நாள்தோறும் போராடும் மக்களின் குரல்... அதிகாரிக்கு கேட்கவில்லையா? பதில் சொல்ல முடியாமல் திறல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அவிநாசி, பெருமாநல்ார் மற்றும் சுல்தான்பேட்டையில் குடிநீர் பிரச்னைக்காக, ரோட்டுக்கு வந்த மக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மறியல், முற்றுகை என, நேற்று போராட்டம் நடத்தினார்.
குடிநீர் வினியோகத்தில் குளறுபடி, குண்டும் குழியுமான சாலைகள், சாக்கடை பிரச்னை என, பிரச்னைகளில் கண் விழிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அவிநாசி அருகே நேற்று மூன்று இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் காரமாக வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கருøபாளையம், சின்ன கருøபாளையம், கருாம்பிகா நகர், காடேஸ்வரா நகர், பாலாஜி நகர் பகுதிகளில், ஐந்து மாதமாக குடிநீர் முறையாக வினியோகிக்கப்படவில்லை. அப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன.
உமையஞ்செட்டிபாளையத்தில், ரோடு வசதி ஏற்படுத்தக்கோரி, 13 ஆண்டாக அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். எந்த நடவடிக்கையும் இல்லை. ஆவேசமடைந்த, 500க்கும் மேற்பட்ட மக்கள், காலிக்குடங்களுடன் அவிநாசி - மங்கலம் ரோட்டில், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இது, ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்தது.அதே ஊராட்சி பகுதியை சேர்ந்த மற்றொரு பகுதியில், மங்கலம் ரோடு முதல் உமையஞ்செட்டிபாளையம் வரை, தார் ரோடு அமைக்கவும்; புஷ்பா தியேட்டர் முதல், உமையஞ்செட்டிபாளையம் வரை இயக்கப்படும் மினி பஸ், முறையாக வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, மறியல் நடந்தது.இந்த போராட்டங்கள் காரமாக, அவிநாசி - மங்கலம் ரோட்டில், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவிநாசி போலீசார் விரைந்து சென்று, பேச்சு நடத்தியும் பலனில்லை. இதையறிந்த, தாசில்தார் அருா, ஒன்றிய ஆøயாளர் முருகேசன், டி.எஸ்.பி., பரமசாமி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர். இதனால், சமாதானமடைந்த மக்கள், மறியலை கைவிட்டனர்.
மறியல் நடந்த இடத்திலிருந்து, அரை கி.மீ., தொலைவில், மங்கலம் ரோடு - ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள், மின்வாரிய அவலகம் எதிரில், காலிக்குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார், பெண்களிடம் பேசினார். அதில், ஒரு வாரத்துக்குள் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று, உறுதியளித்தனர். இதனால், சாலை மறியலை, பெண்கள் கைவிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், "நாங்களும் பலமுறை குடிநீர், சாலை பிரச்னை குறித்து, அதிகாரிகளுக்கு தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. போராட்டத்தை கலைப்பதற்காக, அதையும், இதையும் சொல்லி சமாளிக்கின்றனர். அதிகாரிகள் கூறியபடி நடந்து கொள்ளாவிடில், தேசிய நெடுஞ்சாலை - பைபாஸ் ரோட்டில் போராட்டம் நடத்துவோம்,' என்றனர்.
பல்லடம் அருகே சுல்தான்பேட்டை ஒன்றியம், கம்மாளப்பட்டி, வரப்பாளையம் கிராமங்களில், குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இது குறித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள், சாலை மறியலிம் ஈடுபட்டனர்.ஒரு மணி நேரத்துக்கு பின், வந்த போலீசார், ஒன்றிய அவலகத்தில் இருந்த பணியாளரிடம் பேசிய பின், இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர். அதன்பின், பெண்கள் கலைந்து சென்றனர்.
அப்பகுதியினர் கூறுகையில், "வரப்பாளையம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்குழாயில், காற்று மட்டுமே வருகிறது. கடந்த சில மாதங்களாக, பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. அதுவும் பத்து குடங்கள் மட்டுமே, வினியோகம் செய்யப்படுகிறது. "இது குறித்து, பல மாதங்களுக்கு முன், ஊராட்சி செயலர் மற்றும், பி.டி.,ஓ.,விடம் புகார் அளித்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும், ஊர் பக்கமே தலைகாட்டவில்லை. எனவே, ஊராட்சியில் உள்ள ஆழ் குழாய் கிறுகளை தூர்வாரியும், அத்திக்கடவு குடிநீர் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்,' என்றனர்.
முற்றுகை போராட்டம்பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம்பாளையம் பூத்தார் நகர் பகுதி மக்கள், ஊராட்சி அவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். ஊராட்சி முன்னாள் துø தலைவர் அப்புசாமி, முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் தலைமையில், பொதுமக்கள் நேற்று காலை ஊராட்சி அவலகத்தை முற்றுகையிட்டனர்.அப்பகுதியினர் கூறுகையில், "எங்கள் கிராமத்துக்கு மூன்றாவது திட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. பொங்குபாளையம் ஆர்.எஸ். பகுதியில் உள்ள கீழ் நிலை தொட்டியில் இருந்து, ஊராட்சி பகுதி முழுவதும் பிரித்து வழங்கப்படுகிறது. பரமசிவம்பாளையம், பூத்தார் நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.குடிநீர் வினியோகத்துக்கு, 60 மற்றும், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, இரண்டு மேல்நிலை தொட்டிகள் உள்ளன. ஆனால், குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. தண்ணீரின்றி திண்டாடுகிறோம்,' என்றனர்.
சுழற்சி முறையில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும், என ஊராட்சி செயலர் உறுதியளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.பெருமாநல்ார் ஊராட்சிக்குட்பட்ட, ஆறாவது வார்டு ஏ.டி., காலனி பகுதியினர், குடிநீர், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பலன் ஏற்படாத நிலையில், ஊராட்சி அவலகத்தை, நேற்று முற்றுகையிட்டனர்.அப்பகுதியினர் கூறியதாவது:அரசு கட்டித்தந்த தொகுப்பு வீடுகளில் குடியிருந்து வருகிறோம். பல ஆண்டுகளாவதால், கட்டடங்கள் பழுதான நிலையில் உள்ளது. ஆபத்தான நிலையில் தினமும் வாழ வேண்டியுள்ளதால், புதுப்பித்து தர வேண்டும். போதிய குடிநீர் வருவதில்லை. பொது குடிநீர் குழாய் அமைத்து, வினியோகம் செய்ய வேண்டும்.சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதற்கு, யாரும் வருவதில்லை. கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேட்டால், பலருக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. சாக்கடை கால்வாய் ஏற்படுத்த வேண்டும். குண்டும், குழியுமான ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தேவையான வசதிகள் செய்து தர, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, ஊராட்சி செயலாளர், உறுதிமொழி அளித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றார்.
கண்டு கொள்ளாத சபாநாயகர்!அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., வான தனபால், சபாநாயகராக உள்ளார். ஆனால், மக்கள் பிரச்னையை அவர் கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த, 15 நாட்களில் மட்டும், அவிநாசி தொகுதியில், ஒன்பது இடங்களில், குடிநீர் பிரச்னைக்காக மறியல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் கூறுகையில், "தனது தொகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னை குறித்து, சபாநாயகர் எதையும் கண்டுகொள்வதில்லை. தேர்தல் பிரசாரத்தில், "குடிநீர், சாலை, சாக்கடை வசதிக்கு முன்னுரிமை கொடுத்து செய்வேன்,' என்று சொன்னார். ஆனால், ஒன்றுமே செய்யவில்லை. சசிகலா தரப்புக்கு ஆதரவு என்பதால், எந்த நேரமும், ஐந்தாறு போலீஸ் வாகனம் புடை சூழவே, தனது தொகுதி அவலகத்துக்கு செல்கிறார்.ஆனால், மக்களை கண்டு கொள்வதில்லை. வரும் நாட்களில், குடிநீர் பிரச்னை மேம் அதிகரிக்கும். அப்போது, போராட்டமும் பல இடங்களில் நடக்கும். அப்போது, சபாநாயகர் மக்களிடம் வந்துதானே ஆக வேண்டும்,' என்று ஆவேசமாக கூறினர்.
மறியல் ஒரு தொடர்கதை!திருப்பூர் மாவட்டத்தில், மறியல் நடக்காத நாட்களே இல்லை என்றளவுக்கு, தினமும், பல இடங்களில் மறியல் நடந்த வண்ம் உள்ளது. இதில், பெரும்பாலானவை குடிநீர் பிரச்னை. குறிப்பாக, அடிப்படை, அத்தியாவசிய தேவையான குடிநீர், சாலை வசதிகளுக்காக, எந்த ஒரு துரும்பையும், அதிகாரிகள் கிள்ளிப்போடுவதில்லை என்றே குற்றச்சாட்டு உள்ளது. குறைந்தபட்சம் குடிநீர் பிரச்னைக்காவது அதிகாரிகள் கவனம் கொடுத்தால் பரவாயில்லை.முழுமையாக கோடை காலம் வராத போதே இந்நிலை என்றால், இன்னும் ஓரிரு வாரங்களில், இப்பிரச்னை மேம் தலைதூக்கும் என்றே தெரிகிறது. எனவே, இது விஷயத்தில், கலெக்டர் உடனடியாக தலையிட்டு, குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லாவிடில், தினமும் மறியல், முற்றுகை, சிறைப்பிடிப்பு என்று மக்கள், ரோட்டுக்கு வருவதை, யாராம் தடுக்க முடியாது.

- நமது நிருபர் குழு -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்