ஆன்-லைனில் கட்டட வரைபட அனுமதி! லஞ்சத்தை ஒழிக்க மாநகராட்சி முயற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை : இடைத்தரகை ஒழிக்கவும், விண்ணப்பதாரர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு நடையாய் நடப்பதை தவிர்க்கவும், ஆன்-லைனில் கட்டட வரைபட அனுமதி வழங்கும் திட்டத்தை மேம்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
வீடு அல்லது ஏதேனும் கட்டுமானம் கட்ட வேண்டுமெனில், வரைபட அனுமதி பெற, மாநகராட்சி நகரமைப்பு பிரிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இடத்தை, உதவி நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பார். நகரமைப்பு அலுவலர் பரிந்துரைக்கு பின், 2,000 சதுரடிக்குள் என்றால், துணை கமிஷனர் அனுமதி கொடுப்பார். 4,000 சதுரடி என்றால், கமிஷனர் அனுமதி கொடுப்பார். அதற்கு அதிகமான சதுரடியில் கட்டடம் கட்டுவோர் உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்.
விதிகளுக்கு உட்பட்டு... இத்தகைய நடைமுறையில், பல மேஜைகளில் விண்ணப்பங்கள் தேங்குகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சத்தை எதிர்பார்த்து, விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்படுகின்றன. முறைகேடு நடப்பது தெரியவந்ததும், 'ஆன்-லைனில்' அனுமதி கொடுக்கும் திட்டத்தை, 2011ல் அப்போதைய மாநகராட்சி கமிஷனர் லதா, நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
உரிமம் பெற்ற கட்டட சர்வேயர்களிடம் பொதுமக்கள் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அவர்கள், அவ்விண்ணப்பத்தை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வர். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மூலமாக, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மாநகராட்சி விதிமுறைக்கு உட்பட்டு அவ்விண்ணப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.இல்லையெனில், எதற்காக நிராகரிக்கப்படுகிறது என காரணத்தை குறிப்பிட்டு, திருப்பி அனுப்பி விடும். குறையை நிவர்த்தி செய்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்கப்படும் பட்சத்தில், வரைபட அனுமதிக்கான கட்டணத்தையும் ஆன்-லைனில் செலுத்த வேண்டும். பின், சம்பந்தப்பட்ட கட்டட சர்வேயர், அனைத்து ஆவணங்களுடன் கோப்பு வடிவில் விண்ணப்பத்தை நகரமைப்பு பிரிவில் ஒப்படைப்பார். மீண்டும் பழைய நடைமுறையில், உதவி நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தபின், உயரதிகாரிகள் அனுமதி வழங்குவர்.

'நடை'யும் குறையும்!'கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது; கோப்பு வடிவிலும் கையாளப்படுகிறது. இருவித நடைமுறையால், விண்ணப்பங்கள் தேக்கம் அடைகின்றன; அதிகாரிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வரை சில மேஜைகளில் கோப்புகள் முடங்குகின்றன. அனுமதி பெற, இரு மாதங்கள் வரை காத்திருப்பதோடு, மாநகராட்சி அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியிருகிறது' என, விண்ணப்பதாரர்கள் புலம்புகின்றனர்.இதையடுத்து, 'ஆன்-லைன்' நடைமுறையை மேம்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் பட்ஜெட்டில், 20 லட்சம் ரூபாயை ஒதுக்க உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இடைத்தரகை ஒழிக்கவும், விண்ணப்பதாரர்களின் அலைச்சலை போக்கவும், கட்டட வரைபட அனுமதி நடைமுறை அனைத்தும் 'ஆன்-லைனுக்கு' மாற்றப்படும். வங்கி நடைமுறையில் எஸ்.எம்.எஸ்., வருவதுபோல், எந்த மேஜையில் கோப்பு இருக்கிறது என்பது தொடர்பாக, விண்ணப்பதாரர் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுமதி உத்தரவு கடிதமும் ஆன்-லைனில் விண்ணப்பதாரர் மொபைல் எண்ணுக்கோ அல்லது இ-மெயில் முகவரிக்கோ அனுப்பப்படும். ஒளிவு மறைவின்றி, எதையும் எதிர்பார்க்காமல், கட்டட வரைபட அனுமதி கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்