்றபடி சமூக நீதி, மதசார்பற்ற தன்மை, ஜாதிகள், கேனையன்கள் பிறந்த மண் என்று சொல்லி அரசியல் நடத்தும் மழைவிழுங்கிகள் தான் ஆர் எஸ் எஸ் எதிர்பாளர்களாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201714:02:35 IST Report Abuse
தறுதலைஜி சண்முகநாதன் ஒருத்தரை ஆளுநராக வச்சிருந்தீங்களே அவரை போலவா?...
Rate this:
Share this comment
Cancel
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201709:03:25 IST Report Abuse
தறுதலைஜி எம் எல் எ இல்லாமல் சசிகலா பதவிக்கு வரலாமா?ஏன் கட்சியில் ஆட்களே இல்லையா?மக்களிடம் போய் கருத்து கேட்கணும் போன்ற பொன்னான பொன்மொழிகளை கடந்த 45 நாட்களாக சொல்லிவந்த அறிவுஜீவிகள் இன்றைய நிலை எப்படி மாறிவிட்டதுஆன்லைன் ஆர்வக்கோளாறுகளே உங்கள் தேச பக்தி வியாபாரம் செழிக்கட்டும்.
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201712:05:26 IST Report Abuse
Yaro Oruvanதறுதலை... நீ தெரிஞ்சி பேசுறியா இல்லன்னா தெரியாம பொலம்புரியான்னு தெரியல.. எம் எல் ஏ இல்லாமல் பதவிக்கு வரலாமான்னு யாரும் கேக்கல? குற்றவாளிகள் வரக்கூடாதுன்னு சொன்னோம்.. அது சரி உபி சிஎம் யோகியும் சாதியம் ஒண்ணா? யோகி கடந்த 5 முறை ஒரே லோக்சபா தொகுதியில் எம்பி ஆக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. 5 வருடம் இல்லை தறுதலை ஐந்து முறை.. ஒருவர் அந்த தொகுதியில் நல்ல முறையில் சேவை செய்யவில்லை எனில் ஐந்து முறை வெல்ல முடியுமா?? தமிழ்நாட்டுல எவன் அதே தொகுதியில் நின்னு ஜெயிக்கிறான்? எடத்த மாத்தி மாத்தி ஏமாத்துறானுங்க.. உபியின் நன்மை கருதி யோகியை முதல்வராக நியமித்துள்ளது பாஜக.. நீ என்னமோ சசி கூட அவரை கம்பேர் செய்ற.. 30 வருஷம் ஆயா வேலைப்பாத்தா சி எம் ஆகலாம்னா நிச்சயம் தமிழ்நாட்டுல லட்ச கணக்கான தறுதலைகளுக்கு தகுதி இருக்கும்.. ஒங்க நொண்ணம்மாவையும் சேத்தி.. தேசபக்தி பத்தி பேச ஆர் எஸ் எஸ் வீட்டா எவனுக்கு தகுதி இருக்குது?? வாயில ஏதாவது வந்துரப்போகுது...
Rate this:
Share this comment
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201714:04:04 IST Report Abuse
தறுதலைஜி அதனாலதான் காந்தியை ...............................?...
Rate this:
Share this comment
தறுதலைஜி - Coimbatore,இந்தியா
21-மார்-201714:06:20 IST Report Abuse
தறுதலைஜி தேரத்லில் யோகி நிக்கவேயில்லயே ஏன்?...
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
21-மார்-201708:48:03 IST Report Abuse
Appan நம்பிட்டோம்....யாருக்கு காது குத்துகிறார்கள்..?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை