தலாய் லாமாவால் உறவு பாதிக்கும்; சீனா மீண்டும் எச்சரிக்கை | தலாய் லாமாவால் உறவு பாதிக்கும்; சீனா மீண்டும் எச்சரிக்கை| Dinamalar

தலாய் லாமாவால் உறவு பாதிக்கும்; சீனா மீண்டும் எச்சரிக்கை

Added : மார் 21, 2017 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தலாய் லாமா, சீனா, எச்சரிக்கை, இந்தியா

பீஜிங்: 'எங்கள் பேச்சை கேட்காமல், தலாய் லாமாவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா - சீனா உறவு மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என, சீனா எச்சரித்துள்ளது.


சீனா கடும் எதிர்ப்பு:

திபெத் புத்த மதத் தலைவரான தலாய் லாமாவை, பிரிவினைவாதியாக சீனா அறிவித்துள்ளது. அதே நேரத்தில், மதத் தலைவர் என்ற முறையில், தலாய் லாமா மீது இந்தியா மிகுந்த மரியாதை வைத்துள்ளது. சமீபத்தில், அருணாசல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் தலாய் லாமா பங்கேற்றார். இதில் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு விடுத்ததற்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பீஹார் மாநிலம் நாளந்தாவில், சமீபத்தில் சர்வதேச புத்த மதக் கருத்தரங்கம் நடந்தது. இதில், பங்கேற்க, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் பங்கேற்றார்.


உறவில் பாதிப்பு:

இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்ஹிங் கூறியதாவது: சீனாவின் கருத்துகளுக்கு, அதன் எதிர்ப்புகளுக்கு இந்தியா செவி சாய்ப்பதில்லை. சர்ச்சைக்குரிய தலாய் லாமாவுக்கு இந்தியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கக் கூடாது என, தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்; ஆனால், அதை இந்தியா மதிப்பதில்லை.

இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில், ஒரு நாடு தெரிவிக்கும் பிரச்னையை மற்ற நாடு மதிக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து, தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், இந்தியா - சீனா இடையேயான உறவு மேலும் மோசமடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
21-மார்-201714:28:42 IST Report Abuse
bal இப்போது என்ன வாழ்கிறதாம் உறவு. சீனா பாகிஸ்தானுடன் உள்ள உறவுதான் அழுத்தமா இருக்கு. பயமுறுத்தல் வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
21-மார்-201713:58:28 IST Report Abuse
N.Kaliraj இவ்வளவு வெறி கூடாது.....
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-மார்-201713:55:36 IST Report Abuse
Sanny இது என்ன கொடுமை சாமி, எனது நாட்டுக்கு நான் யாரை வேண்டுமானாலும் அழைப்பேன், கௌரவிப்பேன் உனக்கு என்ன, உன் நாட்டில் வயிற்றில் வளரும் சிசுக்களை வாங்கி சூப் செய்து சம்பாதிக்கிறீயே. குடிக்கிறேயே நாங்க கேட்டமா? நாயை வெட்டி தின்கிறாய், பூனையை வெட்டி தின்கிறாய், பீட்டா அமைப்பவாது கேட்டதா? கேட்டிருந்தால் நீ என்ன கூத்து அடித்திருப்பாய் பீட்டா அமைப்புக்கு. உன்வேலையை பாரு, நாம நம்ம வேலையை பார்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
A. Sivakumar. - Chennai,இந்தியா
21-மார்-201713:31:31 IST Report Abuse
A. Sivakumar. 1 இவர் இந்தியாவின் தேவையற்ற, மிக நீண்ட காலத் தலைவலி (ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸத்துக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகளின் வேண்டாத பலனாக, இந்தியாவின் தலையில் இவரை அமெரிக்கா சாமர்த்தியமாகக் கட்டி விட்டுத் தான் மட்டும் தப்பித்துக் கொண்டது). 2 பாகிஸ்தானைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு அளவில்லாத தொல்லைகளைத் தரும் சீனாவுக்கு, இந்தியாவைக் குறை சொல்லவோ, எச்சரிக்கவோ எந்த யோக்கியதையும் இல்லை. 3 இந்திய அரசு இவருடன் இணக்கமாகப் பேசி, இவர் விரும்பும் வேறு நாட்டுக்கு, இவரை அனுப்பி விடுவது உத்தமம். காரணங்கள், இதுவரைக்கும் பட்டதெல்லாம் போதும், திபெத்துக்கு சுதந்திரம் கிடைப்பதும் கிடைக்காததும் இந்தியாவின் பிரச்சினை அல்ல, ஏற்கெனவே எல்லைப் பிரச்சினைகள் இருக்கும் சீனா நமக்கு ஒரு வலிமை பொருந்திய எதிரி, இதனுடன் தேவையற்ற காரணங்களுக்காக மோதுவது, இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Citizen_India - Woodlands,சிங்கப்பூர்
21-மார்-201713:07:32 IST Report Abuse
Citizen_India பாதிக்கட்டும். சப்பை மூக்கு நரிகள் உறவு எங்களுக்கு வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-மார்-201712:34:09 IST Report Abuse
Pasupathi Subbian தலாய் லாமாவை மதிக்க கூடாது, சீன பெருங்கடலை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் இந்திய கப்பல்கள் பயணம் செய்யக்கூடாது, அருணாச்சல பிரதேசத்தை சீன நாட்டின் சொத்தாக மதிக்கவேண்டும், இந்தியாவின் உள் பிரதேசத்தில் சீன கட்டமைப்பு, சீன ராணுவம் வந்தால், அதற்கு வரவேற்பு கொடுக்கவேண்டும், வெற்றிலை பாக்கு வைத்து அவர்களை வரவேற்க வேண்டும், இப்படி அடுக்கிக்கொண்டே போனால், இந்திய இறையாண்மையை இவர்களுக்கு அடகுவைக்கவேண்டும் அதானே அவர்களின் விருப்பம், சூடு சுரணை உள்ள இந்திய மக்கள் ,, சீன பொருட்களை பகிஸ்கரிப்போம், சீன இறக்குமதியை தவிர்ப்போம் . அப்படி செய்தால் ஒருவேளை அவர்களுக்கு புத்தி வரும், இந்தியாவை அவர்கள் கட்டளையிட யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201712:02:55 IST Report Abuse
Venki இந்தியாவுக்கு சீன மீதெல்லாம் பயம் இல்லை இலங்கை மீது மட்டும்தான் பயம்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201710:34:38 IST Report Abuse
Agni Shiva அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தியா, தொடைநடுங்கியாக இருந்து கொண்டு இருந்திருந்ததினால் சீனாவிடமிருந்து அறிக்கைகள் ஒன்றும் வராமலே இருந்திருந்தது. இந்திய சீன போருக்கு பிறகு, சீனாவை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் ஒரு சீரான ரோட்டை கூட அமைக்க பயப்படும் நிலையில் இந்தியா இருந்திருந்தது. ஆனால் தற்போது நிலைமை அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ராணுவ சாதனங்களை விரைந்து கொண்டு செல்வதற்காக அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கும் மிக வலிமையான சாலைகள் அமைக்கப்படுகின்றன. கவனிப்பாரற்று கிடந்த விமான நிலையங்கள் புனரமைக்கப்டுகின்றன. விமானங்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருக்கின்றன. பெரிய ராணுவ விமானங்கள் அங்கு தரையிறக்கப்பட்டது உள்ளது. தற்போது ப்ரஹ்மஸ் ஏவுகணைகள் அங்கு நிறுவப்பட்டு உள்ளன. ராணுவ ஆராய்ச்சி சாலைகள் எல்லைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் சீனாவிற்கு பயத்தையும் ஆத்திரத்தையும் ஊட்டுவதால் இந்த மாதிரியான அறிக்கைகள் வாரம் ஒரு முறை எதிர் பார்க்கலாம்..ஆனால் மோடி அரசு இதை ஏறெடுத்தும் பார்க்காது..அது தான் தற்போதைய நிலை.
Rate this:
Share this comment
Cancel
பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா
21-மார்-201710:19:54 IST Report Abuse
பிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு எந்த நிலைமையிலும் மத்திய அரசு தயராக உள்ளது சீன தனது மிரட்டல்களை இந்தியாவிடம் காட்ட நினைத்தால் கடும் விளைவு சந்திக்கவேண்டியதுஇருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Ganesh Tarun - Delhi,இந்தியா
21-மார்-201710:04:46 IST Report Abuse
Ganesh Tarun சைனா அரசு திபெத்தையும், கேஷ்மீரின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அருணாசல பிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுகிறது. சைனாவுக்கு இந்தியாவை குறை சொல்ல என்ன உரிமை இருக்கிறது?
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
21-மார்-201714:22:07 IST Report Abuse
Agni Shivaநீங்கள் சொல்வது உண்மை. "மாமா" நேருவின் ஆட்சி காலத்தில் நடந்தவைகள் இவை. அப்போது இந்தியா தனது எல்லைப்புற பெரும் பகுதிகளை இழந்திருந்தது. அருணாசல பிரதேஷில் "அக்சய் சின் " என்ற 3 ல் ஒரு பெரும்பகுதியையும் பிடித்து வைத்துக் கொண்டு மீதி உள்ள அருணாசலை சொந்தம் கொண்டாடுகிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை