சூலூர் எம்.எல்.ஏ., பின்வாங்கியது ஏன்?| Dinamalar

சூலூர் எம்.எல்.ஏ., பின்வாங்கியது ஏன்?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சூலூர் எம்.எல்.ஏ., பின்வாங்கியது ஏன்?

கோவை: குவாரி பிரச்னையை காரணம் காட்டி, சூலூர் தொகுதியில் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., கனகராஜ், திடீரென, அ.தி.மு.க., தலைமைக்கு எதிராகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கொந்தளித்தார்.

மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் குவாரியை உடனடியாக மூட வேண்டும். இல்லையென்றால், அ.தி.மு.க.,வில் சசிகலா அணியில் இருக்கும் தான், பன்னீர்செல்வம் அணிக்குச் சென்று விடுவேன் என்று, கட்சியின் துணைப் பொதுச் செயலர் தினகரனையும்; முதல்வர் பழனிச்சாமியையும் நேரடியாக மிரட்டினார்.


சமாதானம்:


இது, தினகரனை ரொம்பவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனை அழைத்துப் பேசிய தினகரன், உடனடியாக, கனகராஜை சமாதானப்படுத்துங்கள். இல்லையென்றால், இவரைப் போலவே மற்ற எம்.எல்.ஏ.,க்களும் ஏதாவது மக்கள் பிரச்னையை வைத்து, கட்சித் தலைமையை மிரட்டத் துவங்கி விடுவர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, எம்.எல்.ஏ., கனகராஜை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், குவாரி பிரச்னை குறித்து, அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், என்னிடம் சொல்லியிருக்கலாமே. அதை ஏன் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்ல வேண்டும். இப்போது இருக்கும் சூழலில், நீங்கள் அமைதியாக இருந்து, சசிகலா அணியிலேயே இருந்தால், விரைவில் வர இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் உங்களையும் அமைச்சராக்க வாய்ப்புள்ளது என்று கூறியிருப்பதோடு, அரசுத் தரப்பில் நிறைய உதவிகள் செய்து கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
21-மார்-201714:36:50 IST Report Abuse
R.Selvaperumal என்ன கருமமோ தெரியல......இன்னும் எவ்வளவு நாள் இதெல்லாம் பார்க்கணும்னு தலைல எழுதிருக்கோ .....
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
21-மார்-201713:34:29 IST Report Abuse
G.Krishnan இப்படியே எல்லா எம் எல் ஏ க்களும் மிரட்டினால் . . . . .எல்லா எம் எல் ஏக்களுக்கும் மந்திரி பதவி கொடுக்க முடியுமா . . . . .சமாதான படுத்த வேறுமுறைகளை பயன்படுத்துங்கள் . . . .இல்லை என்றல் சமாளிப்பது கடினம் .. .என்னமாதிரியான அரசியலோ . . கொடுமை ..கன்றாவி . . . . . .சகிக்கமுடியலை
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
21-மார்-201711:29:55 IST Report Abuse
Aboobacker Siddeeq நல்ல பெயர் எடுத்தும் , தொகுதிக்கு நல்லது செய்தும் , சிறந்த சட்டசபை உறுப்பினர் எடுத்துதான் மந்திரி பதவி பெறமுடியும் என்கிற காலம் எல்லாம் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. இனி தலைமையை மிரட்டினால் தான் பதவிகளை பெறமுடியும் என நன்றாக காய் நகர்த்தி இருக்கிறார்.. கடந்த தேர்தலில் செலவழித்த பணத்தை எப்படி சரி செய்வது?
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
21-மார்-201711:08:57 IST Report Abuse
Swaminathan Chandramouli பன்னீர் செல்வம் அவர்களே இந்த மாதிரியான மதில் மேல் குரங்குகளை நம்பாதீர்கள் .மதில் சுவற்றின் எந்த பக்கத்தில் இருந்து வாழைப்பழம் தெரிகிறதோ அந்த பக்கம் தாவிவிடும் . கூவத்தூர் கூட்டத்தினிடம் சாக்கிரதையாக இருங்கள்
Rate this:
Share this comment
Cancel
gsik - Chennai,ஐஸ்லாந்து
21-மார்-201709:55:16 IST Report Abuse
gsik ஏன்யா இப்படி வாய் கிழிய பேசுறீங்களே . எதுக்கு எல்லோரையும் கருவறைக்குள் எல்லோரையும் அனுமதிக்க வேண்டும். நீங்க வாய் கிழிய கத்தினீங்களே சபாநாயகர் இருக்கையில் உட்காரும் போது. அதில் என்ன புனிதம் காண்கிறீர்களோ அது போல் தான் இதுவும்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மார்-201709:52:50 IST Report Abuse
D.Ambujavalli கூவத்தூர் போகும் முன்னாள் குவாரிகள் சூலூரில் இல்லையா? பாக்கியை வசூல் பண்ண இது ஒரு டெக்னிக். மற்றவர்களும் தங்கள் தொகுதி குறைகளை புதிதாக பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து நிலுவையை வசூலிக்க கிளம்பிவிடுவார்கள். மற்றபடி தொகுதி இருக்கும் திசை வெற்றிக்குப்பின் மறந்தே போயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மார்-201709:27:54 IST Report Abuse
Venki இது ஒன்னும் குவாரிக்காக அவன் வரிந்து கட்டிக்கொண்டு பேசவில்லை கூவத்தூரில் பேசப்பட்ட நிலுவைத்தொகையும் பதவியையும் துரிதப்படுத்தி பெற விட்ட அரை கூவல் பிணம் (பணம்) தின்னும் கழுகுக்கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
21-மார்-201708:38:05 IST Report Abuse
MuraliRangachari suit case gone to sulur
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
21-மார்-201708:06:54 IST Report Abuse
Rajendra Bupathi செட்டில்மெண்டு ஓவர்?
Rate this:
Share this comment
Cancel
gsik - Chennai,ஐஸ்லாந்து
21-மார்-201706:54:07 IST Report Abuse
gsik நீங்கள் சொல்வது போல் இதில் ஏதோ ஒரு நெருடல் இருக்கிறது. தனுஷின் இன்றைய பெற்றோர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரிய வில்லை. இவர் தான் இவருடைய உண்மையான பெற்றோர்கள் என்றால் இந்த கேஸ் இவ்வளவு தூரம் வந்திருக்காது. மரபு அணு பரிசோதனையில் எல்லா உண்மையும் வெளியில் வந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.