பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மழை...கைகொடுத்தது: மாவட்டத்தில் 3,000 ஏக்கரில் பயறு சாகுபடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தேனி;மாவட்டத்தில் பெய்த திடீர் மழையால் 3, 000 ஏக்கரில் விவசாயிகள் பயறு சாகுபடி செய்துள்ளனர்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது. விவசாயத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவியை அரசு வழங்கியது. விவசாயிகள் வறட்சியை சமாளிக்க குறுகிய காலபலன் தரும் பயறு வகை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் 250 ஏக்கரில் பாசி, 250 ஏக்கரில் உளுந்து பயறுசாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஏக்கருக்கு 2,000 ரூபாய் மதிப்பிலான இடுபொருட்கள் மானியம் வழங்கியது.
மேலும் ரெய்ன்கன்,மொபைல் ஸ்பிரிங் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டன. ஆனாலும் மழை இல்லாததால் பயறு வகைகளை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வரவில்லை. உதவி வேளாண் அலுவலர்கள் விதை வாங்க அழைத்தாலும் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
மழை
இந்நிலையில் மார்ச் முதல்வாரம் முதல் 10 நாட்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது. இதனால் ஓரளவிற்கு வறட்சி குறைந்து நீர் ஆதாரங்களில் நீர் சுரப்பு அதிகரித்தது. தொடர்ந்து மழை பொழிவிற்கான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பயறு வகை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விதைகள் பெற்று சாகுபடி செய்ய ஆர்வம் காட்டினர்.
இதன் தொடர்ச்சியாக கம்பத்தில் 4,100 கிலோ, உத்தமபாளையத்தில் 5,100 கிலோ, சின்னமனுாரில் 9,150 கிலோ, தேனியில் 4,300 கிலோ, போடியில் 1,500 கிலோ என பயறு விதைகள் விற்பனையாகி உள்ளது. மாவட்டத்தில் 1,000 ஏக்கர் என்ற இலக்கை தாண்டி 3,000 ஏக்கரில் விதைப்பு செய்துள்ளனர்.
மானியம்
பயறுசாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால் விதை கிராம திட்டத்தில் ஒரு ஏக்கருக்கு 60 சதவீத மானியத்தில் விதை வழங்கவும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தில் கிலோவிற்கு 25 ரூபாய் மானியத்தில் எவ்வளவு விதைகள் வேண்டுமானாலும் பெற்றுகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்