தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு ஆயுள் தடை?| Dinamalar

தேர்தலில் போட்டியிட குற்றவாளிகளுக்கு ஆயுள் தடை?

Added : மார் 21, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு, தேர்தலில் போட்டியிடுவதற்கு, வாழ்நாள் முழுவதற்கும் தடை விதிக்க சம்மதம் தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் கமிஷன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிடவும், நிர்வாகத்துறை மற்றும் நீதித் துறையில் செயல்படவும், வாழ்நாள் முழுவதற்கும் தடை விதிக்க வலியுறுத்தி, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவரும், வழக்கறிஞருமான, அஷ்வினி குமார் உபாத்யாய், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது பதில் அளிக்க, தேர்தல் கமிஷனுக்கும், மத்திய அரசுக்கும், கடைசி அவகாசம் அளித்து, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் கமிஷன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிடவும், நிர்வாகத்துறை, நீதித்துறையில் செயல்படவும் ஆயுள் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு, தேர்தல் கமிஷன் சம்மதம் தெரிவிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், நீதித்துறையினர் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் கமிஷன் ஆதரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள், தற்போது, தண்டனை காலம் மற்றும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டம் உள்ளது. தேர்தல் கமிஷன் தற்போது அளித்துள்ள பதிலால், குற்றவாளிகள், தேர்தலில் போட்டியிட வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தேர்தல் கமிஷனின் இந்த பதிலால், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்து

உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
21-மார்-201716:21:01 IST Report Abuse
karunchilai வழக்கு/கள் முடிந்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டால்தானே. நூறு ஆண்டுகள் ஆனாலும் வழக்கு/கள் முடிவடையாதே. அதனால் தானே பலர் வெளியில் இருக்கிறார்கள் நிரந்தர ஜாமீன் பெற்று.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
21-மார்-201713:27:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> WELCOM WELCOME கட்டாயம் வரணும் கண்டவும் இஷ்டத்துக்கு காலேஜ் ஓபன் பண்றதும் (தரமே இல்லாமல்)காசுபண்றததுக்குவேண்டியேதான் .இந்தகாலெஜ் கல்லே படிச்சால் உபயோகமே இல்லேன்னு சட்டம் வானும்
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-மார்-201713:21:07 IST Report Abuse
Meenu இன்றைய கால கட்டத்தில், அரசியல் வாதிகள் எவரும் முற்போக்கு சிந்தனையோடு, நாட்டு நலனுக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ நன்கு சிந்தித்து, நீண்ட நாள் செயல் திட்டம் போன்றவற்றை செய்வதற்கான அறிவுகள் இல்லை. அமெரிக்கால போன்ற நாடுகளை பாருங்கள். இங்குள்ளவர்கள் மிக கேவலமான புத்தியும், நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளை அடிச்சு சொத்து சேர்ப்பதற்கும் தான் காட்சிகளை வைத்து நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களை போன்றவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால், கண்டிப்பாக வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இவர்களது அறிவும், மூளையும் நாட்டிற்கு தேவை இல்லை. இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா
21-மார்-201710:48:45 IST Report Abuse
Mohammed Abdul Kadar கட்டாயம் அமுல் படுத்த வேண்டிய முக்கியமான சட்டம் இது இத்தருணத்தில்
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
21-மார்-201716:21:54 IST Report Abuse
karunchilaiசெய்வார்களா? செய்வார்களா? செய்வார்களா?.......
Rate this:
Share this comment
karunchilai - vallam,இந்தியா
21-மார்-201716:23:43 IST Report Abuse
karunchilaiவழக்குகள் துவக்க நிலையிலிருந்து, உச்ச நீதி மன்றம் வரைக் குறிப்பிட்டாக காலத்துக்குள் முடிவடைய வேண்டும். 20 /25 என்று கால வரையற்று நீட்டிக்கக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
21-மார்-201707:10:08 IST Report Abuse
kundalakesi "வாழ்நாள் முழுவதும் தடை விதிக்கப்படும் வாய்ப்பு" அநியாயம். எந்த கல்லறை மீதும் ஓங்கி அடித்து சொல்லுவேன், நான் சிங்கம் தெரியுமா? எவ்வளோ தமிழ்நாடு சொத்து வீண் போகிறது. வளச்சு ஏப்பம் விட வேண்டாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை