மதுரையில் மாநகராட்சி குடிநீர் வழங்குவதில்பாரபட்சம்:வாரம் ஒருமுறை வழங்குவதாக மக்கள் புகார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை;மதுரை நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதில் மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதால் பல பகுதிகளுக்கு வாரம் ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம் நடக்கிறது.நகரில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால் யார் வேண்டுமானாலும் தண்ணீர் விற்பனையை தொடரலாம் என மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் விற்பனையில் தனியார்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் குடிநீர் குடம் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பனையாகும் பகுதிகளில் மாநகராட்சி வாரம் ஒரு நாள் பெயரளவில் குடிநீர் வினியோகம் செய்கிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
குழாய்களில் தண்ணீர் வராத பகுதிகளுக்கு லாரி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் குழாய் தண்ணீர் அந்த பகுதிகளுக்கு வருவதாக தெரிவித்து லாரி தண்ணீரும் வழங்குவதில்லை. தண்ணீர் பற்றாக்குறை தொடர்பாக முன்னாள் கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். சில உதவி பொறியாளர்கள் தனியார் குடிநீர் உரிமையாளர்களுக்கு துணையாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
வீடுகளுக்கு குழாய்களில் குடிநீர் நான்கு நாட்களுக்கு ஒரு நாள் வந்தாலும், தண்ணீர் தொட்டிகளில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் நிரப்பாததால் அழுத்தம் இல்லாததால் பல பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை.
இந்நிலையில் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஆனாலும் இதுவரை மாநகராட்சியின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் ஒவ்வொரு நாளும் எந்த பகுதிக்கு குடிநீர் செல்கிறது. எத்தனை லாரி வினியோகிக்கப்படுகிறது என்பது தொடர்பாக கண்காணிக்க வேண்டும். தட்டுப்பாடு நீங்கும் வரை குடிநீர் தொடர்பாக தனி தொடர்பு எண் ஏற்படுத்த வேண்டும். பகலில் மட்டுமின்றி இரவிலும் குடிநீர் வினியோகத்தை மாநகராட்சி தொடர்ந்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.
முடங்கிய ஆழ்குழாய்கிணறு பணிகள்
கோடையை சமாளிக்க நகரில் 250 ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட மாநகராட்சி 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கு பல பகுதிகளில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும் பணிகள் முடங்கியுள்ளன. அதிகாரிகள் கூறியதாவது: 120 ஆழ்குழாய் கிணறுகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் தேக்கமடைந்துள்ளது. மக்கள் குடிநீர் வேண்டும் என்கின்றனர். ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கும் போது தடை செய்கின்றனர். இதனால் தண்ணீர் தொடர்பான நடவடிக்கைகளை கைவிடும் நிலை உள்ளது.மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்