கானாவில் மரம் விழுந்து 20 மாணவர்கள் பலி| Dinamalar

கானாவில் மரம் விழுந்து 20 மாணவர்கள் பலி

Updated : மார் 21, 2017 | Added : மார் 21, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கானாவில் மரம் விழுந்து 20 மாணவர்கள் பலி

கின்டம்போ: கானாவின் கின்டம்போ அருவியில் பெரிய மரம் விழுந்ததில், 20 மாணவர்கள் பலியாகினர்.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் கின்டம்போ அருவி உள்ளது. சுற்றுலாத்தலமான இங்கு வந்த உள்ளூர் வென்கி உயர்நிலை பள்ளி மாணவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கினர். குளித்தும், நீந்தியும் மகிழ்ந்தனர். அப்போது விதி விளையாடியது. திடீரென புயல் காற்று வீச, பெரிய மரம் ஒன்று அருவியில் விழுந்தது. மரத்தின் அடியில் சிக்கிய மாணவர்களில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் பலியாகினர்.
இது குறித்து கானா தேசிய தீயணைப்புத் துறை செய்தி தொடர்பாளர் பில்லி அனக்ளேட் கூறுகையில், ''புயல் காற்றுடன் மழை பெய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. காடுகளில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில், பெரிய மரம் ஒன்று மாணவர்கள் மீது விழுந்ததால் தப்பிக்க வாய்ப்பு இல்லாமல் போனது. மரக்கிளைகளை வெட்டி பலரை காப்பாற்றினோம். சில சுற்றுலா பயணிகளும் காயம் அடைந்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை