கணவருடன் சமரசம்; தீபா கடும் எதிர்ப்பு | கணவருடன் சமரசம்; தீபா கடும் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கணவருடன் சமரசம்; தீபா கடும் எதிர்ப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (61)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஜெ., அண்ணன் மகள், தீபா, எதிர்ப்பு deepa

ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக்கிற்கும் இடையே சமரசம் ஏற்படுத்த, சிலர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இது குறித்து, தீபா பேரவை வட்டாரம் கூறியதாவது: 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' நிர்வாகிகள் நியமனத்தில், தீபாவுக்கும், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், கார் டிரைவர் ராஜா ஆகியோர் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது, கைகலப்பு வரை சென்றுள்ளது.


கண்டிப்பு:

மாதவன் பேட்ரிக், சில நாட்களாக, சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டில் தங்குவதில்லை. அவரது உறவினர் வீட்டிலும், ஓட்டலிலும் தங்கி வருகிறார். புதிய கட்சி துவக்குவது குறித்தும், ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால், புதிய கட்சி துவங்கக் கூடாது என, அவரை தீபா கண்டித்துள்ளார்.


இறங்கு முகம்:

அ.தி.மு.க., இரண்டு அணிகளாக உடைந்ததை போல, தீபா பேரவையும் இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதனால், தீபாவின் செல்வாக்கு, இறங்கு முகமாகி உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில், தீபா பேரவையிலிருந்து, 300 பேர் விலகி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். பேரவை உருவாக காரணமான, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்தரராஜன், தன் ஆதரவாளர்களுடன், பன்னீர் அணிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.


விரிசல்:

தமிழகம் முழுவதும், தீபா பேரவையில் இருந்து, தொண்டர்கள் வெளியேறி வருவதால், தீபா கலக்கம் அடைந்துள்ளார். இதற்கிடையில், தீபாவையும், மாதவன் பேட்ரிக்கையும் சமரசப்படுத்தும் முயற்சியில், குடும்ப நண்பர்கள் சிலர் ஈடுபட்டனர். அதை, தீபா ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், விரிசல் அதிகரித்துள்ளது. இவ்வாறு பேரவை வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
26-மார்-201705:40:37 IST Report Abuse
K,kittu.MA. இது whats ஆப் காலம்..இந்தம்மா இதில் கட்சி நடத்தும்.தைரியம் உள்ளவர்..
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
21-மார்-201719:47:53 IST Report Abuse
Arumugam இந்த பெண்மணி ஒரு சுயநலவாதி.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
21-மார்-201718:48:06 IST Report Abuse
Balaji திடீரென கிடைத்த ஆதரவை பயன்படுத்த நினைத்து தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டார்..... அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அரசியல் ஆழம் பார்த்திருக்க வேண்டும்...... அல்லது ஏதாவது அணியில் சேர்ந்தோ அல்லது தனியாக ஏற்படுத்திய அமைப்பின் மூலமாகவோ அரசியலை கற்றுக்கொண்டிருக்க வேண்டும்....... இதையெல்லாம் செய்யாமல் தான் தான் என்ற எண்ணத்தில் வலம் வந்தது இப்படி கவுத்துவிட்டது.......
Rate this:
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
21-மார்-201715:10:17 IST Report Abuse
Vaduvooraan நானே கூட இந்த பெண்ணுக்கு நல்ல எதிர் காலம் இருக்கும் என்று நினைத்தேன். வேறு எதோ காரணத்தினால் -விஜயகாந்த் போன தேர்தலில் செய்தது போல- தேவைக்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டு விட்டார். பன்னீர் செல்வத்துக்கு முன்னால் வெளியே வந்து மன்னார்குடிக்கு எதிராக குரல் கொடுத்து விட்டு தமிழ் நாட்டை ஒரு ரவுண்டு வளம் வந்திருந்தாள் அன்று மக்கள் இருந்த மன நிலையில் தலைக்கு மேல் வைத்து கொண்டு கூத்தாடி முதல்வராகவும் ஆக்கி இருப்பார்கள். சரி, அதைத்தான் செய்யவில்லை. பன்னீர் செல்வம் வெளியே வந்த உடனேயே முழு ஆதரவு தெரிவித்து விட்டு சசிகலாவுக்கு எதிராக உறுதியாக நின்றிருந்தால் இந்த பெண்ணின் செல்வாக்கு எங்கேயோ போயிருந்திருக்கும். அரசியல் பற்றி தீவிரம் இல்லாது சசிகலா வகைறாக்களிடம் மறைமுகமாக பேரம் நடந்து கொண்டிருப்பதை எத்தனை காலம் மறைக்க முடியும்? ஹூம் விதி வலியது
Rate this:
Share this comment
நரி - Chennai,இந்தியா
21-மார்-201721:37:13 IST Report Abuse
நரிஆசை... ஆசை பேராசை ....முதல்வர் நாற்காலியில் உக்கார்த்திருன்னும் ... கடைசில எல்லாம் நாசமா போயிருச்சு...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-மார்-201714:35:14 IST Report Abuse
Sanny மாதவன் பாட்ரிக் யாரு, போய் கட்சி ஆரம்பித்து, சசிக்கும்பல் கொடுத்த பணத்தை நாசமாக சொல்லுங்க. இவனுக்கு 10 ஓட்டுக்களாவது கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201714:27:27 IST Report Abuse
தமிழ்வேல் தீவெட்டி நல்லாவே பத்தவச்சிட்டுது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-மார்-201713:52:16 IST Report Abuse
Nallavan Nallavan கார் டிரைவரும், தீபா பேரவையின் ஒரு உயர்மட்டத் தலைவரா ???? கொடுமைடா சாமி .... ஆனா சேலம் சுகவனம் ஜி ஒரு கேள்வி கேட்டிருக்காரு பாருங்க .... அதை மீறி, பல வருஷத்துக்கு முன்னாடி சிடி விக்கிற, வாடகைக்கு உடுற பொம்பிளை கூட எதுக்கு நட்பு? அப்படி நட்பு வெக்கிறவங்க கட்சிக்கு ஒட்டு இல்லை -ன்னு முடிவு பண்ணியிருந்தா தமிழகம் இன்னிக்கு இப்படி நாறிப் போயிருக்காதே
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
21-மார்-201712:41:17 IST Report Abuse
muthu Rajendran இவங்க அத்தைக்கு பிடிவாதம் எல்லாம் இருந்தது என்றால் அந்த அம்மாவிற்கு அந்த அளவிற்க்கு செல்வாக்கும் இருந்தது. வெறும் பிடிவாதம் மட்டும் இருந்து என்ன பயன் ? அத்தை வழியாக வரும் சொத்துக்களை முறையாக பெற்று நல்ல படியாக இருங்கள். அரசியல் என்பது எல்லோருக்கும் சரிப்பட்டு வராது. அவர் பெயரை காப்பாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201712:40:21 IST Report Abuse
Pasupathi Subbian புருஷன் பெண்டாட்டி இடையே ,கார் டிரைவருக்கு என்ன வேலை. ? அவரை பேரவையில் முக்கிய பதவி கொடுப்பதற்கு என்ன அவசியம். வரவர யார் யார் எல்லாம் இந்த மாதிரி தமிழகத்தில் முக்கிய இடங்களுக்கு வரப்போகிறார்களோ தெரியவில்லை. எடுபிடி, மாமன் மச்சான், டிரைவர், சமையல்காரன், வாட்ச்மேன் , என்று இவர்களை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், கட்சி எதற்கு, தொண்டர்கள் எதற்கு? மக்கள் எதற்கு. இது ஒரு குடும்ப சொத்தாகிவிடுகிறதே. தேவையா? தேவையா? மக்களே சிந்தியுங்கள். ஒரு பாரம்பரியம் இல்லாதவர்களிடம் ஆட்சி பொறுப்பை கொடுக்க ,மக்கள் ஓட்டளிக்கவேண்டுமா?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
21-மார்-201714:31:59 IST Report Abuse
தமிழ்வேல் ஏன் இருக்கக்கூடாது ? ரொம்ப படிச்சவங்க கூட இப்போ ஆட்டோ ஓட்டுறாங்களே... 8 வது.... அதுக்கும் கீழ படிச்சதெல்லாம் முதல்வர் ஆகல ?...
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
21-மார்-201712:39:05 IST Report Abuse
arabuthamilan காமராஜருக்குப் பிறகு சகாயம் நல்ல தேர்வு. தமிழக மக்கள் இவர் பின் அணி திரண்டால் புதியதமிழகத்தை காணலாம்.
Rate this:
Share this comment
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
21-மார்-201713:58:57 IST Report Abuse
வந்தியதேவன்அரபுத்தமிழன் சார்... ஏன்..? இந்த கொலவெறி...? மணிப்பூரில் ராணுவத்த திரும்ப பெறச் சொல்லி மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தம்மாவுக்கு 90ஓட்டு கிடைச்சுது... அதுபோல... சகாயத்தையும் காலி பண்ண முடிவு பண்ணிட்டீங்களா...? சகாயம் நின்னா... நம்ம தமிழக மக்கள்... “ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பீங்க“ன்னு அவரிடமே கேட்பார்கள்...? இந்த அவமானம் தேவையா...?...
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-மார்-201714:32:26 IST Report Abuse
Dol Tappi Maaபடிச்சவங்க மட்டும் ஒட்டு போட்டு விடுவார்களா ? படிச்சவன் காங்கிரஸ் பிஜேபி ஆ தி மு க தி முக , ஜாதி கட்சி என்று ஒட்டு போடுறான் ஏழைகளை குறை என்ன பயன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை