வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற... கோவைக்கு தடைக்கல்லாகும் அதிகாரிகள்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

அ.தி.மு.க., ஆட்சியின் ஆறு ஆண்டுகளில், நிலம் கையகப்படுத்தப்படாத காரணத்தால், ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் கோவையில் முடங்கிக் கிடக்கின்றன. இனியாவது, இதற்கு முன்னுரிமை தந்து, திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.தொழில் வளர்ச்சியிலும், மக்கள் தொகையிலும் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி பெற்று வரும் கோவை நகரம், கட்டமைப்பு வசதிகளில், பின் தங்கிக் கொண்டே செல்கிறது. இதனால், வளர்ச்சியின் வேகம் மட்டுப்படுகிறது. சர்வதேச விமான தொடர்புகள், ரயில் போக்குவரத்து, புறவழிச்சாலைகள், சாலைகள் விரிவாக்கம், மக்கள் போக்குவரத்துத் திட்டங்கள் என, கோவை நகரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டிய பணிகள், ஏராளமாக இருக்கின்றன.

ஜால்ரா அதிகாரிகள்!சமீபகாலமாக, இவ்விரு அரசுகளும் கோவையின் மீது அக்கறை செலுத்தி, புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை; ஆனால், அதை நிறைவேற்றக்கூடிய திறமையான, நேர்மையான அலுவலர்கள் இங்கில்லை என்பது அப்பட்டமான உண்மை. இந்த விஷயத்தில், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க., அரசு, கோவை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்துக்கு, நல்ல அதிகாரிகளை நியமிக்காமல், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மட்டுமே நியமித்து வருகிறது.கடந்த 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின்னும், அதற்கு முன்னும் கோவைக்கென அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள், நிலம் கையகப்படுத்த முடியாத காரணத்தாலேயே கைவிடப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன. இதற்கு, பல உதாரணங்களை அடுக்கலாம்.

தேசிய நெடுஞ்சாலையான என்.எச்., 67, தற்போது நகரில் திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக கடந்து செல்கிறது. இதன் வழியாக, வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவே, காங்கேயம் பாளையத்திலிருந்து துடியலுார் வரையிலுமாக, என்.எச்.,67 பை-பாஸ் அமைக்க, மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், 601 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் வகுத்தது; மத்திய அரசு நிதி ஒதுக்கியும், நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை.

ஆபீஸ் இருக்கு; வேலை இல்லை!
விவசாயிகள் சிலர் நடத்திய போராட்டத்தைக் காரணமாகக் காண்பித்து, அந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தித் தர மறுத்ததால், அந்த பை-பாஸ் திட்டத்தையே மத்திய அரசு கைவிட்டு விட்டது. அடுத்ததாக, 2010ல், தி.மு.க., ஆட்சியின்போது, விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தித் தர அரசாணை வெளியிடப்பட்டு, அதற்காக ஓர் அலுவலகமும் அமைக்கப்பட்டது. சிறப்பு டி.ஆர்.ஓ., தலைமையில், தாசில்தார்கள், சர்வேயர்கள் நியமிக்கப்பட்டனர்.நில ஆர்ஜித நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடந்தன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அந்தப் பணி, அப்படியே முடங்கிப்போனது; ஆறு ஆண்டுகளாக ஒரு முன்னேற்றமும் இல்லை. அடுத்ததாக, பொள்ளாச்சி-போத்தனுார் அகல ரயில் பாதைப் பணி, பல ஆண்டுகளாக நடக்காமலிருக்கவும், நிலம் கையகப்படுத்தித் தராததே காரணமாயிருந்தது. கோவை நகரில், பல்வேறு ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்காமலும், துவங்கி முடியாமலிருக்கவும் நிலம் இல்லாததே முட்டுக்கட்டை.

ஆவாரம்பாளையம், தண்ணீர்ப்பந்தல், நீலிக்கோணாம்பாளையம் உட்பட நகரில், பல பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே, கட்டியிருக்கப்பட வேண்டிய ரயில்வே மேம்பாலங்கள், இன்று வரை பணியே துவங்கப்படாமலிருக்க, மாநில அரசால் நிலம் கையகப்படுத்தித் தராததே ஒரே காரணம். ஏற்கனவே துவங்கி, அரைகுறையாக நிற்கும் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பாலத்துக்கும் நிலத்தை கையகப்படுத்த முடியாததே, தடங்கலாகவுள்ளது.

கனவாகும் விரிவாக்கம்!
கடந்த 2011 நவ., 24ல், அன்றைய முதல்வர் ஜெ., அறிவித்த மேற்கு புறவழிச்சாலைக்கு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, 2016 மார்ச் 4ல் அரசாணை வெளியிட்டபின்பும், ஓராண்டாக ஒரு அடி நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. இதே நாளில் அறிவிக்கப்பட்ட உக்கடம் மேம்பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை, எளிதாக நிறைவேற்ற முடியும் என்ற நிலையில், அதைக் கூட இங்குள்ள மாவட்ட அதிகாரிகள் செய்து முடிக்கவில்லை.இதேபோன்று, காந்திபுரம் மேம்பாலம், தொலைநோக்கில்லாத வகையில், வடிவம் மாற்றப்பட்டதற்கும், சிலரது கட்டடங்கள் மற்றும் நிலத்தைக் காப்பதற்கு அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியே காரணம். இவற்றைத் தவிர்த்து, நகருக்குள் ரோடு விரிவாக்கம் செய்வதற்கு, பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. செல்வபுரம் போஸ்ட் ஆபீஸ், லங்கா கார்னர் பகுதிகளில் சில கட்டடங்களை அகற்றி, நிலத்தை எடுத்தால் மட்டுமே ரோட்டை அகலப்படுத்த முடியும்.

இதற்கான நில திட்ட வரைவு அனுப்பி, பல ஆண்டுகளாகியும், நிலத்தைக் கையகப்படுத்தித் தராமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. ஒட்டு மொத்தமாக, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடின்மையே, கோவையின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாகவுள்ளது. இனியாவது, இதை மாற்றிக் கொண்டு, நிலம் எடுப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டியது அவசர அவசியம்; அதற்கு, முதலில் தகுதியான அதிகாரிகளை நியமிக்க வேண்டியது, அரசின் முதற்கடமை.

அதையும் தடுப்பதில்லை!
அரசுக்குத் தேவையான நிலங்களை, தனியாரிடமிருந்து எடுக்க வேண்டிய கடமையைச் செய்யாத அதிகாரிகள், வருவாய்த்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்க, தடையின்மைச் சான்றுகளை வாரி வழங்கி வருகின்றனர். இதே நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், தனியாருக்குக் குத்தகைக்குத் தரப்பட்டு, கேளிக்கை விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்