மத்திய அரசின் புதிய திட்டம் | முதியோருக்கு இலவச கண்ணாடி; மத்திய அரசின் திட்டம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முதியோருக்கு இலவச கண்ணாடி; மத்திய அரசின் திட்டம் துவக்கம்

Added : மார் 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
முதியோருக்கு இலவச கண்ணாடி; மத்திய அரசின் திட்டம் துவக்கம்

புதுடில்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள முதியோர்களுக்கு, இலவசமாக கண்ணாடி, 'வீல் சேர்' போன்றவற்றை வழங்கும் மத்திய அரசின், 'ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா' திட்டம், வரும், 25ல் துவங்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு மத்தியில் பதவியேற்ற பின், ஏழை மக்களுக்குத் தேவையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும், 10.83 கோடி முதியோர் உள்ளனர். அவர்களில், 5.2 சதவீதத்தினர், வயது மூப்பு தொடர்புடைய இயலாமையால் அவதிப்படுகின்றனர்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள முதியவர்களுக்கு, கண்ணாடி, வீல் சேர், காது கேட்கும் கருவி போன்றவற்றை இலவசமாக வழங்க, 477 கோடி ரூபாய் மதிப்பில், 'ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா' திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது. வரும் 25ல், ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லுாரில் நடக்கும், துவக்கவிழாவில், இந்த திட்டம் முறைப்படி துவக்கி வைக்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201710:48:50 IST Report Abuse
Swaminathan Nath வாழ்த்துக்கள், வறுமையானவர்களுக்கு உதவி செய்யுங்கள் , மக்கள் உங்களை வாழ்த்துவார்கள், கொல்லி அடிக்கும் அரசியல் வாதிகள் வெட்க பட வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு மத்தியில் பதவியேற்ற பின், ஏழை மக்களுக்குத் தேவையான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை